இன்று ஒரு குறள் !

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

விஜயகாந்த்+வடிவேல் லடாய் - சில சந்தேகங்களும், கேள்விகளும்

கடந்த சில நாட்களாக நடந்து வரும் விஜயகாந்த்- வடிவேல் லடாய் அனைவரும் அறிந்ததே.

இது சம்மந்தமாக கருத்துக்கள் பல மீடியாக்களில் (இணைய பதிவுகள் உட்பட) வந்த வண்ணம் உள்ளனர். இதிலே நம் கருத்தையும் சொல்லாட்டி எப்படினு ஆரம்பிச்சி பிரச்சினையை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் நிறைய ஏன்? ஏன்? ஏன்? கள் தான்.

சரி கேள்விகளை நமக்குள்ளே வச்சிக்கிட்டு தலையை பிச்சிக்கிறதை விட சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுடலாமே . பதிலை அவங்க சொன்னாலும் சரி இல்லை அவங்க சார்பாக அவங்களோட அனுதாபிகள் சொன்னாலும் சரி

வடிவேல் வீட்டைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்குறியவர்கள் மட்டுமின்றி சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

ஆனால் நடந்த சம்பவத்திற்கு பின் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள், அறிக்கைகள் இவற்றில் பல விஷயங்கள் புரியவில்லை. அதனால் தான் இந்த புதசெவி பதிவு ! ( நண்பர் TBCD மன்னிப்பாராக).



முத‌லில் வ‌டிவேலிட‌ம் சில‌ கேள்விகள்


1. தங்கள் வீட்டை சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கி சேதப்படுத்தியது என்பதை பார்த்த நீங்கள் அது எப்படி நிச்சயமாக விஜயகாந்த் தூண்டுதல் பேரிலேயே வந்தவர்கள் அவர்கள் என்பதை தீர்மானித்தீர்கள்?

2. அவர்கள், ”முதல்வராக வரப்போகும் என் தலைவனிடம் மோதாதேஎன்று கூறியபடியே தாக்கினார்கள் என்பதால், அது விஜயகாந்த் அனுப்பிய படைதான் எனத் தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறிய நீங்கள்,அந்த கும்பல்கலைஞர் வாழ்கஎன்று சொல்லியிருந்தால் கலைஞரின் கூலிப்படையென்றோ, ”புரட்சித்தலைவி வாழ்கஎன்றிருந்தால் ஜெயலலிதாவின் கூலிப்படை என்றோ கூறியிருப்பீர்களா?

அது என்ன லாஜிக் ?
வந்தவர்கள் தாங்கள் யார் என்று தாங்களே வாக்குமூலம் கொடுப்பார்களா?

3.விஜயகாந்தை தவிர இந்த உலகத்தில் வேறு எதிரிகள் யாருமே உங்களுக்கு கிடையாது என்கிறீர்கள். நல்லது.
ஆனால் பிறகு ஏன் நடிகை ஸ்ரேயா உங்களோடு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அஜித் தன் படத்திலிருந்து அவரை நீக்கினார்?

இங்கு அஜீத்தின் பிரச்சினை ஸ்ரேயாவின் குத்தாட்டமா இல்லை உங்களோடு அவர் நடித்ததா?

தவிர ,உங்களால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ துணை காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர்கூட துணிந்து உங்களைப்பற்றி குறை கூறி பேட்டி கூட கொடுத்தார்கள்.
அதற்காக அவர்கள்தான் கூலிப்படை அனுப்பினார்கள் என்று உங்களைப்போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ பாணியில் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு விஜயகாந்தை தவிர இன்னும் பல எதிரிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்பதே இங்கே கேள்வி.

4. உங்கள் கருத்துப்படியே விஜயகாந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அவரை ஒழிப்பதற்காக தேர்தலில் எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளீர்களே தண்டனை விஜயகாந்துக்கா? இல்லை அந்த தொகுதி மக்களுக்கா?

மற்றவர்கள் உண்மையிலே மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொல்லவாவது செய்கிறார்கள்.

நீங்கள் மட்டும்தான் தனியொரு மனிதனை எதிர்ப்பதற்காக தேர்தலில் நிக்கப்போவதாக சொன்னது மட்டுமல்லாமல் இன்று விடுத்த அறிக்கையில் கட்சியே ஆரம்பிக்க போவதாக சொல்லியிருக்கிறீர்கள் இது நியாயமா?

