ஏசுவின் உயிர்தெழுதல் ???
ஏசுவின் உயிர்த்தெழுதல் ???
அன்பையும், கருணையையும், சமாதானத்தையும் போதிக்கும் எங்கள் மதம் என்று பறை சாற்றிக் கொள்ளும் மதவாதிகள், தங்கள் மதத்தை கேள்வி கேட்கும் ஒருவனை எவ்வளவு கொடூரமாக கொல்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த படத்தில் காணப்படும் Giulio Cesare Vanini.
கிபி 1619 ஆம் ஆண்டு, தனது 34 வது வயதில் பிரான்சு நாட்டின் துளூஸ் நகரில் பொது மக்களின் முன்னிலையில் நாக்கு பிடுங்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுருமாய் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்.
இவர் செய்த மாபெரும் தவறு, இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை கேள்வி கேட்டார் . அது எப்படி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தார்.
பொறுப்பார்களா மதத்தை காக்க வந்த மாமணிகள்.
அவருக்கு தரும் தண்டனையைப் பார்த்து இனி வேறொருவன் இதே போல சிந்திக்கவே பயப்பட வேண்டும்,
மத குருமார்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் அப்படியே அனைவரும் அடி பணிந்து ஏற்றுக்கொள்ள வைக்க கடுமையான தண்டனை தர தீர்மானித்ததின் விளைவே இந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை.
கடவுள் தான் மனிதனைப் படைத்தான், காக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பவர்கள், தங்கள் கடவுளை, புனித புத்தகத்தை, நம்பிக்கையை பற்றி ஒருவன் கேள்வி எழுப்பினால், இவர்கள் தான் கடவுளை காக்க கிளம்பி விடுகின்றனர்.
ஆக மத வெறியாளர்கள், இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் நிறைந்தே இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.
ஆனால் ஒரே ஆறுதல்.
ஆறாம்அறிவைப் பயன்படுத்தி, சிந்தித்து கேள்வி எழுப்புவர்களும் எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.