இன்று ஒரு குறள் !

திங்கள், நவம்பர் 07, 2011

ஜெ வின் நூலாயுதம்























ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியிலே மனுஷனையே கடிச்ச மாதிரி ன்னு  ஒரு பழமொழி எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.

அது போல நம்ம முதல்வர் அங்க சுத்தி இங்க சுத்தி, நம்ம அடி மடியிலே கை வைக்கிறாங்களே....
அதாங்க அண்ணா நூற்றாண்டு  நூலகத்தை மருத்துவமனையா மாத்துறதை தான் சொல்றேன்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பது போல .....

நம்ம கலைஞரு குடும்ப ஆக்ரமிப்பு கூட்டு கொள்ளையிலேருந்து  தப்ப தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைச்ச ஒரே மாற்றா இருந்தது இந்த அம்மாதான்.

அவுங்க முன் வரலாறு மோசமா இருந்தாலும் சரி இவ்வளவு நாள் பதவி இல்லாம இருந்த இந்த அம்மா மனம் வருந்தி திருந்தியிருக்கும்னு

இரட்டை இலைக்கு ஓட்டை குத்து, குத்துன்னு குத்தி ஜெயிக்க வச்சா மக்களை இப்ப அந்த அம்மா  மொத்து, மொத்துனு மொத்துது.

பதவிக்கு வந்த உடனேயே தலைமைசெயலகத்த மாத்துன்னு சொன்னாங்க ...

அதுக்கு, பணிகள் முழுமை அடையாமல் அவசர கதியிலே திறந்திட்டாங்கன்னு காரணமும் சொன்னாங்க

  நாமளும் நியாயந்தானய்யா இதுன்னு மவுனமா இருந்துட்டோம் !

அடுத்து சமச்சீர் கல்வியிலே கை வச்சாங்க.

அப்பவும் சில அறிவாளிகள், "புத்தகங்கள் சரியில்ல ஒரே திமுக நெடி அதான்"னாங்க நாமளும் எது சரின்னு தெரியாம கொழம்பி போய் நின்னோம்

இப்ப வைச்சாங்க பாருங்க ஒரு சூப்பர் ஆப்பு.....
இத எந்த பயலும் நியாயபடுத்த முடியாது.

தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கிற புத்தகங்களின் ஆலயமாய் இருக்கிற ஒரு நூலகம் - தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் - போன ஆட்சியில் கலைஞர் கையால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் (இப்ப புரிஞ்சி இருக்குமே உண்மையான காரணம்) - அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

அந்த நூலகத்தைதான்  மூடறாங்கலாம் ஏன்னா புள்ளைங்களுக்கு ஆசுபத்திரி கட்ட தமிழ்நாட்டுலே வேற இடமே கிடைக்கலையாம்.

இப்ப கூட சில அறிவாளிங்க சொல்லலாம், "ஏம்பா அறிவை வளர்க்க படிச்சி டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கப்போற! அவனவன் பரம்பரையை ஆராய்ச்சி பண்ணி உங்களுக்கு மேட்ச் ஆவுற அறிவாளியோட டி என் ஏ எடுத்து உனக்கு வச்சி உட்டா 2 வாரத்திலே  நீ அறிவாளியாய் ஆய்டப்போறே பிறகு எதுக்கு நூலகம் அது இதுன்னு.அதான் அம்மா இடிக்கிறாங்கன்னு"

கேழ்வரகிலே  நெய் வடியுதுன்னா கேக்குறவன் என்ன கேணையாம்பாங்க ?
  நாம  என்னான்னுதான் நமக்கே தெரியுமே!
இதை அடுத்தவன் சொல்லனுமாக்கும்.