இன்று ஒரு குறள் !

வெள்ளி, அக்டோபர் 21, 2011

சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனது கடும் கண்டனங்கள்!







எங்கள் ஊரில், தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறான் பாருய்யா என்று பழமொழி சொல்ல கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் மேலோடு புரிந்திருந்தாலும், இன்றுதான்  முழு வீச்சோடு உணர முடிந்தது.




சவுதி அரேபியாவில் யாருடைய கோரிக்கையையோ ஏற்று தமிழ்மணத்தை தடை செய்து விட்டார்களாம்.



"தமிழ்மணமே மன்னிப்பு கேள் இல்லாவிடில் உன்னை இஸ்லாமிய நாடுகளில் தடை செய்வேன்" என்ற  உணர்ச்சி மிகையான வரிகளை பதிவுகளில் கண்டபோது ஏதோ கோபத்தில் கண் மண் புரியாமல் எழுதுகிறார்கள் என்றே பல அப்பாவி பதிவர்களை போலவே நானும் நினைத்திருந்தேன்.



ஆனால் அது கோபத்தில் தவறி வந்த வார்த்தையல்ல ஆழ்மனதின் தங்கியிருந்த, பழி வாங்கியே தீர்க்கும் வஞ்சத்தில்  இருந்து  வெளியான விஷமென்று இப்போது அறிய முடிகிறது.



இப்படி தடை வாங்கியதால் அவர்களுக்கு என்ன பெரிதாய் கிடைத்து விடப்போகிறது அல்ப சந்தோஷத்தை தவிர.



இதற்கு பதில் இந்த திரட்டியே வேணாம்னு உதறி தள்ளிட்டு போயிருந்தாலும் கூட அவர்களின் வீரத்தை பாராட்டலாம்.

ஆனால் என்னதான் தமிழ்மணத்தின் மீது கோபம் கொண்டு கண்டன பதிவு இட்டு இருந்தாலும், சவுதியில் தடை செய்ததை அறிந்தவுடனே பதிவின் மூலம்  பிறருக்கு அறிவித்து விட்டு, தானே இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது, அந்த தடையை நீக்ககோரி மனு செய்து அதனை பிறரும் பின்பற்றும் வண்ணம் லிங்க் கொடுத்து பதிவிட்ட நண்பர் பதிவர் ஹைதர் அலியின் நேர்மை பாராட்டுக்குரியது

அந்த பதிவு :  http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_19.html



சவுதியில் உள்ள நேர்மையான தமிழர்களே , உங்கள் பங்கிற்கு இந்த லிங்கில் சென்று தமிழ்மணத்தை தடை நீக்க ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்.





இதில் புரியாத விஷயம் என்னவென்றால், யாரோ எதுவோ சொன்னால் அது என்ன ஏதுவென்று விசாரிக்காமலே, நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு  பலவீனமானதா சவுதி அரசாங்கம்?



அப்படியானால் நமக்கு பிடிக்கதவன் எவனையாவது சவுதி போலீஸிடம் கூட்டிசென்று, இவன் நம்ம மார்க்கத்தை பற்றி தவறாக கதைத்தான் என்று கூறினால் அவன் கதை அவ்வளவுதானா  :-(



என்ன நாடோ என்ன அரசாங்கமோ போங்க

38 கருத்துகள்:

  1. நல்ல பதிவு
    சவுதி மட்டுமல்ல பாகிஸ்தான் உடப்பட்ட பல நாடுகளில் மதம் விமர்சிக்கப்பட்டது என்னும் ஒரு குற்றச்சாட்டு ஒருவரை,நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு தண்டனையும் கொடுக்கப் பட போதுமானது.இதனால் தமிழ்மணத்திற்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மணம் சார்பா பேசுவதாக சொல்லி ஒருவர் கண்டப்படி ஆபாசமா பேசுனதுக்கு தான் எல்லாரும் போராட்டம் நடத்தினார்கள். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். தனி ஆளு பேசிருந்தா யாரு கண்டுகொண்டிருப்பார்கள். ஆனா தமிழ்மணம் தங்களுக்கும் அவர் நடந்துக்கொண்டதற்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லிட்டாங்க. தமிழ்மண நிர்வாகி என்று குறிப்பிட்டு அவர் ஏற்படுத்திய குழப்பத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ்மணமும் அறிவித்துவிட்டது. பெரியவர் வாஞ்சூரும் தமிழ்மண நிர்வாகி சங்கரபாண்டியின் விளக்கத்திற்கு நன்றி சொல்லிவிட்டு முஸ்லிம்களை பிரச்னையை முடிக்குமாறு அழைப்புவிடுத்தார். சமீபத்தில் தமிழ்மணத்திற்கு இந்த பிரச்னையை முடித்து கொள்வோம் என்று சொல்லி மெயில் அனுப்பிவிட்டதாக வாஞ்சூர் கம்மேண்டுகளில் தெரிவித்ததை பார்த்தேன். பிரச்சன முடிஞ்சது.

