இன்று ஒரு குறள் !

திங்கள், ஜனவரி 16, 2012

நக்கீரனின் பீஃப் கடை


பத்திரிக்கை உலகின் மஞ்சள் பத்திரிக்கை நக்கீரன் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தான். அதன் சமீபத்திய கிசுகிசு ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டார் என்பது தான். அதை எம்ஜிஆர் தன் கட்சியினரிடம் சொன்னதாக ஜெயலலிதாவே மற்றவர்களிடம் சொன்னதாம்.

(இது எப்படி நக்கீரனுக்கு தெரிந்தது நித்தியானந்தா பெட்ரூமில் காமரா வைத்தது போல் போயஸ்கார்டனிலும் வைத்திருப்பாரோ)

அதை சொன்னதாக சொல்லப்பட்ட எம்ஜிஆரும், கூட இருந்து கேட்டதாக சொல்ல படும் எஸ்டிஎஸ், கேஏகே ன்னு யாரும் உயிரோடு இல்லை. இருக்கும் ஒரே நபரான பொன்னையனும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்னும்போது இது இட்டு கட்டி பத்திரிக்கையை விற்கும் தந்திரம் தானே.



அடுத்தவன் வீட்டு பெட்ரூமை எட்டி பார்ப்பதே நாகரீகமற்ற செயல் இதில் நக்கீரன் தான் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதை விற்று காசாக்கியும் விடும் அதையும் நித்தியானந்தா விவகாரத்தில் பார்த்தோமே

என்ன சாப்பிடுவது எதை சாப்பிடுவது என்று தீர்மானிப்பது தனிமனித உரிமை ஆதலால் உண்மையிலேயே ஜெ மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்தாலும் அதை கேலி செய்யும் பாணியில் நக்கீரன் எழு்தியது குற்றமே


இந்த செய்தியை தாங்கி நக்கீரன் வந்தாலும் வந்தது அதிமுகவினருக்கு நக்கீரன் அலுவலகத்தை தாக்கி தங்களது நீண்ட நாள் வெறியை தணித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்ப காரணியை தந்தது்.

நக்கீரன் அலுவலகத்தை தாக்கியதோடு அல்லாமல் அப்பாவி பொது மக்களையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள். மற்றும் இதில் சம்பந்தபடாத மற்ற பொதுமக்களின் வியாபார வணிகங்களையும அடைக்க செய்து அவர்களின் வயிற்றில் அடித்து அராஜகம் செய்திருக்கின்றனர்.



தங்கள் தலைவியிடம் விசுவாசத்தை காட்டி நல்ல பேரு வாங்க (பின் நாளில் பலன் தருமே ) அணி அணியாய் நக்கீரன் அலுவலகம் வந்து அராஜகம் செய்து விட்டு போயிருக்கிறார்கள்

ஆட்சியும் அவர்களது,போலீஸ் மந்திரியும் அம்மாதான் அப்புறம் கேட்கவா வேணும் அவர்கள் தைரியத்திற்கு்.

கிராமங்களில் கல்யாண வீட்டில் மொ்ய் கொடுத்து விட்டு மைக்கில் அதை அறிவிக்கிறார்களா என்று பார்ப்பார்களே அதைப்போல இங்கே கலவரம் செய்து விட்டு அது போயஸ்கார்டனில் பதிவாகுதான்னு பார்த்திருப்பார்களோ என்னமோ.

இதை கண்டும் காணாமல் இருந்த ஜெயின் போக்கும் மிகவும் கண்டிக்க தக்கதே.



செய்தி வெளியானதும் அதை கண்டித்து மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாம். பிறகு நக்கீரன் மேல் வழக்கு தொடுத்திருக்கலாம். இப்படி செய்திருந்தால் மக்கள் மனதில் ஜெ எங்கேயோ போயிருப்பார்.

 ஆனால் அந்த அறச்செயலெல்லாம் ஜெவிடமோ கலைஞரிடமோ எதிர் பார்ப்பது நம் தவறுதான்

ஆனாலும் இதில் ஒரு பெரிய ஆறுதல் எவரின் உயிரும் பறிக்கப்படவில்லை அதாவது எந்த அப்பாவியும் எரிக்கப்படவில்லை. அந்த வரையில் திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.


வாழ்க ஜனநாயகம் !

