இன்று ஒரு குறள் !

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

மதவாதம் - ஏசுவின் உயிர்த்தெழுதல் ???

ஏசுவின் உயிர்தெழுதல் ???

                  ஏசுவின் உயிர்த்தெழுதல் ???

 
 

 



அன்பையும், கருணையையும், சமாதானத்தையும் போதிக்கும் எங்கள் மதம் என்று பறை சாற்றிக் கொள்ளும் மதவாதிகள், தங்கள் மதத்தை கேள்வி கேட்கும் ஒருவனை எவ்வளவு கொடூரமாக கொல்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த படத்தில் காணப்படும் Giulio Cesare Vanini.



கிபி 1619 ஆம் ஆண்டு, தனது 34 வது வயதில் பிரான்சு நாட்டின் துளூஸ் நகரில் பொது மக்களின் முன்னிலையில்  நாக்கு பிடுங்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுருமாய் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்.

இவர் செய்த மாபெரும் தவறு, இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை கேள்வி கேட்டார் . அது எப்படி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தார்.

பொறுப்பார்களா மதத்தை காக்க வந்த மாமணிகள்.

அவருக்கு தரும் தண்டனையைப் பார்த்து இனி வேறொருவன் இதே போல சிந்திக்கவே பயப்பட வேண்டும்,

மத குருமார்கள் சொல்வதை  கேள்வி கேட்காமல் அப்படியே  அனைவரும் அடி பணிந்து ஏற்றுக்கொள்ள வைக்க கடுமையான தண்டனை தர தீர்மானித்ததின் விளைவே இந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை.

 

கடவுள் தான் மனிதனைப் படைத்தான், காக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பவர்கள், தங்கள் கடவுளை, புனித புத்தகத்தை, நம்பிக்கையை பற்றி ஒருவன் கேள்வி எழுப்பினால், இவர்கள் தான் கடவுளை காக்க கிளம்பி விடுகின்றனர்.

 

ஆக மத வெறியாளர்கள், இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் நிறைந்தே இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.  

 

னால் ஒரே ஆறுதல்.

 ஆறாம்அறிவைப் பயன்படுத்தி, சிந்தித்து கேள்வி எழுப்புவர்களும் எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.  

5 கருத்துகள்:

  1. நண்பரே,

    இதுவெல்லாம் புனித ரோம் அரசாட்சியில் நடைபெற்ற அக்கிரமங்கள். அப்போது மதம் பெரிய அளவில் சமூகத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது. இதே போன்ற ஒரு நிகழ்வு 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருந்தால் அதைக் குறிப்பிடவும். இப்போது கிருதுஸ்துவம் இந்த முரட்டு முறைகளை விட்டு வெளியே வந்துவிட்டது. யாரும் அதை எந்த அளவுக்கும் கீழே விமர்சிக்கலாம். இயேசு திருமணமானவர் என்று சொன்னாலும் அப்படியா என்று கேட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போகும் ஆட்கள் அதிகமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் காரிகன்,
      தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி !

      அய்யா, நான் எவ்விடத்திலும் கிறிஸ்துவ மத வெறியைப் பற்றி மட்டுமே பேசவில்லை. எனக்கு குஜராத், அரேபிய, ஐரோப்பா, அமெரிக்கா என் எல்லா நாட்டு மத வெறி அரசியலும் எனக்கு ஒன்று தான். இந்த பதிவில் ஏசுவின் உயிர்த்தெழுதல் என தலைப்பிட்டு அந்த சம்பவத்தை எழுத காரணம் :
      1. கடந்த இரண்டு நாட்கள் முன்பு புனித ஞாயிறு - ஏசு உயிர்தெழுந்த நாளாக கூறப்படவை.
      2.இந்த சம்பவம் ச்மீபுத்தில் தான் நான் அறிந்தேன். அதனால் அதற்குரிய நாளில் பதிவு செய்ய எண்ணினேன். கிபி1619 ல் கூட அய்ரோப்பாவில் இப்படி பட்ட மத வெறி இருந்தது எனக்கு அதிர்ச்சி அளித்தது.

      நீக்கு
    2. பின்னோட்டம் நீளமாக போனதினால் துண்டு துண்டாக்கி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் !

      தற்சமயம் கிறிஸ்துவ மத வெறி இல்லை என்கிறீர்கள். உதாரணத்திற்கு டாவின்சி கோட் அய்ரோப்பாவில் வெளியாகி பிரச்சினையின்றி ஓடியது ஆனால் இந்தியாவில் வெளியாக இயலவில்லை.

      இந்தியாவில் தாலி மற்றும் பர்தா அணிவதைப் பற்றி, அதை அணியும் இனத்தை சேர்ந்தவர்களின் கருத்தை கூட தொலைக்காட்சி பதிவு செய்ய இயலாத அவல நிலை. இதில் கிறிஸ்தவர்களின் நாடான அய்ரோப்பாவில் டாவின்சி கோட் ஓடியது உங்களின் கருத்திற்கு வலு சேர்க்கிறது

      நீக்கு
    3. அதன் காரணமாக நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மை எனப் பட்டாலும், தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது என்று ஐ நா சபை அனுமதி மறுத்த் நிலையிலும் அமெரிக்காவின் நேச நாடுகள் படை ஈராக்கை துவம்சம் செய்து சதாம் ஹுசனை தூக்கிலிட்டது வெறும் அமெரிக்காவின் பெற்றோல் அரசியல், புஷ்ஷின் தனிப்பட்ட பழி வாங்கல் உணர்ச்சி என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதை நம்ப கடினமாக இருக்கிறது

      நீக்கு
  2. ,இருக்கும் ஆறாம் அறிவையும். இருப்பதாக சொல்லப்படும் ஏழாம் அறிவையும் தாங்கள் கேடுகெட்ட தீய நோக்கங்களுக்குத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் மதவாதிகள்.

    பதிலளிநீக்கு