    எனக்கு ஒன்று புரியவில்லை. தமிழ்மண நிர்வாகி தப்பு செய்தார். போராடினாங்க. தமிழ்மணத்தில் இருந்து விலகிவிட்டு தான் போராடும்னு ஏன் சில பேர் ஆசைப்படுகிறார்கள். தப்பு செய்தா விலகிவிட்டு தான் போராடுனுமா. என்னப்பா நியாயம் இது. நிறுவனம் தவறு செய்தால் அதிலே வேலை செய்றவங்கள வேலை விட்டு போயிட்டு அப்புறம் போராடுனு சொல்ற மாதிரி இருக்கு.

    எது எப்படியோ பிரச்சனை முடிந்தது. சவூதி தடைக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. //பிளாகர் சார்வாகன் கூறியது...

    நல்ல பதிவு
    சவுதி மட்டுமல்ல பாகிஸ்தான் உடப்பட்ட பல நாடுகளில் மதம் விமர்சிக்கப்பட்டது என்னும் ஒரு குற்றச்சாட்டு ஒருவரை,நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு தண்டனையும் கொடுக்கப் பட போதுமானது.இதனால் தமிழ்மணத்திற்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.
    நன்றி//

    வாங்க சார்வாகன்,

    சவுதி, பாகிஸ்தான் இன்ன பிற இஸ்லாமிய நாடுகளில் தங்கள் மதத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு தண்டனை தரும் என்பது நானும் அறிந்ததே.
    என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ குற்றம் சாட்டினால் தீர விசாரித்து உண்மை அறியாமல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தை தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே!

    நிச்சயமாக தமிழ்மணத்திற்கு இதனால் நஷ்டம் ஒன்றுமில்லை.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. வாங்க டெஸ்ட் அண்ணே!

    //தமிழ்மணம் சார்பா பேசுவதாக சொல்லி ஒருவர் கண்டப்படி ஆபாசமா பேசுனதுக்கு தான் எல்லாரும் போராட்டம் நடத்தினார்கள். மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.//

    பேசியவர் தன் கருத்தாகவே பேசியதாக சொன்னார் பேசியதன் நோக்கமும் பகடிக்காகவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல என்றும் தெளிவு புடுத்தி விட்டார்.
    தமிழ்மணத்தின் சார்பிலும், அனைத்து நிர்வாகிகளும் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்தது. அதை ஏற்று பல இஸ்லாமிய பதிவர்களும் தமிழ்மணத்தில் மீண்டும் இணைந்தும் விட்டார்கள்.
    பிறகு எதற்கு இந்த வேண்டாத வேலை (செய்தவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்) :(

    பதிலளிநீக்கு
  5. //எனக்கு ஒன்று புரியவில்லை. தமிழ்மண நிர்வாகி தப்பு செய்தார். போராடினாங்க. தமிழ்மணத்தில் இருந்து விலகிவிட்டு தான் போராடும்னு ஏன் சில பேர் ஆசைப்படுகிறார்கள். தப்பு செய்தா விலகிவிட்டு தான் போராடுனுமா.//

    அய்யா, தமிழ்மணம் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்த பிறகும் திருப்தி இல்லையென்றால் தமிழ்மணத்தை தூக்கி எறிந்து விட்டு போய் வலைப்பூ நடத்த வேண்டியது தானே. ஏன் அதை விட்டு விட்டு இஸ்லாமிய அரசுகளிடம் கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் தான் நான் சொன்னேன்.

    தங்களுக்கு சரியாக புரிந்திடாத பட்சத்தில், மற்றோருக்கு சரியான புரிதல் தரும்படி என்னால் எழுத இயலவில்லை என்றே கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. // எது எப்படியோ பிரச்சனை முடிந்தது. சவூதி தடைக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.//

    தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //பிளாகர் அருள் கூறியது...

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html//

    வாங்க அருள் சார், நலமா!
    இன்று நேரமில்லை நாளை கண்டிப்பாக தங்கள் தளம் வருகிறேன்.

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10/22/2011 12:26:00 AM

    பெரியவர் வாஞ்சூரா?

    அந்தப் பய தான் இத்தனைக்கும் காரணம். இப்போ தன் குல வழக்கப்படி இது முஸ்லீம் இல்லாதவன் செய்த தடையா இருக்குமுன்னு கதை விடுறான்.

    அவனே சொல்லிருக்கான், சவுதி இஸ்லாமிய அமைப்பிலே பதிவு செய்த கம்பெனி லெட்டர் அனுப்பினா தடை உண்டு அப்படீன்னு. அப்புறம் எப்படி வெண்ணை முஸ்லீம் இல்லாதவன் செய்திருக்க முடியும்?

