இன்று ஒரு குறள் !

திங்கள், நவம்பர் 07, 2011

ஜெ வின் நூலாயுதம்























ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியிலே மனுஷனையே கடிச்ச மாதிரி ன்னு  ஒரு பழமொழி எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.

அது போல நம்ம முதல்வர் அங்க சுத்தி இங்க சுத்தி, நம்ம அடி மடியிலே கை வைக்கிறாங்களே....
அதாங்க அண்ணா நூற்றாண்டு  நூலகத்தை மருத்துவமனையா மாத்துறதை தான் சொல்றேன்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பது போல .....

நம்ம கலைஞரு குடும்ப ஆக்ரமிப்பு கூட்டு கொள்ளையிலேருந்து  தப்ப தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைச்ச ஒரே மாற்றா இருந்தது இந்த அம்மாதான்.

அவுங்க முன் வரலாறு மோசமா இருந்தாலும் சரி இவ்வளவு நாள் பதவி இல்லாம இருந்த இந்த அம்மா மனம் வருந்தி திருந்தியிருக்கும்னு

இரட்டை இலைக்கு ஓட்டை குத்து, குத்துன்னு குத்தி ஜெயிக்க வச்சா மக்களை இப்ப அந்த அம்மா  மொத்து, மொத்துனு மொத்துது.

பதவிக்கு வந்த உடனேயே தலைமைசெயலகத்த மாத்துன்னு சொன்னாங்க ...

அதுக்கு, பணிகள் முழுமை அடையாமல் அவசர கதியிலே திறந்திட்டாங்கன்னு காரணமும் சொன்னாங்க

  நாமளும் நியாயந்தானய்யா இதுன்னு மவுனமா இருந்துட்டோம் !

அடுத்து சமச்சீர் கல்வியிலே கை வச்சாங்க.

அப்பவும் சில அறிவாளிகள், "புத்தகங்கள் சரியில்ல ஒரே திமுக நெடி அதான்"னாங்க நாமளும் எது சரின்னு தெரியாம கொழம்பி போய் நின்னோம்

இப்ப வைச்சாங்க பாருங்க ஒரு சூப்பர் ஆப்பு.....
இத எந்த பயலும் நியாயபடுத்த முடியாது.

தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கிற புத்தகங்களின் ஆலயமாய் இருக்கிற ஒரு நூலகம் - தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் - போன ஆட்சியில் கலைஞர் கையால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் (இப்ப புரிஞ்சி இருக்குமே உண்மையான காரணம்) - அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

அந்த நூலகத்தைதான்  மூடறாங்கலாம் ஏன்னா புள்ளைங்களுக்கு ஆசுபத்திரி கட்ட தமிழ்நாட்டுலே வேற இடமே கிடைக்கலையாம்.

இப்ப கூட சில அறிவாளிங்க சொல்லலாம், "ஏம்பா அறிவை வளர்க்க படிச்சி டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கப்போற! அவனவன் பரம்பரையை ஆராய்ச்சி பண்ணி உங்களுக்கு மேட்ச் ஆவுற அறிவாளியோட டி என் ஏ எடுத்து உனக்கு வச்சி உட்டா 2 வாரத்திலே  நீ அறிவாளியாய் ஆய்டப்போறே பிறகு எதுக்கு நூலகம் அது இதுன்னு.அதான் அம்மா இடிக்கிறாங்கன்னு"

கேழ்வரகிலே  நெய் வடியுதுன்னா கேக்குறவன் என்ன கேணையாம்பாங்க ?
  நாம  என்னான்னுதான் நமக்கே தெரியுமே!
இதை அடுத்தவன் சொல்லனுமாக்கும்.


4 கருத்துகள்:

  1. ஆலயங்கள் கட்டுவதிலும் ஆங்கோர் ஏழைக்கு கல்வி கற்பித்தல் சிறப்பு என்று கற்றிருக்கின்றேன். இந்தியாவிலே இல்லாத நிலப்பரப்பா? யாரோ இச்செயலை புகழ்ந்து பேசியபோதே சிந்தித்தேன். நீங்களும் இதைத்தான் சொல்ல வருகின்றீர்கள். பல நாள்களை என் மனதினுள் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி. தமிழ் படங்களில் அனேகமாக எல்லாப் படங்களிலும் காட்டுகின்ற வில்லன்கள் சண்டைக்காட்சிகள் அனைத்துமே மிகக் கொரூரமாக இருக்கின்றதே . அங்குள்ள அரசியல் வாதிகள் எல்லாம் இப்படித்தானா பல ரௌடிகளை வைத்திருப்பார்களா ? வெளிநாட்டவர்களுக்கு இப்படங்களைக்காட்ட வெட்கமாக இருக்கின்றதே. இங்கிருந்து பார்க்கும் எமக்கு இந்திய இதுதான் என்னும் எண்ணப் பதிவைக் கொண்டுவருகின்றது. இதுதான் தமிழர்களின் மரபணு தொழிற்பாடா? தயவு செய்து விளக்குங்கள் . எமது குழந்தைகளுக்கு விடை கூறமுடியாமல் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பக்கம் மூலம் நீங்கள் விளக்குகின்ற ஆதங்கங்கள் அனைத்தும் இப்போது தேவையானதுதான். தொடருங்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    //அங்குள்ள அரசியல் வாதிகள் எல்லாம் இப்படித்தானா பல ரௌடிகளை வைத்திருப்பார்களா ? //

    ரொம்ப அப்பாவியாய் இருப்பீங்க போலிருக்கே :-)
    அப்படியே தான் இருப்பாங்க ஆனால் படத்தில் வரும் வில்லன்கள் போல், வாடாஆஆஆஆஆ... ன்னெல்லாம் மிளகாயை கடித்தவன் போல் கத்த மாட்டார்கள். மத்தபடி ஆட்டோ சுமோ ரவுடி எல்லாம் அப்படியே.

    சமயம் கிடைத்தால் தமிழ் நாட்டிற்கு ஒரு முறை வந்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
  4. //தொடருங்கள் வாழ்த்துகள்//

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு