இன்று ஒரு குறள் !

திங்கள், செப்டம்பர் 12, 2011

பரமக்குடியில் ஜெ தேவரும், அறிவாலயத்தில் அண்ணாவும்

 நேற்றைய தினம், கடந்த சில ஆண்டுகளாக குரு பூஜையாய் தலித் மக்களால் கொண்டாடப்படும் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம். 

அப்படிப்பட்ட தினத்தில் முன்யோசனை, முன் எச்சரிக்கை  நடவடிக்கை என்று எந்த எழவுமின்றி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சி நடத்தி கொண்டிருக்கும், சாதிக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் ரவுடித்தனம் செய்யும் ஜான் பாண்டியன் என்பவனை கைது செய்திருக்கிறது போலீஸ்.

உடனே அவனது அல்லக்கைகள் அப்பாவி மக்களை போலீஸுக்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரமாக்கி, கடைசியில் போலீஸ் குண்டுக்கு 5 உயிர்களை பலி கொடுத்திருக்கிறது.

இந்த சம்பவம்,அரசிற்கு ஒரு பெரிய களங்கத்தை உண்டு பண்ணியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இதே போல் தேவர் குருபூஜையிலும், அந்த சாதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் ரவுடித்தனம் செய்யும் பல நபர்களில் ஒருவரையாவது  கைது செய்ய இந்த அரசுக்கு தைரியும் இருக்குமா

அப்படியே கைது செய்தாலும், பின்னர் நடக்கும் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி எடுத்து சுட்டு விடுமா

தலித் உயிர் என்றால் மட்டும் இளப்பமா

அதிமுக என்றாலே தேவர் சாதி கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதா

பொறுத்திருந்து பார்ப்போம்


------------------------------------------------




கடந்த வாரம், சட்டசபையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு உறுப்பினரின் கேள்விக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். 

அதற்கு அடுத்த நாள் கலைஞர் இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று,  

"அந்த இடத்திலே அண்ணா சிலை இருப்பதை அறிவீர்கள். அந்த சிலை அங்கே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணா திமுக அல்லவா? ஆகவே அண்ணா சிலை இருக்க கூடாது என்பதற்கான முயற்சியிலே ஈடுபட எண்ணுகிறார்கள்"

என்று கேணத்தனமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். 

பொதுவாகவே, பொறம்போக்கு நிலத்தை ஆக்ரமிக்கும் சமூக விரோதிகள் தங்கள் கட்டடத்திற்கு முன்னால் ஒரு சின்ன பிள்ளையார் கோயிலை கட்டிவிடுவார்கள்.

பின்னர் யாரேனும் ஆக்ரமிப்பு நிலத்தில் கட்டிய கட்டடத்தை இடிக்க வந்தால், கோயிலை இடிக்க வந்ததாக திரிபு செய்து, மத பிரச்ச்னையாக மாற்றி அங்கிருக்கும் அப்பாவி மக்களையும் சேர்த்துக்கொண்டு எதிர்ப்பர்.

அந்த மாதிரிதான் இருக்கிறது இவரது விளக்கமும். 

என்ன செய்ய நம் உடன்பிறப்புகள்,

"எத்த சொன்னாலும் அத அப்படியே நம்பிறானுங்கைய்யா அப்பாவி புள்ளங்க"



------------------------------------------------

12 கருத்துகள்:

  1. பெயரில்லா9/12/2011 12:22:00 PM

    dai nayee what u know about mr.john pandian, dont write without knowing the person, stupid

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9/12/2011 12:22:00 PM

    dai nayee what u know about mr.john pandian, dont write without knowing the person, stupid

    பதிலளிநீக்கு
  3. ஒரு சம்பவத்தை மட்டும் வச்சி, இந்த ஆட்சியையே முடிவு பண்ணிய்தற்கு கடும் கண்டனங்கள்.

    பதிலளிநீக்கு
  4. //பெயரில்லா பெயரில்லா கூறியது...

    dai nayee what u know about mr.john pandian, dont write without knowing the person, stupid//

    டேய் பேயே,
    எனக்கு தான் தெரியல உன் தலைவனைப் பத்தி.
    நீயாவது அவரது தியாகங்களை ஒரு பட்டியல் இட்டிருக்கலாமே

    பதிலளிநீக்கு
  5. //பெயரில்லா பெயரில்லா கூறியது...

    dai nayee what u know about mr.john pandian, dont write without knowing the person, stupid//

    அது எப்படிடா, நாட்டுக்காக உழைச்ச தலைவன்களில் உங்க சாதி தலைவனா பார்த்து எடுத்துக்கிறீங்க, மத்த தலைவர்கள் உங்களுக்கு பெரிசில்ல.
    அதே போல, உங்க சாதி ரவுடி தலைவனை தியாகி ஆக்குறீங்க ஆனால் மத்த சாதி ரவுடி தலைவனுங்களை ரவுடின்னே சொல்றீங்க.
    திருந்துங்கடா மனுஷனை மனுஷனா மட்டும் பார்க்க பழகுங்க

    பதிலளிநீக்கு
  6. //பிளாகர் மனமே சாட்சி கூறியது...