    வழக்கமா குண்டு வெச்சிட்டு அடுத்தவன் மேலே புகார் கொடுக்கும் வழியையே இதிலேயும் பின்பற்றுகிறான். அவனெல்லாம் பெரியவனா?

    பதிலளிநீக்கு
  9. //பெரியவர் வாஞ்சூரா?

    அந்தப் பய தான் இத்தனைக்கும் காரணம். இப்போ தன் குல வழக்கப்படி இது முஸ்லீம் இல்லாதவன் செய்த தடையா இருக்குமுன்னு கதை விடுறான்.//

    பெயரில்லா நண்பரே,
    இது நான் கூறியது அல்ல. நண்பர் 'test' கூறியது. இது அவருக்கான பதில் என்றே எடுத்துக் கொள்கிறேன்.

    என் சார்பாக ஒரு ஸ்மைலி மட்டும்
    ;-)

    பதிலளிநீக்கு
  10. //தமிழ்மணமே மன்னிப்பு கேள் இல்லாவிடில் உன்னை இஸ்லாமிய நாடுகளில் தடை செய்வேன் என்ற உணர்ச்சி மிகையான வரிகளை பதிவுகளில் கண்டபோது ஏதோ கோபத்தில் கண் மண் புரியாமல் எழுதுகிறார்கள் என்றே பல அப்பாவி பதிவர்களை போலவே நானும் நினைத்திருந்தேன்.//
    நீங்க சாந்தி சமாதானம் என்ற போலி கோசங்களை நம்பும் படு அப்பாவியாக இருப்பீர்கள் போல் இருக்கிறது.

    இதில் புரியாத விஷயம் என்னவென்றால் யாரோ எதுவோ சொன்னால் அது என்ன ஏதுவென்று விசாரிக்காமலே நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பலவீனமானதா சவுதி அரசாங்கம்?
    இஸ்லாம் மதவாதத்தை தவிர எதுவும் அற்றது சவுதி அரசாங்கம்.

    அப்படியானால் நமக்கு பிடிக்கதவன் எவனையாவது சவுதி போலீஸிடம் கூட்டிசென்று இவன் நம்ம மார்க்கத்தை பற்றி தவறாக கதைத்தான் என்று கூறினால் அவன் கதை அவ்வளவுதானா
    இஸ்லாம் சொல்லும் சமாதானம் சாந்தி அவ்வளவுதான். இஸ்லாம் மத அரசு பலவீன அரசு, இஸ்லாமிய மத வெறி அவ்வளவே

    என்ன நாடோ என்ன அரசாங்கமோ போங்க
    அதே தான் நண்பா!

    பதிலளிநீக்கு
  11. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா கரிகாலன்

    இன்னும் சில கருத்துகளையும் சொல்ல வேண்டும்.

    ^^^ஆனால் அது கோபத்தில் தவறி வந்த வார்த்தையல்ல ஆழ்மனதின் தங்கியிருந்த, பழி வாங்கியே தீர்க்கும் வஞ்சத்தில் இருந்து வெளியான விஷமென்று இப்போது அறிய முடிகிறது.^^^

    என்ன பழி தீர்ப்பது. எதுக்காக பழி தீர்க்கணும்.நீங்களும் உணர்சிவசத்தில் பேசிருக்கிண்றீர்கள் என்று எண்ணி கடந்து போறேன்.

    ^^^நண்பர் பதிவர் ஹைதர் அலியின் நேர்மை பாராட்டுக்குரியது^^^

    நண்பர் ஹைதர் அலி மட்டுமல்ல, சுவனப்பிரியன் அப்துல்காதர் போன்றவர்களும் இது குறித்து பதிவு போட்டிருக்காங்க.

