இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஜூன் 08, 2008

லொள்ளு பாண்டி

லொள்ளு பாண்டி



இ.ச.ம., கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பேச்சு :
அரசியல் என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாகக் காணப்படும். உள்ளே சென்ற பின் எத்தனையோ பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனக்கு பதவி மீது ஆசை கிடையாது. வேறு கட்சிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டேன். தேர்தலில் எனது கட்சிக்கு பெரும் பான்மை மெஜாரிட்டி கிடைத்தாலும் முதல்வராகப் பதவி ஏற்க மாட்டேன்.
லொள்ளு பாண்டி: ஆஹா, என்ன பெருந்தன்மை !
அப்படியே பாராளுமன்ற தேர்தலில் உங்க கட்சி பெரும்பான்மை பெற்றாலும் பிரதமரா பதவி ஏற்க மாட்டேன்னும் சொல்லிட வேண்டியது தானே?எவன் கேள்வி கேக்கப்போறான்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு :
நான் ஏதோ இந்த ஆட்சியில் மட்டும் தான் போராட்டம் நடத்துகிறேன் என்று யாரும் கருதக் கூடாது. அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து ஆண்டு காலமும் போராட்டம் நடத்தியுள்ளேன். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. தந்தை வேந்தராகவும், மகன் இணை வேந்தராகவும் வலம் வருகின்றனர்இது ஜனநாயக நாடா?
லொள்ளூ பாண்டி:
அதானே! இது என்ன ஜனநாயக நாடா ?ஜனநாயக கட்சினாலாவது தலைவரு, கட்சியிலே உறுப்பினரா கூட இல்லாத மகனை ஒரே நாளிலே கொல்லைப்புற வழியா பாராளுமன்றம் அனுப்பி மந்திரி ஆக்கலாம். ஒரு பய கேக்க மாட்டான்.
முதல்வரின் பிறந்த நாள் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான்:
சில நட்சத்திரங்கள் ஆட்சிக்கு வர நினைக்கின்றன. ஆனால் உதயசூரியன் பிரகாசிக்கும் வரை நட்சத்திரங்கள் வருவதில்லை
லொள்ளூ பாண்டி: ஆமா, இல்லையா பின்னே. ஆனா இன்னொரு பாதியை சொல்லலியே நீங்க , சரி பரவாயில்லெ நானே முழுமை செய்றேன்.
"உதயசூரியன் பிரகாசிக்கும் வரை நட்சத்திரங்கள் வருவதில்லை அதே போல சந்திரன் பிரகாசித்தவரை உதயசூரியன் வரவும் இல்லை"
என்ன ஓகே வா?
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் :
பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதோ, அதேபோலத்தான் 1998ம் ஆண்டு ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியது
லொள்ளூ பாண்டி: பாவம் சார் நீங்க , எவ்வளவு சின்சியரா இருக்கீங்க.. நாட்டுக்குள்ளே 2 மாநிலத்துக்கு இடையிலே பிரச்சினை என்றதும் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கெங்கெய்யோ அலைஞ்சி திரிஞ்சி இவ்வளவு காலம் செலவு பண்ணீ இந்த பைலை கண்டுபிடிச்சி இருக்கீங்கன்னா உங்களை பாராட்ட வார்த்தையே வரலை சார்.
நல்ல வேளை பா..க ஜெயிச்சது, பைலும் கிடைச்சது.
ஒரு வேளை பா.ஜ.க தோத்து, காங்கிரஸ் ஜெயிச்சிருந்தா இன்னுமில்ல தேடிக்கிட்டு இருந்திருப்பீங்க.

தண்ணீருக்காக சண்டை போட விரும்பவில்லை-துரைமுருகன்
லொள்ளூ பாண்டி: ஆமா, ஆமாஇல்லியா பின்னே.
சண்டை போடுறதும், கூட்டணியிலே பங்கு கொள்ளாம வெளியிலிருந்து ஆதரவு என மிரட்டுறதும், இன்னும் இத்யாதி, இத்யாதி எல்லாமே பதவிக்காக மட்டும்தானே !


நடிகை மனோரமா பேச்சு :
முதல்வர் கருணாநிதிக்கு கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். யாருக்குமே கிடைக்காத அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருக்கு எப்படி இந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. அவரை மாதிரி நினைவாற்றல் உலகத்தில் வேறு யாருக்குமே இருக்க முடியாது. இந்த வயதிலும் எவ்வளவோ பிரச்னைகளுக்கு மத்தியில் நாட்டைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் நூறாண்டு வாழ்வார்.


லொள்ளூ பாண்டி: என்ன ஆச்சி , உங்களுக்கு என்ன ஆச்சு ? வார்த்தையெல்லாம் தடுமாறுது . சரி , நான் சரி பண்றேன்.
இந்த வயதிலும் நாட்டில் எவ்வளவோ பிரச்னைகளுக்கு மத்தியில் தன் வீட்டைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் . அவர் நூறாண்டு வாழ்வார்.
என்ன கரெக்டா சரி பண்ணிட்டேனா ?

தினமலர் செய்தி:

பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ், பா, கட்சிகளுக்கு எதிராக பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் சரத்குமார், கார்த்திக் கட்சி உட்பட ஒன்பது கட்சிகளுடன் "மெகா' கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இந்த புது கூட்டணியை உருவாக்கும் பணிகள் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

லொள்ளூ பாண்டி:
ஏன் மேடம் விஜயகாந்தை விட்டுட்டீங்க ?
, அவரையும் கூட்டணியிலே சேர்த்தா தினமும் உங்களையே ஊத்திக்கொடுக்க சொல்வாரோனு பயமா.
சரி , இருக்கட்டும் இருக்கட்டும் .