ஞாயிறு, ஜனவரி 15, 2012

முல்லை பெரியாறும், தடம் மாறிய தமிழனின் இயல்பும்

முன்குறிப்பு :

நேரமின்மையின் காரணமாக வலைப்பக்கம் அடிக்கடி வர இயல்வதில்லை இப்படி் எப்பொழுதாவது கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஏதேனும் மனதில் பட்டதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
[ மனசாட்சி : ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இவர் என்ன நினைக்கிறார்னு தான் உலகமே பார்த்திட்டிருக்கு செரங்கு புடிச்சவன் கையி சொறியாம இருக்குமா அது போல வெரல் அரிப்பு தாங்க முடியாம கீ போர்ட் தட்ட வந்திட்டு பில்டப் கொடுக்கிறத பாரூ.... ]


பெரியாறும், தடம் மாறிய தமிழனின் இயல்பும்




கடந்த ஆண்டு முடியும் தருவாயில் என்னை வியக்க வைத்த விஷயம், முல்லை பெரியாறு பிரச்சினைக்காக பொது மக்கள் தாங்களாகவே போராட்டத்தில் குதித்தது.

பொதுவாக இந்த மாதிரி அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு போன்ற பிரச்சினைகளின் போது, அரசியல் கட்சிகள்தான் போராட்டங்கள் நடத்துமே அன்றி பொது மக்கள்களி்ன் கவனமெல்லாம் அவரவர்களின் அன்றாட வேலைகளிலேயே இருக்கும்

அப்படி பட்ட அவர்களே களத்தில் நேரடியாக இறங்குகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அரசியல்வாதிகளிடம் அரசுகளிடமும் நம்பிக்கை இழந்து இருப்பார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.

ஏற்கனவே தனித் தமிழ்நாடு, தமிழ் தேசியம் என்று பிரிவினை வாதம் பரவலாக பேசப்பட்டு வரும் கால நிலையில், பொது மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் மீதே நம்பிக்கை இழப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. மண்ணு மோகன் அரசு முழித்து கொண்டால் சரி.

வழமை போலவே அப்பாவி தமிழ் மக்கள் அண்டை மண்ணில் தாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த முறை தாக்கிய இடம் கேரளா, தாக்கியவர்கள் மலையாளிகள். தாக்குதலுக்கான காரணம் முல்லை பெரியாறு .

[ கர்நாடகத்தினர் தங்கள் முறை எப்போது என்று காத்துக் கொண்டிருப்பதாக கேள்வி :( ]

ஆனால் பதிலுக்கு வழமையை மீறியதாய் இந்த முறை தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.



உம்மன்சாண்டியோ உம்முன்னு உறுமியிருகிறார்

தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுவதை எதிர் பார்க்க வில்லையாம்.

தமிழன் எப்பவுமே குட்டை வாங்கிகிட்டே இருப்பானுங்கன்னு அவருக்கு நெனப்பு போல...

எப்படி அப்பாவி தமிழர்கள் அடி வாங்குவதில் உடன்பாடு இல்லையோ அதேபோல் அப்பாவி மலையாளிகள் அடி வாங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அடிக்க வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யும் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, ஜார்ஜ் குரியன் பொன்றவர்களை அடிக்கலாம் இங்கு பிழைப்புக்கு வந்திருக்கும் டீக்கடை நாயர் என்ன செய்வார்.

 அங்கு பிழைப்புக்கு போன குப்பனையும் சுப்பனையும் அடித்தவர்கள் கேரளா அரசியல் ரவுடிகள். அதற்கு எதிர் வினையாக இங்கு நாயரை அடித்தவர்கள் சில அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் என்று பத்திரிக்கையில் வந்தது.



ஆனால் இதை இப்படியே கண்டும் காணாமல் மத்திய அரசு விடுமே என்றால் நேரடியாகவே குப்பனும் நாயரும் நீயா நானா என்று மோதிக்கொள்ளும் சூழல் எழும் அபாயம் உண்டு

அதன் பிறகு இந்திய ஒருமைப்பாடு கிழிந்த கோவணம்தான்

இப்போதாவது மண்ணு மோகன் அரசு முழித்து கொள்ளுமா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல் படுத்த கேரளாவை வற்புறுத்துமா ?இல்லை ஓட்டுக்காக ஒருமைபாட்டையே அடகு வைக்குமா?

குனிந்திருந்த தமிழன் நிமிர தொடங்கி விட்டான் ஜாக்கிரதை!