இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஜூலை 27, 2008

எப்படா திருந்துவீங்க ?

வருடத்திற்கு ஒரு முறை கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் வருவதைப்போலவே, நம் நாட்டில் குண்டு வெடிப்பும் தவறாது வரும்.

வந்ததும், வழக்கமான சடங்குகள் ஆரம்பமாகிவிடும். பிரதமர், ஜனாதிபதி கண்டனம் தெரிவிப்பார்கள். மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு நிவாரண நிதியும் அறிவிப்பார்.

மத்திய எதிர்க்கட்சி தலைவர் பிரதமரையும் ஆளுங்கட்சியையும் குறை சொல்வார். மாநில எதிர்கட்சி முதல்வரைச்சாடும். போலீஸ் விசாரணை, குற்றவாளியின் உருவம் வரைவு, துப்பு துலக்கல் இத்யாதி இத்யாதி என இறுதியில் குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்படுவார்கள்.

வழக்கு, விசாரணை என்று நீண்ட்ட்ட்ட பின் தீர்ப்பு சொல்லப்படும். அதில் மரண தண்டனை இல்லையென்றால் ஒரு நாள் பரபரப்போடு அடங்கிவிடும்.

மாறாக, மரண தண்டனை யாருக்கேனும் விதிக்கப்பட்டால் அவ்வளவுதான், நாடு முழுவதும் வாதப்பிரதி வாதங்கள் ஆரம்பித்துவிடும்.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சிறுபான்மை இனத்தவர் என்றால், நிச்சயம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றபடாது.
(வேற, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நாட்டுப்பற்றா வாங்கிதரும்? புத்தி சொல்ல வந்திட்ட பெர்றிய புண்ணாக்கு மாதிரி).

இப்படி இந்த சீரியல் நடந்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த குண்டு வெடிப்பு எங்கேயாவது நடந்திருக்கும். மீண்டும் பிரதமர், ஜனாதிபதி கண்டனம், மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு...............................................இன்ன பிற சடங்குகள் இனிதே நடந்தேறும்.

நமக்கும் நல்லா பொழுது போகும்.
சிவாஜி, தசாவதாரம் படங்களின் காரசார விமர்சனங்களுக்கு மத்தியில் நமக்கும் வித்தியாசமாக,விறுவிறுப்பான செய்திகள் கிடைக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டோர் நிலமை, பலியானோர் குடும்பதினர் கதி என்ன ஆனது என்பது அந்த சம்பவத்தோடு நமக்கு மறந்துவிடும்.

நமக்கோ இது ஒரு பரபரப்பான செய்தி ஆனால் அவர்களுக்கோ வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்ட ஒரு சதி.

அந்த நாளின் வடு அவர்களுக்கு மறக்க முடியாதது மட்டுமல்ல மறந்து தொலைக்க முடியாததுமாகும்.

இதை ஏன் நாம் தொடர விடுகிறோம் என சிந்திப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை.

முதலில் அரசை கேட்கிறேன்

உங்களை நாங்கள் பிரதமர், முதல்வர் என பதவியில் அமர்த்தியதே, கண்டனம் தெரிவிக்கவும் நிவாரண நிதி வழங்கவும் தானா?

இதை செய்தவர்கள் யார்?

என்ன வேண்டும் அவர்களுக்கு?

அவர்கள் கோரிக்கை அல்லது கோபம் நியாயந்தானா?

அப்படி நியாயமான கோரிக்கை என்றால் அதை நிறைவேற்றி வைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
இதன் மூலம் தீவிரவாதத்தை வளர்க்கும் சர்வதேசக்கும்பலின் இந்திய ஊடுறுவலை தடுக்கலாமே!

மாறாக நியாயமற்ற கோரிக்கையை மறுத்ததிற்காக தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள் என்றால், அவர்களை தூக்கில் போடுவதில் என்ன தவறு?
ஏன் தூக்கு?
என்கவுண்டரிலே காரியத்தை முடிக்கலாமே.

ஏன் இதை செய்ய தயங்குகிறீர்கள்?

அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடாதீர்கள்.

தீவிரவாதிகளே,

உங்களது கோரிக்கைதான் என்ன?

அதற்கு இது தான் வழியா?