    ஒரு சம்பவத்தை மட்டும் வச்சி, இந்த ஆட்சியையே முடிவு பண்ணிய்தற்கு கடும் கண்டனங்கள்.//

    மனசாட்சி அண்ணே, நான் எந்த முன்முடிவும் எடுக்கவில்லை. மன்சில் வந்த அய்யத்தைதான் வெளிப்படுத்தினேன். அது தவறாக இருக்கும் பட்சத்தில், மிகவும் மகிழ்வு கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  7. karuppu உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பரமக்குடியில் ஜெ தேவரும், அறிவாலயத்தில் அண்ணாவும்":

    இதே போல் தேவர் குருபூஜையிலும், அந்த சாதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் ரவுடித்தனம் செய்யும் பல நபர்களில் ஒருவரையாவது கைது செய்ய இந்த அரசுக்கு தைரியும் இருக்குமா//
    கண்டிப்பாக அப்படி ஒரு முடிவை எடுக்காது காரணம் ... நீங்களே ஒரு பதிலை சொல்லி இருக்கிறீர்கள்.

    அதிமுக தேவர் சாதி கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதா?///
    நிரூபிக்கத்தான் அப்பாவி தலித் மக்கள் 7 பேர் கொலை. அதற்க்காக‌த்தான் இந்த கைது நாடகம் அதனை தொடர்ந்த துப்பாக்கி சூடு.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9/14/2011 07:37:00 AM

    இந்த இணைப்பை பாருங்கள்
    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1

    இவர்கள் எல்லாம் மனிதர்கள் .... யோசியுங்கள் மக்களே ....

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா9/14/2011 07:39:00 AM

    இந்த இணைப்பை பாருங்கள்

    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1

    இவர்கள் எல்லாம் மனிதர்கள் .... யோசியுங்கள் ....

    பதிலளிநீக்கு
  10. //பெயரில்லா karuppu கூறியது...

    karuppu உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பரமக்குடியில் ஜெ தேவரும், அறிவாலயத்தில் அண்ணாவும்":

    இதே போல் தேவர் குருபூஜையிலும், அந்த சாதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் ரவுடித்தனம் செய்யும் பல நபர்களில் ஒருவரையாவது கைது செய்ய இந்த அரசுக்கு தைரியும் இருக்குமா//
    கண்டிப்பாக அப்படி ஒரு முடிவை எடுக்காது காரணம் ... நீங்களே ஒரு பதிலை சொல்லி இருக்கிறீர்கள்.

    அதிமுக தேவர் சாதி கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதா?///
    நிரூபிக்கத்தான் அப்பாவி தலித் மக்கள் 7 பேர் கொலை. அதற்க்காக‌த்தான் இந்த கைது நாடகம் அதனை தொடர்ந்த துப்பாக்கி சூடு.//


    நடப்பதை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது நண்பரே.
    ம்`ம்...பொறுத்திருந்து பார்த்து உண்மையை புரிந்துகொள்வோம்

    பதிலளிநீக்கு
  11. ஒரு சிறு திருத்தம் என் முந்தைய கமெண்டில்

    //ம்`ம்...பொறுத்திருந்து பார்த்து உண்மையை புரிந்துகொள்வோம்//

    இருந்தாலும், சற்று பொறுத்திருந்து பார்த்தே உண்மையாய் புரிந்து கொள்வோம்

    பதிலளிநீக்கு
  12. //பெயரில்லா பெயரில்லா கூறியது...

    இந்த இணைப்பை பாருங்கள்

    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1

    இவர்கள் எல்லாம் மனிதர்கள் .... யோசியுங்கள் ....

    14 செப்டெம்ப்ர், 2011 7:39 am//

    நண்பரே யார் சொன்னது இவர்களெல்லாம் மனிதர்களென்று.
    இதனை இன்று காலையே நண்பர் ராஜன் தனது பதிவில் எழுதியிருந்தார்.
    அதன் லிங்க்கும் அதற்கு கீழே அந்த பதிவில் நான் இட்ட பின்னுட்டமும்

    http://allinall2010.blogspot.com/2011/09/blog-post.html

    Karikal@ன் - கரிகாலன் said...
    இவனுங்க எல்லாம் தே... !
    வேணாம் அவனுங்க மாதிரியே நாமும் காட்டுமிராண்டியாக வேண்டாம்.
    சக மனிதனை மனிதனாக நினைக்க முடியாதவர்கள் இருந்தென்ன வாழ்ந்தென்ன.
    இதில் இவர்கள் படித்தவர்களாம்....!!!
    useless fellows

    September 14, 2011 12:12 AM

    பதிலளிநீக்கு