ஜெவுக்கம் கலைஞருக்கும் எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரு விஷயத்திம் மட்டுமே ஒற்றுமையுண்டு அது என்னான்னு அப்புறம் சொல்றேன்.
மற்றபடி இருவரும் செயல்பாடுகளும் வெவ்வேறு வகையானது.
ஜெவின் செயல்களில் 'நான்' என்ற ஆணவம் இருந்தாலும், வழ வழா கொழ கொழா என்று இருக்காது. எப்போதும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.
அது விடுதலைபுலிகள் இயக்க எதிர்ப்பு ஆகட்டும் வீரப்பன் என்கவுண்டர் ஆகட்டும்
இன்னும் சங்கராச்சாரியார் கைது, வாஜ்பாயி ஆட்சி கவிழ்ப்பு, பிரபாகரன் கைது தீர்மானம், பொடா அரசு ஊழியர் சாலைப்பணியாளர் பிரச்னைகள் என்று தொடர்ந்து
இப்போது தலைமைசெயலகம் மாற்றம், சமச்சீர் கல்வி கைவிடும் முயற்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மக்கள் என்ன நினைப்பார்கள், மீடியா என்ன சொல்வார்கள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல், தான் நினைத்தபடி ஒரு முடிவு எடுத்து அதில் உறுதியாய் நிற்பது அவரது தனி ஸ்டைல்.
ஆனால் கலைஞரோ எவ்வளவு முக்கியமான பிரச்னையிலும் தன்னுடைய முடிவை தெளிவாக அறிவித்து அதை முன்னெடுக்க இயலாமை
சட்ட எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு பின் நீதிமன்றத்தில் ஒரு காகிதத்தைதான் எரித்தோம் என்று கூறுதல்
சங்கராச்சாரியார் வழக்கு மொக்கையாகும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு பக்கம் மத்திய அரசில் பங்கெடுத்துக்கொண்டே இன்னொருபக்கம் ஈழப்போருக்கான போராட்டங்கள் நடத்துதல்
நான்கு மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டு இறுதியில் போர் நின்றுவிட்டது என்ற பொய்யாக அறிவித்தல்
இப்படி பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க மல்டி ரோல்களில் மிளிர்வது கலைஞர் ஸ்டைல்.
ஆனால் இப்போது அது ஈழத்தமிழர் விஷயத்தில் இளித்துக்கொண்டு போய்விட்டது என்பது வேறு விஷயம்
இப்படியிருக்க
சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 3 பேரின் உயிர் போகும் பிரச்சினையில் ஜெ கலைஞர் போல மங்காத்தா ஆடியிருக்கிறார்.
கடந்த மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய சொல்லி மத்திய அரசைக்
கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியவர்,
இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மூவரின் மரண தண்டனை ரத்து செய்ய கோரும் வழக்கில், மனுவையே தள்ளுபடி செய்யும்படி ஜெவின் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.
என்ன ஒரு தெளிவு அம்மையாருக்கு!
தமிழர்களை ஏமாற்றும் விஷயத்தில் ஜெவும் கலைஞரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைகோவும் அறிக்கை விட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை ஜெவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
பொதுவாக ஜெவின் அல்லக்கைகள் அவர் பெயர் போட்டு அடிக்கும் சுவரொட்டிகளில் "புரட்சிதலைவி அம்மா" அவர்கள் என்றே குறிப்பிடுவர்.
இனி அதை மாற்றி "கலைஞர் அம்மா" அவர்கள் என்று குறிப்பிட்டாலும்
பொருத்தமாகவே இருக்கும்
டிஸ்கி : ஜெவுக்கம் கலைஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, 'மக்களை ஏமாற்றி சுரண்டுவது' என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னா, உங்களுக்கு இவங்க நிச்சயமா தேவைதான்.
வேற என்னத்த சொல்ல :-(
//பொதுவாக ஜெவின் அல்லக்கைகள் அவர் பெயர் போட்டு அடிக்கும் சுவரொட்டிகளில் "புரட்சிதலைவி அம்மா" அவர்கள் என்றே குறிப்பிடுவர்.
பதிலளிநீக்குஇனி அதை மாற்றி "கலைஞர் அம்மா" அவர்கள் என்று குறிப்பிட்டாலும்
பொருத்தமாகவே இருக்கும்//
"புரட்சி கலைஞி அம்மா"
இது இன்னும் நல்லாயிருக்குமே.
அப்புறம் பின்னூட்ட பகுதியில இருக்க ஆங்கில எழுத்துக்களெல்லாம் ஏதோ புரியாத வார்த்தைகளில் இருக்கிறதே?
வாங்க நண்பர் சேக்காளி,
பதிலளிநீக்கு//பின்னூட்ட பகுதியில இருக்க ஆங்கில எழுத்துக்களெல்லாம் ஏதோ புரியாத வார்த்தைகளில் இருக்கிறதே?//
சரி பண்ணிட்டேன் நண்பரே
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்ல விமர்சனம்..நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
பதிலளிநீக்குஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
வருகைக்கு நன்றி ரிஷ்வான்
பதிலளிநீக்கு//என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்//
வந்து பார்க்கிறேன்