வேறுவகையில் உங்கள் கோரிக்கையை கேட்க முடியாதா?

பலியான அப்பாவி மக்களின் மீதுதான் உங்களது கோபமா?

அவர்களின் ரத்தத்தினால் உங்கள் எதிபார்ப்பு தீர்ந்து விட்டதா?
அல்லது அவர்களின் உயிர்பலிதான் உங்கள் எதிர்பார்ப்பா?

உங்களைக் கேட்டால் குஜராத் பிரசினை காரணம் என்பீர்கள்.
அவர்களைக் கேட்டால் ரயில் எரிப்பு காரணம் என்கிறார்கள்.
ரயிலை எரித்தவர்களைக் கேட்டால் பாப்ரி மசூதி இடிப்பு காரணம் என்பார்கள்.

இப்படி ரயில் பெட்டி போல காரணங்களை கோர்த்துக்கொண்டே போனால்
எப்போது யார் நிறுத்துவது?

அப்பாவிகள் அனைவரும் அழிந்த பிறகா?

மதப்பற்று, மத வெறியாகி, மனித உயிர் குடிக்கும் இரத்தக்காட்டேரியானது ஏன்?


மதத்திற்காகத்தான் தீவிரவாதமென்றால் தயவு செய்து தீவிரவாதத்தை விட்டு விடுங்கள்.
ஏனெனில் அந்த மதங்களே உங்களை மன்னிக்காது.

மாறாக, தீவிரவாதத்திற்காகத்தான் மதமே என்றால்
அந்த மதங்களையே தூக்கி எறியுங்கள்.


நம் தேசத்தை அமைதிப்பூங்காவாக மாற்றுங்கள்.


இறுதியாக அரசுக்கு ஒரு கோரிக்கை

உங்களால் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலை எடுக்க இயலவில்லை என்றால்,தயவுசெய்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வடிவேலு பாணியில் ஒரு திறந்த மைதானத்தை நிறுவுங்கள். அதில் சாதி, மத வெறியர்கள் அடித்து கொண்டு சாகட்டும்.

எங்கள் அப்பாவி சகோதரர்கள் நாட்டில் நிம்மதியாக வாழட்டும்.

11 கருத்துகள்:

  1. பெயரில்லா7/27/2008 10:38:00 AM

    thinasari oru ooril kundu vedikkirathu.entha arasu enna muyarchi seikirathu.enbathe theriyavillai.ellame sambirathaya nadavadikkai.kanthudaipu naadakam. sattaiadikatturai.

    பதிலளிநீக்கு
  2. //உங்களால் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலை எடுக்க இயலவில்லை என்றால்,தயவுசெய்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வடிவேலு பாணியில் ஒரு திறந்த மைதானத்தை நிறுவுங்கள். அதில் சாதி, மத வெறியர்கள் அடித்து கொண்டு சாகட்டும்.//
    மனிதன் முகம் பார்க்க மறந்த இவர்கள் அடித்துகொண்டு சாவதுதான் நல்லது. மதத்தை காக்க வந்த மதம்பிடித்த பன்னிகள்....

    நல்லப் பதிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவோடு பெரும்பாலும் உடன்படுகிறேன். தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. omsathish said...

    thinasari oru ooril kundu vedikkirathu.entha arasu enna muyarchi seikirathu.enbathe theriyavillai.ellame sambirathaya nadavadikkai.kanthudaipu naadakam. sattaiadikatturai.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஓம்சதீஷ்.

    //entha arasu enna muyarchi seikirathu.enbathe theriyavillai//

    அது சரி!
    அரசு ஏதோ முயற்சி எடுத்த மாதிரியும்
    அது உங்களுக்கு தெரியாமல் போனது மாதிரியும் வருத்தப்பட தேவையில்லை. அது போன்ற எந்த தப்பும் நம் அரசாங்கம் செய்யாது.
    தைரியமாக இருங்கள்.பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். அதே போல் நம் அரசியல்வாதிகளுக்கு ஓட்டென்றால் எல்லாமெ திறக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஆ.ஞானசேகரன் a dit...


    //மனிதன் முகம் பார்க்க மறந்த இவர்கள் அடித்துகொண்டு சாவதுதான் நல்லது. மதத்தை காக்க வந்த மதம்பிடித்த பன்னிகள்....

