ரயிலை மறித்து கச்சா எண்ணை திருட்டு-விஷவாயு கசிவில் 25 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லோங்க் மாவட்டத்தில் சரக்கு ரயிலிலிருந்து கச்சா எண்ணையை திருட வந்தவர்களில், விஷ வாயு கசிவு மற்றும் டேங்கர் வெடித்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாய்டிங் என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பாதை வழியாக கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலை 70க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு டேங்கரிலிருந்து கச்சா எண்ணையை திருட ஆரம்பித்தனர்.
ஆனால்துரதிர்ஷ்டவசமாக அந்த டேங்கரிலிருந்து விஷ வாயு கசிந்துள்ளது. மேலும் அந்த டேங்கரும் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணை விமானங்களுக்கான அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும்.
இந்த சம்பவம் நாகாலாந்து-அஸ்ஸாம் எல்லையில் நடந்துள்ளது. இறந்தவர்களில் பலர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நாகா தீவிரவாதிகளும் அடக்கம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் இப்படி அடிக்கடி டேங்கர் ஏற்றிக் கொண்டு வரும் ரயில்களை மறித்து கொள்ளை அடிப்பது நடந்து வருகிறது. தீவிரவாதிகள்தான் பெரும்பாலும் இவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த முறை அது அவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது.
இப்படி கொடூரமான முறையில் இறந்து போனவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் என்னதான் தீவிரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதால் நம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம்.
திருட்டு கிறுக்கனுங்க!
பதிலளிநீக்குகடத்தப் போனவங்களுக்கு உள்ள என்ன இருந்தது என்று தெரியாதா?
பதிலளிநீக்குஇவங்கள் எல்லாம் என்னத்த பண்ண போறங்களோ?:
//இப்படி கொடூரமான முறையில் இறந்து போனவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் என்னதான் தீவிரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதால் நம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம்.//
பதிலளிநீக்குஎதற்கு அனுதாபம்? இவர்களால் சாக இருந்த அப்பாவிகளின் உயிர் தப்பியதை நினைத்து சந்தோஷமல்லவா பட வேண்டும்!!!
// ஜுர்கேன் க்ருகேர் a dit...
பதிலளிநீக்குதிருட்டு கிறுக்கனுங்க!
//
வாங்க ஜூர்கேன் க்ருகேர், உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
// ஆட்காட்டி a dit...
பதிலளிநீக்குகடத்தப் போனவங்களுக்கு உள்ள என்ன இருந்தது என்று தெரியாதா?
இவங்கள் எல்லாம் என்னத்த பண்ண போறங்களோ?://
வாங்க ஆட்காட்டி சார்,
எல்லாம் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதைதான்!
வழக்கம்போல குரூட் ஆயில் கிடைக்கும் வித்து காசு பாக்கலாமுன்னு நினைச்சியிருப்பானுங்க. மாறாக விஷவாயு வந்து மேலே டிக்கெட் வாங்கிட்டானுங்க.
theeviravathikalum manitharkale romba sariyana varthai vazhga manithbimanam.
பதிலளிநீக்கு// thenali a dit...
பதிலளிநீக்கு//இப்படி கொடூரமான முறையில் இறந்து போனவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் என்னதான் தீவிரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதால் நம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம்.//
எதற்கு அனுதாபம்? இவர்களால் சாக இருந்த அப்பாவிகளின் உயிர் தப்பியதை நினைத்து சந்தோஷமல்லவா பட வேண்டும்!!!//
நீங்க சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான் என்றாலும், மனித உயிர் மதிப்பற்றது அல்லவா. அதை அவனுங்க மாதிரி கொள்கை குருடன்களுக்குதான் தெரியல என்பதால நாமும் கல் மனசோட இருக்க முடியுமா?
அதற்குதான் அனுதாபம் அதுவும் கூட அவனுக குடும்பங்களுக்குதான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தெனாலி!
//Bala said...
பதிலளிநீக்குtheeviravathikalum manitharkale romba sariyana varthai vazhga manithbimanam.//
வாங்க பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வணக்கம்.
பதிலளிநீக்குநல்ல செய்திதான்.அனால் உங்கள் பெயர்தான் உதைக்கிறது.
கரிகாலன்.
pls check my name and my blog. i am writing from 2004. can u do some thing?
பதிலளிநீக்குthnks
karikaalan
//கரிகாலன் said...
பதிலளிநீக்குவணக்கம்.
நல்ல செய்திதான்.அனால் உங்கள் பெயர்தான் உதைக்கிறது.
கரிகாலன்.
//
ஏன் சார்?
அது சரி நீங்க எப்படி கரிகாலன்ற பெயர்ல ?????????????
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... கண்ணை கட்டுதே...
// karikaalan a dit...
பதிலளிநீக்குpls check my name and my blog. i am writing from 2004. can u do some thing?
thnks
karikaalan
//
நல்லது நண்பரே!
நான் அதற்கான செயலில் இறங்குகிறேன்.
அதற்கு முன் எனக்குள் எழும் சிற்சில கேள்வி்களை தங்கள் முன் வைக்கிறேன்.
கரிகாலன் என்ற பெயரில் http://thamizharpaarvai.blogspot.com ப்ளாகில் எழுதுவதும் தாங்கள் தானோ?
இல்லையென்றே கருதுகிறேன். காரணம், அவர் இந்திய பூர்வீகம் என அறிவித்துக்கொண்டுள்ளார் தன் வலை பதிவில்.
இது தவிர இன்னும் சில கரிகாலன் பதிவர்களையும் google ட்டு
கண்டுகொண்டேன்.
ஆக மொத்தம் எத்தனை கரிகாலன்கள் இந்த வலையுலகில்???
இதுவரை ஏன் உங்களுக்குள் பிரச்சினைகள் வரவில்லை??
இவைகள் வீம்புக்காக கேட்கப்படுகின்ற கேள்விகள் அல்ல. விடை அறியும் ஆவலில் மட்டும்.
நன்றி
கரிகாலன்