அதற்கு பதில் ஏன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் எதிரிலியே நீங்கள் ஒரு மண்டபம் கட்டி அவ்ரின் வருமானத்தை குறைக்க கூடாது?

இல்லை அவர் படம் ரிலீஸ் அன்று நீங்கள் கதாநாயகனாய் நடித்த படத்தை ரிலீஸ் செய்து வசூலில்அவருக்கு பாடம் புகட்ட கூடாது ?

இல்லை அரசியலில் தான் அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், தேர்தல் சமயம் அவர் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களிலே சிறந்தவர் என தாங்கள் தீர்மானிக்கும் ஒருவருக்கு இலவசமாக பணிகள் மற்றும் பிரசராம் செய்து விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்க கூடாது?

5. உங்களை யாரும் தூண்டிவிடவில்லை என்று சொன்னீர்கள் சரி! அது எப்படிஇந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது”. என்று எதை வைத்து இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினீர்கள்?

கொஞ்சம் உதைக்கிறதே!




அடுத்து விஜ‌ய‌காந்திட‌ம் சில கேள்விகள்

1. வடிவேல் வீட்டைஎன் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயாஎன்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கிய அந்த கும்பல் தங்கள் கட்சியினர் அல்ல என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

இது சம்பந்தமாக தங்கள் கட்சியினரிடம் விசாரணை நடத்தினீர்களா ?


2. அந்த கும்பல் தங்களால் ஏவி விடப்படவில்லை என்று உறுதி பட மறுத்திருக்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களே ஆர்வமிகுதியால் ஏன் அப்படி செய்திருக்க கூடாது?
உங்கள் வக்கீல் உங்களை கேட்காமலே முன் ஜாமின் மனு தாக்கல் செய்துவிட்டார் என்று உங்கள் தரப்பு சொன்னது போல்.

3. சரி எப்படியோ விசாரணை செய்தவரையில் உங்கள் கட்சிக்கும் அந்த வன்முறை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று உறுதிபட கண்டு கொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் எதை வைத்து கலைஞர் தான் படை அனுப்பினார் என்றும் வடிவேலுவை பின்னிருந்து இயக்குகிறார் என்றும் சொன்னீர்கள்?

இதுவும் அதே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ கதைதானே!

4. அதேபோல் வடிவேல் உங்களை எதிர்த்து தேர்தலில் நிக்கப்போவதாக அறிவிக்க அதற்கு பதில் சொல்லும் விதமாக கலைஞரே எதிர்த்து நின்றாலும் பயப்பட மாட்டேன் என்று எதற்கு இதற்குள் அவரை இழுக்கிறீர்கள்?

5. வன்முறையால் பாதிக்கப்பட்டவர், தாக்கிய வன்முறை கும்பலை ஏவிவிட்டவர் நீங்கள்தான் என்று காவல் நிலையத்தில் ஆணித்தரமாக புகார் தந்ததால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ”கலைஞர் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார்என்று இதையும் அரசியல் ஆக்கலாமா?
இது நியாயம் தானா?



இறுதியாக சில பொதுக்கேள்வி
கள்

1.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?

2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?

இன்னும் பல ஏன்?கள் மிச்சமிருப்பினும், இப்போதுக்கு இது போதும். பதில் கண்டு பிற!

17 கருத்துகள்:

  1. பெயரில்லா9/24/2008 08:47:00 PM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. நியாயமான சந்தேகங்கள் ! ஆவேசப்பேட்டிகள் தரும் பரபரப்பில் இதுபோன்ற நியாயமான கேள்விகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் முன் வலிமையாய் வைக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

    வடிவேலின் பின்னால் தி.மு.க-வின் கரங்கள் இருக்கக்கூடும் என்பதை மறுக்க இயலாது.

    செல்வகணபதியையே சேர்த்துக்கொண்டவர்களுக்கு - கண்ணப்பன் (இந்நாளைய ராஜ.கண்ணப்பன் (?!)), ஏ.சி.ஷண்முகம் போன்ற அரசியல் அநாதைகளுக்கு அவர்கள் சாதிக்கட்சி பிரதிநிதிகள் என்ற ஒரே காரணத்தால் தேவையற்ற அங்கீகாரம் கொடுக்கத்தெரிந்தவர்களுக்கு - இதெல்லாம் ஜுஜுபி.

    காரணம் தெள்ளத்தெளிவு.

    மனோரமா நிலை வடிவேல் மறந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்.