    ^^^நிச்சயமாக தமிழ்மணத்திற்கு இதனால் நஷ்டம் ஒன்றுமில்லை.^^^

    தவறு நண்பா. சற்று சிந்தித்தாலே தமிழ்மணத்திற்கு இதனால் சிறிதளவேனும் நஷ்டம் உண்டு என்பதை புரிஞ்சிக்களாம். கட்டண பதிவு என்று பகுதி வைத்து பதிவர்களிடம் காசு வாங்குது தமிழ்மணம். இத்தன impressions நிச்சயம் என்று சொல்லித்தான் விளம்பரம் பண்ணுறாங்க. ஆக அவங்க தளத்துக்கு வர்ற ஹிட்ஸ் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு அடுத்தாப்புல அதிகமான மக்கள் வருவது வளைகுடா நாடுகளில் இருந்துதான். அதிலும் சவூதி அமீரகம் போன்றவை ரொம்ப முக்கியம். உங்களுக்கு எந்த நாட்டுல இருந்து நிறைய பேரு வந்திருக்காங்கன்னு எந்த பதிவரு கிட்ட கேட்டாலும் அதுல சவூதி முதல் ஐந்து இடத்துல இருக்கும். என் பதிவுலக நண்பர்கள் அப்படிதான் சொல்லிருக்காங்க. அதனால நிச்சயமா தமிழ்மணத்துக்கு வர்ற ஹிட்ஸ் கணிசமா குறையும். அதனால impressions வச்சு வாரண்டி கொடுக்குரதுக்கும் பிரச்சன வரும். எவ்வளவு சீக்கிரம் தட நீங்குதோ அதுதான் தமிழ்மணத்திற்கு நல்லதுன்னு நான் நினைக்குறேன்.

    பதிலளிநீக்கு
  12. தமிழ்மணம் இஸ்லாமியப் பதிவர்களிடம் மன்னிப்பு கேட்காதது நல்ல விஷயம். இல்லையென்றால் ஒவ்வொரு உப்பு சப்பில்லாத விஷயத்திற்கும் கும்பலாக வந்து மிரட்டுவார்கள். இஸ்லாமிய இணைய பயங்கரவாதத்தை கருத்து சுதந்திரத்தையும் (ஹிட்சை விட) தன்மானத்தையும் பெரிதாக நினைப்பவர்கள் அனைவரும் எதிர்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. ரொபின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா10/22/2011 06:18:00 PM

    thamizsasi elutiyatu
    test tamilmanam impressions patthi kavala pattaunu thonuthu. neenga alatgateenga

    வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம், நக்கீரன் போன்ற தளங்களே இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தமான உண்மை. தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச் செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க நண்பர் thequickfox அவர்களே

    பிளாகர் thequickfox கூறியது...

    //நீங்க சாந்தி சமாதானம் என்ற போலி கோசங்களை நம்பும் படு அப்பாவியாக இருப்பீர்கள் போல் இருக்கிறது.

    ரொம்ப்ப்ப்ப்ப்பபப அப்பாவியோ.....
    அவ்வ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  16. பிளாகர் thequickfox கூறியது...

    //இஸ்லாம் மதவாதத்தை தவிர எதுவும் அற்றது சவுதி அரசாங்கம்//

    //இஸ்லாம் சொல்லும் சமாதானம் சாந்தி அவ்வளவுதான். இஸ்லாம் மத அரசு பலவீன அரசு, இஸ்லாமிய மத வெறி அவ்வளவே //

    ஓ.. அப்படியா!
    புரியுது புரியுது

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் நல்வரவு test.

    பிளாகர் test கூறியது...
    //என்ன பழி தீர்ப்பது. எதுக்காக பழி தீர்க்கணும்.நீங்களும் உணர்சிவசத்தில் பேசிருக்கிண்றீர்கள் என்று எண்ணி கடந்து போறேன்//
    நண்பரே, இதை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்ல முடியும்.
    சம்பந்தப்பட்ட நபர், தான் அவர்களை நினைத்து இந்த வார்த்தை பகடிதனை செய்யவில்லை எனக்கூறியும், தமிழ்மண நிர்வாகிகள் அனைவரும் இது தமிழ்மனத்தின் கருத்தல்ல என அறிவித்து நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தும், பிரச்ச்னையை விட்டுத் தள்ளாமல் சவுதி அரசுக்கு மனு செய்த அவர்கள் அல்லவா கேட்க வேண்டும் என்ன வஞ்சமென்று?

    பதிலளிநீக்கு
  18. //பிளாகர் test கூறியது...
    தவறு நண்பா. சற்று சிந்தித்தாலே தமிழ்மணத்திற்கு இதனால் சிறிதளவேனும் நஷ்டம் உண்டு என்பதை புரிஞ்சிக்களாம். கட்டண பதிவு என்று பகுதி வைத்து பதிவர்களிடம் காசு வாங்குது தமிழ்மணம். இத்தன impressions நிச்சயம் என்று சொல்லித்தான் விளம்பரம் பண்ணுறாங்க. ஆக அவங்க தளத்துக்கு வர்ற ஹிட்ஸ் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு அடுத்தாப்புல அதிகமான மக்கள் வருவது வளைகுடா நாடுகளில் இருந்துதான். அதிலும் சவூதி அமீரகம் போன்றவை ரொம்ப முக்கியம். உங்களுக்கு எந்த நாட்டுல இருந்து நிறைய பேரு வந்திருக்காங்கன்னு எந்த பதிவரு கிட்ட கேட்டாலும் அதுல சவூதி முதல் ஐந்து இடத்துல இருக்கும். என் பதிவுலக நண்பர்கள் அப்படிதான் சொல்லிருக்காங்க. அதனால நிச்சயமா தமிழ்மணத்துக்கு வர்ற ஹிட்ஸ் கணிசமா குறையும். அதனால impressions வச்சு வாரண்டி கொடுக்குரதுக்கும் பிரச்சன வரும். எவ்வளவு சீக்கிரம் தட நீங்குதோ அதுதான் தமிழ்மணத்திற்கு நல்லதுன்னு நான் நினைக்குறேன்//

    இதற்கான பதிலை, ஒரு அனானி நண்பர் தன் கருத்துரையில் கூறியிருக்கிறார். பார்த்து கொள்ளவும்.

