ரஜினி மன்னிப்பு கேட்டார் கர்நாடக மக்களிடம்.
இன்றைய ஹாட் டாபிக்ஸ் இதுதான்.இது பற்றிய விமர்சனங்கள் எல்லா மீடியாக்களிலும் இருந்தாலும் நம் வலையுலகில் கொஞ்சம் அதிகம்தான்.
அப்புறம் நம்ப கருத்தை பதிவு பண்ணலேனா எப்படி, அதுக்குதான் இந்த இடுகை கொஞ்சம் மனசாட்சியோடு.
நான் ஒரு படத்தில் பார்த்திருக்கிறேன். படம் பெயர் ஞாபகமில்லை.
ஒருவனை விசாரணைக்கு காவல் நிலையம் கொண்டு வந்திருப்பார்கள். திடீரென்று இரண்டு பேர்கள் போகிற போக்கில், ஏன்? என்ன? என்று கேள்வி கேட்காமலேயே இவனை அடித்து விட்டு செல்வார்கள்.
அதற்கு அங்குள்ள போலீஸ்காரர் சொல்வார் இவர்கள் டுட்டி முடிந்து வீட்டுக்கு போகும் போலீஸார் என்று.
சிறிது நேரத்தில் இன்னும் சில பேர் வந்து அடித்துவிட்டு போவார்கள் அதற்கு இவர் சொல்வார் இவர்கள் இப்பத்தான் டூட்டி ஆரம்பிக்க வந்திருப்பவர்கள்.
அதற்கு இவனோ, "ஏண்டா, டூட்டி முடிச்சவனும் அடிக்கிறான், ஆரம்பிக்கிறவனும் அடிக்கிறான். அடிக்கிறது தான் அடிக்கிறீங்க என்ன ஏதுனு விசாரிச்சுட்டு எதுக்குனு சொல்லிட்டு அடிக்க மாட்டீங்கலாடா" என்று.
இப்ப எனக்கு அந்த சம்பவம்தான் ஞாபகம் வருது.
அன்று நடந்தது என்ன? கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.
கர்நாடகத்தில் தேர்தல் வந்த நேரம் அதனால் அங்குள்ள அரசியல்கட்சிகள் மக்களை கவர போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்தன.
அதில் ஒரு அரசியல்வாதி மக்களின் சென்சிடிவ் மேட்டரான நதி நீர் பிரச்சினையை கையில் எடுத்ததுமல்லாமல், ஒக்கனக்கலுக்கு நேரில் வந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழத்திற்கு தர மாட்டோம் என முழங்கி இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார்.
எதிர்பார்த்தது போலவே அதற்கு எதிர்வினை ஆதரவுவினையென்று விவாதங்களும், கூடவே வன்முறையாளர்களின் கைங்கர்யத்தினால் வாகனங்களும் கொடும்பாவிகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.
மூத்த அரசியல்வாதியும், ஒரு மாநிலத்தின் முதல்வருமான கலைஞர் கூட,"என் எலும்பை உடைத்தாலும் ஒக்கனேக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்" என் போர்ப்பரணி பாடினார்.
தமிழ்நாடும் கர்நாடகமும் இறுதிப்போருக்கு தயாராகி விட்டது போன்றே ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டது.
ராமநாராயணின் ஏற்பாட்டினால் கலையலகத்தினரைம் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு செய்யப்பட்டது.
ஒக்கனேக்கல் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து திரையுலகத்தினரின் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதுவும் எப்படி?
இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கர்நாடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்த்திரையுலகில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும்.
தவறினால், இனி தமிழ்த்திரைப்படத்தில் நடிக்க முடியாதபடி யாரும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போதே இது ரஜினிக்கு வைத்த வலை என்று எல்லோருக்குமே தெரிந்தது.
{(ஒரு சின்ன Flash Back
இதே போல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே திரையுலகத்தினர் இதே கர்நாடகத்தைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது,
ரஜினி கலந்துக்கொள்ளாது தவிர்த்து பல விமர்சங்களுக்கு ஆளாகி,
அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
அப்போது இதில் நம் உள்மாநில அரசியலும் சேர்ந்து விளையாடியது.)]
உண்ணாவிரதம் தொடங்கியது.
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை தூக்கியடிக்கும் வகையில் ரஜினி அந்த உண்ணாவிரதத்தில் பங்கு கொண்டார்(அப்படி அவர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்ப அடித்த கும்மிகள் அப்போதே அடிக்கப்பட்டிருக்கும்)
அந்தக்கூட்டத்தில் கூட சில நடிகர்கள் தங்களது பேச்சாலும் செயலாலும் அவரை சீண்டினர்.
பின்னர் அவர் உரை நிகழ்த்தும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
மற்றவர்களைவிட தன் தமிழ்நாட்டுப்பற்று சற்றும் குறைந்ததல்ல என
காட்டவோ, என்னமோ மிக காட்டமாக, "ஒக்கனேக்கல் திட்டத்திற்கு பிரச்சினை செய்பவர்களை உதைக்க வேண்டாமா" என கேட்டார்.
அதன் பிறகு கர்நாடகத்தில் ஆங்காங்கே ரஜினி கொடும்பாவி எரிக்க ஆரம்பித்தார்கள்.
நமது தமிழக முதல்வரும் தேர்தல் நேரத்தில், தனது கூட்டணிக்கட்சியான காங்கிரஸிற்கு தர்மசங்கடம் தரவேண்டாமென தற்காலிகமாக இந்தத்திட்டத்தையே நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஆக மொத்தத்தில் ஒக்கனேக்கலுக்காக கர்நாடகத்துடன் ஒரு போர்பிரகடனம் செய்வது போன்ற ஆரம்பிக்கப்பட்ட பிரச்னை, கடைசியில் ரஜினியின் மாநிலப்பற்றை சோதித்ததற்கு பின் ஒரு சப்பை மேட்டராகி செத்துப் போனது.
