இன்று ஒரு குறள் !

சனி, ஏப்ரல் 26, 2008

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு குடியானவனுக்கு இரு மனைவியர் இருந்தனராம். அந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாதாம்.

தான் எதையும் கணவருக்கு சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தைவிட, மற்றவள் மட்டமாக செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்।

தன்னைவிட அடுத்தவளைப்பற்றியே எப்போதும் சிந்தனை செய்துக்கொண்டிருப்பர்।

"அடியேய் ஏன்டி, இப்படி சாதத்தை கொழைச்சி வடிச்சிருக்கே? அவருக்கு ஒடம்புக்கு ஆகாதடி, விடியாமூஞ்சி" அப்படினு ஒருத்தி கேட்டா,

அடுத்தவள், "என் சாதம் நல்லா தாண்டியிருக்கு கூறுகெட்டவளே, நீதான் 2 வாரம் முன்னாடி சாதம் கொழைச்சி வடிச்சியிருந்தவ" என்று பதிலலிப்பாள்

இப்படி புருஷனுக்கு நல்ல மாதிரி செய்யனும் என்பதைவிட மற்றவள் செய்தது மட்டமானதாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக வாழ்ந்து வந்தார்களாம்।

அது சரி எதுக்கு இந்த கதையினு கேக்கிறிங்களா?

காலையிலே News படிக்கும்போது ஏதோ ஞாபகம் வந்திச்சி, காரணம் தெரியல।




4 கருத்துகள்:

  1. பெயரில்லா4/26/2008 10:59:00 AM

    //அந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாதாம்//

    எப்பதான் ஆயிருக்கு இப்பமட்டும் ஆகாம போக...

    பதிலளிநீக்கு
  2. வாங்க விக்னேஸ்வரன்,

    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    //அந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாதாம்//

    "எப்பதான் ஆயிருக்கு இப்பமட்டும் ஆகாம போக..."

    அதையேதான் நானும் சொல்றேன்.
    எப்போதுமே ஆகாதாம்னு :-)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4/27/2008 03:10:00 PM

    உங்களுக்கு எத்தன பொண்டாட்டி

    பதிலளிநீக்கு
  4. சத்தியமா ஒன்னுதான் விக்னேஸ்வரன்

    :-( :-( :-(

    பதிலளிநீக்கு