    மீண்டும் வருகைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  19. //Robin சொன்னது…
    தமிழ்மணம் இஸ்லாமியப் பதிவர்களிடம் மன்னிப்பு கேட்காதது நல்ல விஷயம். இல்லையென்றால் ஒவ்வொரு உப்பு சப்பில்லாத விஷயத்திற்கும் கும்பலாக வந்து மிரட்டுவார்கள். இஸ்லாமிய இணைய பயங்கரவாதத்தை கருத்து சுதந்திரத்தையும் (ஹிட்சை விட) தன்மானத்தையும் பெரிதாக நினைப்பவர்கள் அனைவரும் எதிர்க்கவேண்டும்.//

    வாங்க நண்பர் robin,
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. //ஒவ்வொரு உப்பு சப்பில்லாத விஷயத்திற்கும் கும்பலாக வந்து மிரட்டுவார்கள்//
    இதிலிருந்தே நடந்த விஷயம் உப்பு சப்பில்லாதது என் நீங்கள் கூறுவதாக நான் கொள்கிறேன்.

    //இணைய பயங்கரவாதத்தை கருத்து சுதந்திரத்தையும் (ஹிட்சை விட) தன்மானத்தையும் பெரிதாக நினைப்பவர்கள் அனைவரும் எதிர்க்கவேண்டும்//

    ஒத்துப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  21. நண்பர்கள் robin and thequickfox,

    உங்களின் கணிப்பில் தவறு இருப்பதாவே எனக்கு படுகிறது.

    இனி மீண்டும் மீண்டும் இதுபோல் நடக்கவே சாத்தியம் அதிகம் இருப்பதாக எனக்கு படுகிறது.

    என் கணிப்பு தவறினால் மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா10/23/2011 11:26:00 AM

    எந்த இஸ்லாமிய நாட்டில் சட்ட திட்டங்கள் அறிவு பூர்வமாக இருக்கின்றன? நாட்டை போல மக்கள் மக்களை போலவே நாடு

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா10/23/2011 11:28:00 AM

    இத்தனைக்கு இந்திய இஸ்லாமியர்கள் அரேபிய நாட்டில் எத்தனை வருடங்கள் இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. இப்படி இருக்கும் போதே இதை போல அப்பாடாக்கர்கள் செய்யும் வேலையை பார்த்தால் அய்யோ

    நல்ல வேளை இந்தியா இஸ்லாமிய குடியரசாக ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா10/23/2011 12:38:00 PM

    //நல்ல வேளை இந்தியா இஸ்லாமிய குடியரசாக ஆகவில்லை//

    ஆஹா..
    சகோ ஒரு சின்ன விண்ணப்பம்
    "ஐயோ, இந்தியா இன்னமும் இஸ்லாமிய குடியரசாக ஆகவில்லையே"
    என்று திருத்தி எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் தோழரே,
    இப்போதான் உங்க பதிவ பாத்தேன்
    நான் ஏற்கனவே கீழ்கண்ட பதிவில எழுதினத மீண்டும் இங்க ரிப்பிட்டிக்கிறன்
    http://mabdulkhader.blogspot.com/2011/10/blog-post_20.html

    "எல்லாம் ஒரு குரூப்பாய் தான் இருக்காய்ங்க போல
    புள்ளையும் கிள்ளியாச்சி தொட்டிலையும் ஆட்டியாச்சி"
    வர்ட்டா

    பதிலளிநீக்கு
  26. //ஆஹா..
    சகோ ஒரு சின்ன விண்ணப்பம்
    "ஐயோ, இந்தியா இன்னமும் இஸ்லாமிய குடியரசாக ஆகவில்லையே"
    என்று திருத்தி எழுதுங்கள்//

    அடப்பாவிகளா
    இப்படியெல்லாம் அஜெண்டா வச்சிரிக்கிங்களா

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா10/23/2011 01:08:00 PM

    //ஆஹா..
    சகோ ஒரு சின்ன விண்ணப்பம்
    "ஐயோ, இந்தியா இன்னமும் இஸ்லாமிய குடியரசாக ஆகவில்லையே"
    என்று திருத்தி எழுதுங்கள்//

    எதுக்கு எங்க குண்டு வைச்சாலும் அல்லா வைக்க சொன்னாரு சொல்லி ஜல்சா செய்யவா. போங்கடா லூசு பசங்களா போயி புல்ல குட்டிகளை படிக்க வைங்கடா

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா10/23/2011 01:13:00 PM

    சவூதி நாட்டில் மண்டையில் மூளை இல்லாதவன் எல்லாம் இண்டர்நேட் பஞ்சாயத்து செய்யாறங்கபா.

