நான் போன இடுகையில் எழுதிய மாதிரியே முன்னாள் மந்திரி கே என் நேருவின் தம்பி கொலை வழக்கில், போலீஸ் ஒரு இஞ்ச் கூட முன்னேறியது மாதிரி தெரியவில்லை. இன்னமும் துப்பு துலக்குகிறார்களாம். இதில் அம்மா ஆட்சிக்கு வந்ததால் சட்டம் ஒழுங்கு ரொம்ப சீர்பட்டு விட்டதாக பெருமைமிகு பிரசாரம் வேறு.
மதுரை கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் க்கு மாற்றம் செய்ய பட்டிருக்கிறார்.
திறமை மிகுந்த, ஊழலற்ற, மக்கள் நலனை முதன்மையானதாக கருதிய கலெக்டர் என் சாதாரண உழைக்கும் மக்களால் அனுமானிக்கப்பட்ட திரு சகாயம், ஒரு உப்பு சப்பில்லாத துறைக்கு திடீரென மாற்றப்பட்டதன் மர்மம் என்னமோ ???!!!
பொதுவாக சில வருடங்களாக, ஜனவரி மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தமிழ் வருட பிறப்பு எதுவென்று நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் மே மாதமான இந்த மாதத்தில், ஓரிரு நாட்களுக்கு முன் இதைப் பற்றி இடுகை ஒன்றை படிக்க நேர்ந்தது.
அதில் தமிழ் புத்தாண்டை தை மாதம் முதல் தேதியாக அறிவித்த கருணா்நிதி செய்தது சரி என்றும் அதை திரும்ப சித்திரை ஒண்ணுக்கு மாற்றிய ஜெயலலிதா செய்தது ஆர்ய சூழ்ச்சி என்றும் சொல்லப்பட்டிருந்தது.
மேலும் அப்படி தமிழ் புத்தாண்டை மாற்றிய ஜெவை கண்டிக்காத தமிழறிஞர்களையும் அது சாடி இருந்தது.
இதை பார்த்ததும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்
இதற்கு மட்டுமா தமிழறிஞர்கள் மவுனியாக இருக்கின்றனர் அண்ணா நூலக மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைக்கும் தானே. அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்!
எதிர்கட்சியின் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நம்ம அஞசாநெஞ்சன் அண்ணாச்சியே மம்மியை பார்த்து பம்மி கிட்டு இருக்கும்போது எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாத தமிழ் அறிஞர்கள் என்ன செய்ய இயலும்?
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே
சித்திரை யோ தை யோ புத்தாண்டை கொண்டாட விட்ட சரி தான்
பதிலளிநீக்குசகாயம் யாரோ ஒரு மந்திரிக்கு சகாயம் பண்ணலயாம் யாரோ சொன்னாங்க
தா பா கி, ஆலடி அருணா, இப்ப ராமஜெயம் அடுத்து யாருன்னு எதிர்பார்க்காம போனதையே நெனைச்சிக்கிட்டு சுத்த சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு ;-)
வாங்க கோணங்கி சார், நலமா?
நீக்குஎங்க ஆளையே காணோம்
//தா பா கி, ஆலடி அருணா, இப்ப ராமஜெயம் அடுத்து யாருன்னு எதிர்பார்க்காம//
ஐயய்யோ!
அடப்பாவிகளா அடுத்து என்ன படம் ரிலீஸுன்னு பார்க்கிற மாதிரி இதையும் எதிர் பார்த்து கிட்டே இருக்கீங்களா
ஸாரி கொணங்கி சார் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்
வாங்க உறவே!
பதிலளிநீக்குஇணைச்சிட்டா போச்சி
தகவலுக்கு நன்றி!
தமிழறிஞர்கள் நிலை தான் இப்படியென்றால் தமிழ் பகுத்தறிவாளர்கள் நிலை? தருமி கோவி சார்வாகன் வவ்வால் போன்ற மிக சிலரை தவிர தமிழ் பகுத்தறிவாளது நிலையும் ரொம்ப பரிதாபம் நண்பரே.
பதிலளிநீக்குவாங்க நண்பரே,
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதும் உண்மைதான்!
நீங்கள் ஓசை வலைப்பதிவு பக்கம் போய் பாருங்களேன் போலி பகுத்தறிவுவாதிகளை எப்படியெல்லாம் பெண்ட் எடுக்கிறாரென்று :)