    நல்லப் பதிவு பாராட்டுக்கள்//


    மிக்க நன்றி ஞானசேகரன்!

    மனிதாபிமானமற்ற,மிருகவெறி கொண்ட, இந்த மதம் பிடித்த பன்னிகள் (மதம் பிடித்த யானைகள் என்று சொல்வதை விட இந்த பதம் மிகப்பொருத்தம்.இதற்கு ஒரு நன்றி தங்களுக்கு)தாங்கள் சார்ந்த மதத்தை காக்க வந்தவர்கள் அல்ல அழிக்க வந்தவர்கள் என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  6. Voice on Wings a dit...

    //உங்கள் பதிவோடு பெரும்பாலும் உடன்படுகிறேன். தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. //வருடத்திற்கு ஒரு முறை கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் வருவதைப்போலவே, நம் நாட்டில் குண்டு வெடிப்பும் தவறாது வரும்.//

    இன்ன பிற காலங்களை போல குண்டுவெடிப்பும் வருடத்திற்கு ஒரு முறை வந்தால் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டில் தான் வருடம் 365 நாட்க்களும் எங்காவது குண்டு வெடிக்கிறதே!

    பதிலளிநீக்கு
  8. //வருடத்திற்கு ஒரு முறை கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் வருவதைப்போலவே, நம் நாட்டில் குண்டு வெடிப்பும் தவறாது வரும்.//

    இன்ன பிற காலங்களை போல குண்டுவெடிப்பும் வருடத்திற்கு ஒரு முறை வந்தால் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டில் தான் வருடம் 365 நாட்க்களும் எங்காவது குண்டு வெடிக்கிறதே!

    பதிலளிநீக்கு
  9. Madhusudhanan Ramanujam a dit...


    //இன்ன பிற காலங்களை போல குண்டுவெடிப்பும் வருடத்திற்கு ஒரு முறை வந்தால் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டில் தான் வருடம் 365 நாட்க்களும் எங்காவது குண்டு வெடிக்கிறதே!//


    உண்மைதான்!

    வருடத்தில் ஒரு முறை அல்ல பல முறை நடக்கும் இந்த கொடூரத்திற்கு முடிவு கட்ட அதிகாரத்திலிருப்போர் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே
    என்பதுதான் என் ஆதங்கம்.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மதுசூதனன் ராமானுஜம்.

    பதிலளிநீக்கு
  10. குண்டு வெடிப்பில் சம்பந்தபட்டவர்கள் என சிலரை கைது செய்வதும்,அவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருவதும்..சில ஆண்டுகள்
    கழித்து..போலீசார் வழக்கை சரிவர பதிவு செய்யவில்லை..என நீதிமன்றங்களால் அவர்கள் நிரபராதி என வெளியே சுதந்திரமாக வருவதும் சாமான்யனுக்கு
    வேதனை நிறைந்த வாடிக்கைகள்தானே!!

    பதிலளிநீக்கு
  11. வாங்க‌ மேட‌ம் த‌ங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி!

    //குண்டு வெடிப்பில் சம்பந்தபட்டவர்கள் என சிலரை கைது செய்வதும்,அவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருவதும்..சில ஆண்டுகள்
    கழித்து..போலீசார் வழக்கை சரிவர பதிவு செய்யவில்லை..என நீதிமன்றங்களால் அவர்கள் நிரபராதி என வெளியே சுதந்திரமாக வருவதும் சாமான்யனுக்கு
    வேதனை நிறைந்த வாடிக்கைகள்தானே!!\\

    உண்மைதான்.
    அப்ப‌டியே நீதிம‌ன்ற‌ம் அவ‌ர்க‌ளைத் த‌ண்டித்தாலும், அந்த‌ த‌ண்ட‌னையை நிறைவேற்றாம‌ல் ஓட்டை க‌ண‌க்கிட்டுட்டு ந‌ம்ம‌ அர‌சிய‌ல்வாதி சும்மா இருக்கின்றானே
    அதை என்ன வென்று சொல்வீர்க‌ள்.

    ஓட்டே மாய‌ம்!

    பதிலளிநீக்கு