    பதிலளிநீக்கு
  29. கருத்துரையிட்ட அனைத்து பெயரில்லாத நண்பர்களுக்கும், நண்பர் புதிய கோணங்கிக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  30. நண்பர் test,
    தங்களது இரண்டாம் முறை இட்ட பின்னூட்டத்தை எனது ஜிமெயிலில் இப்போது தான் பார்த்தேன். பின் என் வலைப்பக்கத்தை திறந்தால் தங்களின் முந்தைய பின்னூட்டத்தை போலவே அங்கு இல்லை இத்தனைக்கும் நான் மட்டுறுத்தல் option வைத்திருக்கவில்லை. பின்னூட்டம் பிரசுரம் ஆவாததற்கான காரணம் தெரியவில்லை. இதோ எனது gmailலிருந்து copy paste செய்துவிட்டேன்.

    -அன்புடன்
    கரிகாலன்

    test noreply-comment@blogger.com à moi

    afficher les détails 23 oct. (Il y a 1 jour)

    test உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனத...":

    நண்பர் ராபின்

    \தமிழ்மணம் இஸ்லாமியப் பதிவர்களிடம் மன்னிப்பு கேட்காதது நல்ல விஷயம்\

    அவசியமில்லை நண்பரே. தமிழ்மணம் சார்பா என்று குறிப்பிட்டு ரமணிதரன் ஏற்படுத்திய குழப்பத்துக்கு தமிழ்மணம் வருத்தம் தெரிவித்து விட்டதா சங்கரபாண்டி சொல்லிருக்கார். எப்போ தங்களுக்கு இதில் சம்பந்தமில்லைனு பொதுவுல சொல்லி வருத்தம் தெரிவிச்சாங்கலோ அதுவே இந்த பிரச்சனையில் போராடிய அனைத்து பதிவர்களுக்கும் வெற்றிதான். ஏன்னா தனி ஆளு சொல்லிருந்தா முஸ்லிம்களோ அல்லது மற்ற பதிவர்களோ இந்த பிரச்சனைய பெரிசாக்கி இருக்க மாட்டாங்க. யாரோ ஒரு ஆளு ஏதோ சொல்றாருன்னு போயிருப்பாங்க. பிரச்சன இந்த அளவுக்கு வந்திருக்காது. அதனால எப்போ தமிழ்மணம் வருத்தம் தெரிவிச்சதோ அப்பவே போராடிய எல்லா பதிவர்களும் வெற்றியடைஞ்சுட்டாங்க.

    இந்த போராட்டம் சாதித்த விஷயங்கள் ஏராளம். தமிழ்மணத்த வருத்தம் தெரிவிக்க வைத்தது, ரமணிதரனின் பேச்சு தோரனை முற்றிலும் மாறி இருப்பது, தமிழ்மணம் இல்லேன்னா என்ன என்ற எண்ணம் வந்திருப்பது. இப்படி பல. சசி சொன்னது போல இந்த பிரச்சனைய உச்சத்திற்கு கொண்டு போனது முஸ்லிம் பதிவர்கள் தான். ஒரு வேலை முஸ்லிம் பதிவர்கள் போராட்டத்துல குதிக்காம இருந்திருந்தா தமிழ்மணம் இறங்கி வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த வகைல முஸ்லிம் பதிவர்கள் வெற்றிய அடைந்சுட்டாங்கன்னு தான் சொல்லணும்.

    நண்பர் பெயரில்லா,

    \thamizsasi elutiyatu
    test tamilmanam impressions patthi kavala pattaunu thonuthu. neenga alatgateenga\

    இதுல அலட்டி கொள்வதற்கு ஒண்ணுமில்ல நண்பா. தடைனால தமிழ்மணத்துக்கு இருக்க கூடிய நடைமுறை பிரச்சனைய தான் சொன்னேன். சசி பொருளாதார பிரச்சனை பத்தி சொல்றது வருத்தமா இருந்தாலும் இந்த தடை மூலமா அது இன்னும் மோசமாகுமொன்னு நினைக்கின்றேன். தங்கள் பதிவுகளை கட்டண பதிவா மாத்த நினைக்குற பதிவர்கள் சவுதி தடைனால இப்ப தயங்கலாம். இல்ல கட்டணத்த குறைக்க சொல்லி தமிழ்மணத்திடம் சொல்லலாம். இங்க சிலர் இந்த தடையால தமிழ்மணத்திற்கு பிரச்சன இல்லேன்னு சொன்னதால தான் என்னோட கருத்த சொன்னே. கொஞ்சம் யோசிச்சாலும் எளிதா புரியுற விசயம் இது.