    கூத்தாடிகள் ரெண்டுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்.

    அன்புடன்
    முத்து

    பதிலளிநீக்கு
  3. நல்லாத் திட்டினால் உங்களது ஆக்கம் ரொம்ப நல்லாயிருக்கு என்று அர்த்தம். நான் கூட இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை. ஆனாலும் இந்த பிரச்சினையை இவ்வளவு தூரம் பெருசா எடுத்தது யார் தப்பு? வடிவேல் வேலைக்காரியை கசமுசா பண்ண இழுத்து கொலையில முடிந்ததா ஒரு கதை. அது உண்மையா? நாட்டில ஆயிரம் பிரச்சினை இருக்கு போயும் போயும் இதையா அலசுவது?

    பதிலளிநீக்கு
  4. பலே பலே ! கேள்விகள் எல்லாம் பிரமாதம்!

    மக்களுக்காகத்தான் தேர்தலில் நிற்க வேண்டுமே தவிர விஜயகாந்தை பழி வாங்க தேர்தலில் நிற்பது சிறிதும் ஏற்புடையதல்ல. உண்மையிலேயே சேவை செய்யிற ஐடியா இருந்திச்சினா ஓகே.

    நடிகர்கள் திரைப்படத்தில் மக்களை சந்தோச படுத்தரத விட்டுட்டு இப்போ "லைவ்" ஆ காமடி பண்ணி ஆரம்பிச்சுட்டாங்க!

    பதிலளிநீக்கு
  5. அனானி சார், உங்க கருத்து என்ன? என் கருத்தோட எதில் நீங்க ஒத்துப்போகல? ஏன்? னு சொல்லியிருந்தா, நான் தவறு செய்திருக்கும் பட்சத்தில் திருத்திக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். அதை விட்டு விட்டு ஏன் இப்படி வார்த்தை நரகலை இப்படி கொட்டுறீங்க. நாம் கற்கால மனிதர்கள் இல்லை என்பதை மனதி வைங்க.

    பதிலளிநீக்கு
  6. வாங்க முத்துகுமார், தங்கள் வரவு நல் வரவாகுக!

    பதிலளிநீக்கு
  7. //நியாயமான சந்தேகங்கள் ! ஆவேசப்பேட்டிகள் தரும் பரபரப்பில் இதுபோன்ற நியாயமான கேள்விகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் முன் வலிமையாய் வைக்கப்பட வேண்டியது மிக அவசியம்.//

    நன்றி!



    //வடிவேலின் பின்னால் தி.மு.க-வின் கரங்கள் இருக்கக்கூடும் என்பதை மறுக்க இயலாது.//

    இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதையும் உறுதியாய் சொல்ல இயலாதே.


    //மனோரமா நிலை வடிவேல் மறந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்.//

    உண்மையில் அவர் கைப்பாவையாத்தான் செயல் படுகிறார் என்றால், பாவம் அவர் வீழ்ச்சியை யாராலும் தடுக்க இயலாது.

    தங்கள் கருத்துக்கு நன்றி முத்துகுமார்!

    பதிலளிநீக்கு
  8. வாங்க, ஆட்காட்டி வாங்க!

    தங்கள் வருகைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. //நல்லாத் திட்டினால் உங்களது ஆக்கம் ரொம்ப நல்லாயிருக்கு என்று அர்த்தம்//

    நன்றி!


    //நாட்டில ஆயிரம் பிரச்சினை இருக்கு போயும் போயும் இதையா அலசுவது?//

    உண்மைதான். ஆனாலும் இது 1001வது பிரச்சினையால ஆய்டுச்சி. ;-))

    தவிர, 2 நடிகர்கள் தங்களுக்குள் அடிச்சிக்கிட்டா நம்ம கண்டுகாம போய்டலாம். ஆனா, இவங்க அதை அரசியலால ஆக்கிப்புட்டாங்க. அதனால இது மக்கள் பிரச்சினையால ஆயிப்போச்சி (ஸ். .ஸ்.. அப்பாடா தப்பிச்சேன்).

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜுர்கேன் க்ருகேர் , வாங்க!

    பதிலளிநீக்கு
  11. // ஜுர்கேன் க்ருகேர் a dit...
    பலே பலே ! கேள்விகள் எல்லாம் பிரமாதம்!//

    மிக்க நன்றி!

    //மக்களுக்காகத்தான் தேர்தலில் நிற்க வேண்டுமே தவிர விஜயகாந்தை பழி வாங்க தேர்தலில் நிற்பது சிறிதும் ஏற்புடையதல்ல. உண்மையிலேயே சேவை செய்யிற ஐடியா இருந்திச்சினா ஓகே. //

    சரியா சொன்னீங்க.


    //நடிகர்கள் திரைப்படத்தில் மக்களை சந்தோச படுத்தரத விட்டுட்டு இப்போ "லைவ்" ஆ காமடி பண்ணி ஆரம்பிச்சுட்டாங்க!//

    என்ன செய்றது? ஒரு வேளை, ’உலகமே ஒரு நாடகமேடை’ னு சொன்னதை அவுங்க தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களோ என்னமோ! ;-))

    பதிலளிநீக்கு
  12. //.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

    அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?//

    சிறுபிள்ளைத் தனமான செயல்களால் மக்களிடம் இமேஜ் குறைகிறது என்று நினைக்கிறீர்களா? இமேஜ் வளர்ச்சிக்கு முக்கிய காரணி சார் அது.


    உங்களுடைய மற்ற கேள்விகள், குறிப்பாக மக்கலுக்கு ஏன் தண்டனை போன்ற குத்தல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா9/25/2008 08:21:00 PM

    //2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?//

    அவர்களுக்கு தான் இதில் அதிக அனுபவம் உள்ளதே

    பதிலளிநீக்கு
  14. // RATHNESH a dit...
    சிறுபிள்ளைத் தனமான செயல்களால் மக்களிடம் இமேஜ் குறைகிறது என்று நினைக்கிறீர்களா? இமேஜ் வளர்ச்சிக்கு முக்கிய காரணி சார் அது.


    உங்களுடைய மற்ற கேள்விகள், குறிப்பாக மக்கலுக்கு ஏன் தண்டனை போன்ற குத்தல்கள் அருமை.

    25 septembre 2008 19:15//


    வாங்க ரத்னேஷ் சார், வாங்க!

    அடியேன் இருப்பிடத்தி்ற்கு முதல் வருகை தரும் மூத்த பதிவரே,

    வாருங்கள், வாருங்கள்!
    தங்கள் வரவு நல்வரவாகுக!!
    :-)))

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  15. இந்த தாக்குதல் பல தரப்பிலிருந்து நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    முதலில் திமுக இதை செய்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது;செய்துவிட்டு விஜயகாந்தை மடக்க இதை உபயோகப்படுத்தலாம் என்ற எண்ணம் இருக்கலாம்..

    அதிமுகவும் இதே காரணங்களுக்காக செய்திருக்கலாம்.

    அல்லது மருத்துவர் குழு செய்திருக்கலாம்...

    இப்படி எல்லோரும் வி.கா.தை மடக்க எண்ணுகிறார்கள் என்பதுதான் இப்போது தெளிவாகத் தெரியும் ஒரு விதயம்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க அறிவன் சார், வாங்க!! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. // அறிவன்#11802717200764379909 a dit...
    இந்த தாக்குதல் பல தரப்பிலிருந்து நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.//

    மறுப்பதற்கில்லை.


    //முதலில் திமுக இதை செய்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது;செய்துவிட்டு விஜயகாந்தை மடக்க இதை உபயோகப்படுத்தலாம் என்ற எண்ணம் இருக்கலாம்..
    ்அதிமுகவும் இதே காரணங்களுக்காக செய்திருக்கலாம்.//

    செய்தது இவர்களாக இருந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதைதான்.

    //அல்லது மருத்துவர் குழு செய்திருக்கலாம்...
    //

    சான்ஸே இல்லை!
    நடிகர்கள் அரசியலுக்கே வரக்கூடாதுனு சொல்லும் கட்சி அது. அதனால் ஒரு நடிகரை அழிக்க இன்னொருவரை வள்ர்த்து விடும் என் நான் எண்ணவில்லை.


    //இப்படி எல்லோரும் வி.கா.தை மடக்க எண்ணுகிறார்கள் என்பதுதான் இப்போது தெளிவாகத் தெரியும் ஒரு விதயம்.//

    ஆனால் பின்விளைவுகள் அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக போகப்போவுதோ என்னமோ? பொறுத்திருந்த பார்ப்போம்.

    தங்கள் மேலான கருத்தை இங்கு வந்து பகிர்ந்து கொண்டதற்கு மீண்டும் நன்றி சார்!

    பதிலளிநீக்கு