ஆனாலும் கர்நாடகத்தில் ரஜினியின் கொடும்பாவி எரிப்பு மட்டும் தொடர் கதையானது.
அரசியல்வாதிகளின் வீண் அலங்கார ஆர்ப்பரிப்பு வார்த்தைகளை நம்பி, தானும் உண்ர்ச்சிவசப்பட்டு, பலிகடா ஆனதை மிக லேட்டாகவே ரஜினி உணர்ந்திருக்க வேண்டும்.
அதிலிருந்து மவுனம் சாதித்து வந்தவர், இன்று அவருடைய குசேலன் பட வெளியீட்டிற்கு கர்நாடகத்தில் வந்த எதிர்ப்பினால், தன் ரசிகர்களுக்கும் அடாவடிக்காரர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வீண் கலவரம் வருவது மட்டுமல்லாமல், திரைப்படத்தொழிலை மட்டுமே நம்பி பிழைக்கும் பல பேர் பாதிக்கப்படுவார்களே என்ற நல்லெண்ணத்தில் தான், தான் ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசி, பின் அப்படி பேசி இருக்கவே கூடாது என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்ட அந்த வார்த்தையை கூறி அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இதில் எங்கே இருக்கிறது முரண்பாடு.
இப்படி பேசியதற்காக அவர் கொடும்பாவியை கர்நாடகத்தில் தொடர்ச்சியாக எரித்தபோது எத்தனை பேர் அவருக்கு உறுதுணையாக நின்றார்கள். அது ஏதோ ரஜினியின் சொந்தப்பிரச்சினை போல அல்லவா கண்டும் காணாமல் இருந்த்தார்கள்.
இப்போது அவர் வருத்தம் தெரிவித்தவுடன், கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டு விட்டார் ரஜினி!விடாதே, பிடி!! என்று எல்லோரும் ஓடி வருகிறார்கள்.
கர்நாடகமா தமிழகமா என்றால் ரஜினி நம் பக்கம் தான் என்பதை விட
அவர் எப்ப சறுக்குவார் ஏறி மிதிக்கலாம் என்று அலைவது நியாயந்தானா?
சிந்திப்போம்!
ரஜினி ஒரு திரைப்படக்கலைஞன்!
அரசியல்வாதியல்ல!!
டிஸ்கி1: இதை எழுத ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிறது. நேரமின்மையால் கொஞ்சம் கொஞ்சமாக இன்றுதான் முடிக்க முடிந்தது. முடிஞ்சி போன மேட்டர்னு நினைக்காதிங்க .
ஆறின கஞ்சி பழங்கஞ்சி உண்மைதான். ஆனால் இது சாதா கஞ்சி அல்ல, சுண்டக்கஞ்சி
நாள் ஆக ஆகத்தான் போதை ;-o
டிஸ்கி2: நான் ரஜினி ரசிகன் அல்ல. இன்னும் குசேலன் பார்க்கவில்லை.
naanum kajiniyum enRa en padhivu padikkavum
பதிலளிநீக்குKuselam paarkalamal irupathey nallathu.
பதிலளிநீக்குKuselam paarkalamal irupathey nallathu.
பதிலளிநீக்குThanks...
பதிலளிநீக்குPlz look ::
http://kaalapayani.blogspot.com/2008/08/blog-post_02.html
kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//naanum kajiniyum enRa en padhivu padikkavum\\
தங்கள் வருகைக்கு நன்றி!
கண்டிப்பாக தங்கள் பதிவுக்கு வந்து பார்க்கிறேன்.
//Anonyme a dit...
பதிலளிநீக்குKuselam paarkalamal irupathey nallathu.\\
கருத்துக்கு நன்றி அனானி.
// இரா. வசந்த குமார். a dit...
பதிலளிநீக்குThanks...
Plz look ::
http://kaalapayani.blogspot.com/2008/08/blog-post_02.html \\
கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்.
தங்கள் வருகைக்கு நன்றி வசந்த குமார்.
//ரஜினி ஏதோ சொல்லி இருக்கிறாராமே? எழுது! நன்றாக கலாய்த்து எழுது! உன்னைத் தேடி ஆட்டோவோ, 'ஆபீஸ் ரூமுக்கு' கூட்டிப் போகவோ ரஜினி ஆள் அனுப்பப் போவதில்லை! எனவே எழுது!
பதிலளிநீக்கு'ஊருக்கு இளைத்தவன் அவன் தானே'! நன்றாக காய்ச்சி எழுது!
பரபரப்பாகும்! நாற்பது பேர் வரை ஜால்ரா அடிப்பார்கள். கொஞ்சம் தெரிந்த ஆள் ஆகலாம்.
'ஹப்பாடா சந்தோஷம்!' Group Power.
நேற்று *** பேர் வந்து பார்த்தார்களா? திருப்தி! //
நெத்தியடி!
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
பதிலளிநீக்குவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அரசியலில் ரஜினி பண்ணும் காமடியெல்லாம் அவரது சமீப படங்ளில் வரும் காமெடியை மீறும். அதையெல்லாம் நாம் serious ஆக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பதிலளிநீக்குஎல்லோரும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், இந்த மாங்கா மடைய 'ரசிகர்களுக்கு' இப்பவாவது இதெல்லாம் விளங்கனும்னுதான்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சூர்யா.
பதிலளிநீக்கு