    23 அக்டோபர், 2011 8:33 am அன்று எழுத்தில் எண்ணங்கள் ! இல் test ஆல் உள்ளிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  31. test noreply-comment@blogger.com à moi

    afficher les détails 16:59 (Il y a 5 heures)

    test உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனத...":

    நான் கடைசியா போட்ட பின்வரும் கமெண்ட்டை காணவில்லையே.

    *****
    test "சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனத..." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

    நண்பர் ராபின்

    \தமிழ்மணம் இஸ்லாமியப் பதிவர்களிடம் மன்னிப்பு கேட்காதது நல்ல விஷயம்\

    அவசியமில்லை நண்பரே. தமிழ்மணம் சார்பா என்று குறிப்பிட்டு ரமணிதரன் ஏற்படுத்திய குழப்பத்துக்கு தமிழ்மணம் வருத்தம் தெரிவித்து விட்டதா சங்கரபாண்டி சொல்லிருக்கார். எப்போ தங்களுக்கு இதில் சம்பந்தமில்லைனு பொதுவுல சொல்லி வருத்தம் தெரிவிச்சாங்கலோ அதுவே இந்த பிரச்சனையில் போராடிய அனைத்து பதிவர்களுக்கும் வெற்றிதான். ஏன்னா தனி ஆளு சொல்லிருந்தா முஸ்லிம்களோ அல்லது மற்ற பதிவர்களோ இந்த பிரச்சனைய பெரிசாக்கி இருக்க மாட்டாங்க. யாரோ ஒரு ஆளு ஏதோ சொல்றாருன்னு போயிருப்பாங்க. பிரச்சன இந்த அளவுக்கு வந்திருக்காது. அதனால எப்போ தமிழ்மணம் வருத்தம் தெரிவிச்சதோ அப்பவே போராடிய எல்லா பதிவர்களும் வெற்றியடைஞ்சுட்டாங்க.

    இந்த போராட்டம் சாதித்த விஷயங்கள் ஏராளம். தமிழ்மணத்த வருத்தம் தெரிவிக்க வைத்தது, ரமணிதரனின் பேச்சு தோரனை முற்றிலும் மாறி இருப்பது, தமிழ்மணம் இல்லேன்னா என்ன என்ற எண்ணம் வந்திருப்பது. இப்படி பல. சசி சொன்னது போல இந்த பிரச்சனைய உச்சத்திற்கு கொண்டு போனது முஸ்லிம் பதிவர்கள் தான். ஒரு வேலை முஸ்லிம் பதிவர்கள் போராட்டத்துல குதிக்காம இருந்திருந்தா தமிழ்மணம் இறங்கி வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த வகைல முஸ்லிம் பதிவர்கள் வெற்றிய அடைந்சுட்டாங்கன்னு தான் சொல்லணும்.

    நண்பர் பெயரில்லா,

    \thamizsasi elutiyatu
    test tamilmanam impressions patthi kavala pattaunu thonuthu. neenga alatgateenga\

    இதுல அலட்டி கொள்வதற்கு ஒண்ணுமில்ல நண்பா. தடைனால தமிழ்மணத்துக்கு இருக்க கூடிய நடைமுறை பிரச்சனைய தான் சொன்னேன். சசி பொருளாதார பிரச்சனை பத்தி சொல்றது வருத்தமா இருந்தாலும் இந்த தடை மூலமா அது இன்னும் மோசமாகுமொன்னு நினைக்கின்றேன். தங்கள் பதிவுகளை கட்டண பதிவா மாத்த நினைக்குற பதிவர்கள் சவுதி தடைனால இப்ப தயங்கலாம். இல்ல கட்டணத்த குறைக்க சொல்லி தமிழ்மணத்திடம் சொல்லலாம். இங்க சிலர் இந்த தடையால தமிழ்மணத்திற்கு பிரச்சன இல்லேன்னு சொன்னதால தான் என்னோட கருத்த சொன்னே. கொஞ்சம் யோசிச்சாலும் எளிதா புரியுற விசயம் இது.

    ஒரு கருத்துரையை சேர்

    இந்த இடுகைக்கான கருத்துரைகளிலிருந்து குழு சேர்தலை நீக்கு.

