இன்று ஒரு குறள் !

சனி, ஏப்ரல் 19, 2008

நான் அவன் இல்லை - கலைஞர்.



'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்: கருணாநிதி

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில பத்திரிக்கைகள், எழுதி வருகின்றன. நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைப் பொறுக்க முடியாமல்தான் இப்படி என் மீது அவதூறை வாரி வீசுகின்றனர்.
இந்த முதல்வரிடம் முப்புரி நூல் இல்லை, நான் பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. பிரம்மனின் காலிலிருந்து உதித்த சமூகத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன். அதனால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.
நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தினால்தான், சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள், அரசின் சாதனைகளை மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே எனக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.
நிக்சனும், ஹெக்டேயும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டுக் காரணமாகத் தான் பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் தமிழகத்தில் இரு அதிகாரிகளுக் கிடையே தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து என்னை பதவி விலக சொல்வது விஷமத்தனமானது.
என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த போதிலும், இப்படி கூறுவது சரியல்ல.
நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும், விசாரணைக்கு நீதிபதியை நியமித்த பின்னரும் ஒரு வார இதழ் என்னை விமர்சித்து எழுதியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
:-) :-) :-) :-) :-)

2 கருத்துகள்:

  1. //நான் அவன் இல்லை - கலைஞர். //

    தலைப்பில் சிறு தவறு !

    "நான் அவா இல்லை - கலைஞர்"

    என்று இருக்க வேண்டும்,

    நீங்கள் இங்கே வெளி இட்டு இருப்பது தெரியாமல் நானும் எனது பதிவில் இதே செய்தியை வெளி இட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்.


    "நீங்கள் இங்கே வெளி இட்டு இருப்பது தெரியாமல் நானும் எனது பதிவில் இதே செய்தியை வெளி இட்டுவிட்டேன்"

    உண்மைச்செய்தியை
    எத்தனை பேர் வெளியிட்டாலும் என்ன? தவிர ஒத்த சிந்தனையுடையோர் கருத்து, ஒத்திருப்பதும் விந்தையல்ல.


    "தலைப்பில் சிறு தவறு !

    "நான் அவா இல்லை - கலைஞர்"

    என்று இருக்க வேண்டும்,"


    :-) :-) :-)

    பதிலளிநீக்கு