    23 அக்டோபர், 2011 8:33 am அன்று எழுத்தில் எண்ணங்கள் ! இல் test ஆல் உள்ளிடப்பட்டது



    24 அக்டோபர், 2011 4:59 pm அன்று எழுத்தில் எண்ணங்கள் ! இல் test ஆல் உள்ளிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  32. தங்களின் வருகைக்கும், கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி நண்பர் test அவர்களே

    பதிலளிநீக்கு
  33. இன்று தான் உங்கள் வலை தளத்திற்கு முதல் முறை வருகிறேன்.
    பிரபல பதிவர்கள் பதில் பின்னூட்டம் போடுவதில்லை
    நீங்கள் வித்தியாசமானவர் தான்
    அத்தனைக்கும் பதில் போட்டு இருக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
  34. //ஒரு வேலை முஸ்லிம் பதிவர்கள் போராட்டத்துல குதிக்காம இருந்திருந்தா தமிழ்மணம் இறங்கி வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த வகைல முஸ்லிம் பதிவர்கள் வெற்றிய அடைந்சுட்டாங்கன்னு தான் சொல்லணும்.//

    பிரச்சினையின் வீச்சை நீங்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். முஸ்லிம் பதிவர்கள் குதிப்பதற்கு அந்த இரண்டு வார்த்தைகள் அல்ல, மதப் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்று தமிழ்மணத்தின் முடிவுதான் முக்கியக்காரணம். இன்று முஸ்லிம் பதிவர்கள் உண்மையிலேயே வெற்றி அடைந்ததாக நீங்கள் கருதினால் அது கருத்து சுதந்திரத்தை மதிக்கும் அனைவரின் தோல்வி என்பதை புரிந்து கொள்ளுங்கள். கும்பல் கும்பலாக வந்து தாக்குபவர்களைக் கண்டு பயந்து ஒதுங்குபவர்களே இங்கு அதிகம். முன்பு இக்பால் செல்வன் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக இதே கும்பல் தாக்குதல் நடத்தியது என்பதையும் மறக்கவேண்டாம். இப்படி தமிழ் பதிவுலகம் ஒரு கும்பலின் பிடியில் இருப்பது நல்லதல்ல. அல்லது இந்தக் கும்பல் சொல்லும் சாந்தி சமாதான வார்த்தைகளை வைத்து இவர்களை எடை போட்டீர்களேன்றால் அதை அறியாமை என்றுதான் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  35. //பிரபல பதிவர்கள் பதில் பின்னூட்டம் போடுவதில்லை
    நீங்கள் வித்தியாசமானவர் தான்
    அத்தனைக்கும் பதில் போட்டு இருக்கிறீர்களே!//

    அது மட்டுமா? தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்த மதவாதிகளின் செயலை பிரபல பதிவர்கள் கண்டித்து ஒரு பதிவு எழுதவில்லை. மதவாதிகளின் செயலை கண்டித்த மிக சிலரில் கரிகாலனும் ஒருவர்.

    பதிலளிநீக்கு
  36. //நாய்க்குட்டி மனசு a dit…
    இன்று தான் உங்கள் வலை தளத்திற்கு முதல் முறை வருகிறேன்.//

    வணக்கம் நண்பரே!
    வருகைக்கு நன்றி!!

    //பிரபல பதிவர்கள் பதில் பின்னூட்டம் போடுவதில்லை
    நீங்கள் வித்தியாசமானவர் தான்
    அத்தனைக்கும் பதில் போட்டு இருக்கிறீர்களே!//

    ஏன் சார் இந்த 'கொல வெறி'???
    அவ்வ்வ்வ்வ்.........

    பதிலளிநீக்கு
  37. ராபின் சார்,
    தங்கள் கருத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி விடும் நிலைமை தவறு.

    நாங்கள் கூட்டம் கூட்டி கோஷம் போட்டு உங்கள் கருத்துக்காக உங்களை மன்னிப்பு கேட்கும்படி மிரட்டுவோம் என்பது கருத்துரிமைக்கு எதிரான அராஜகம்தான்.
    அது சாதி, மதம், இனம் என்று எது சம்பந்தப்பட்டதாக இருப்பினும்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  38. //Blogger thequickfox a dit...

    //அது மட்டுமா? தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்த மதவாதிகளின் செயலை பிரபல பதிவர்கள் கண்டித்து ஒரு பதிவு எழுதவில்லை. மதவாதிகளின் செயலை கண்டித்த மிக சிலரில் கரிகாலனும் ஒருவர்.//

    எனக்கு கண்டிச்சி எழதணும்னு தோணிச்சி, எழுதறேன். மத்தவங்களுக்கு தோணலை அவ்வளவுதான். ஆனால் ஒண்ணு கண்டிச்சி எழுதாத அத்தனை பேரும் இந்த செயலை ஆதரிக்கிறாங்கன்னு கருத முடியாது.

    உங்க கருத்துக்கு மீண்டும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு