எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக சரியாக செயல்படவில்லை என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க அதை தவறு என்று சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு சரியான எதிர்கட்சியாய் தன் கட்சியை காட்ட முயற்சித்து எதிரி கட்சியாய் ஆக்கி விட்டுருக்கிறார் அதன் தலைவர் விஜயகாந்த்.
தொலைக்காட்சிகளிலும் , யூ ட்யூபிலும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போல சட்டசபை காட்சிகள் காட்ட்ப்படுகிறது. அதை நன்கு கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும் இச்சம்பவத்தின் முழு்மைக்கும் விஜயகாந்த் மட்டுமே பொறுப்பு அல்ல என்று.
தன் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பேச, அதில் ஆளுங்கட்சியினர் குறுக்கிட்டுக் கொண்டே இருக்க, அதனால் தானே எழுந்து பதில் பேச, ஜெயலலிதா எழுந்து அதை மறுத்து பேச, பிறகு இருவருக்கும் நேரடியாக விவாதம் எழ, சவால்களை இரு தரப்பும் பறிமாறிக்கொள்ள, பிறகு சபாநாயகர் தலையிட்டு அமைதி படுத்தி அனைவரையும் அமர வைக்கிறார். (இதுவரைக்கும் நல்லாதானேய்யா போய்ட்டிருந்தது)
பின் சில வினாடிகளில் விஜயகாந்த் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து நாக்கை மடித்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது.
இந்த காட்சியை பார்த்து விஜயகாந்த் தான் 'நிதானம்' இல்லாமல், சட்டசபை கண்ணியம் கருதாமல், எதிர்கட்சித் தலைவருக்குரிய தகுதியை அறியாமல், மன நிலை பிறழ்ந்தவன் போல நடந்து கொண்டார் என கருதுவீர்களானால் நிச்சயம் நீங்கள் அம்புலிமாமா வை மட்டுமே படித்து புரிந்து கொள்ளும் மன நிலையிலேயே இன்னமும் இருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.
விஜயகாந்த் ஆவேசமாய் எழுந்ததற்கு காரணமாய் ஆளுங்கட்சி பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை காட்டாமல் மறைத்து விட்டார்கள். நியாயம் தானே, இது அவர்கள் படமாயிற்றே. தயாரிப்பும் டைரக்ஷனும் அவர்களேதானே.
அவர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றிய பின் பேசிய ஜெயலலிதா 'வெட்கப்பட்டிருகிறார்' (அட நம்புக்கப்பா அவருக்கும் அதெல்லாம் வரும்)
தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாக அவரே கூறியிருக்கிறார் (வேற எதுக்காவோன்னு் நீங்க வேற எதையாவது ஒண்ண நினைச்சா அது உங்க தப்பு)
பிறகு விஜயகாந்துக்கு என்ன தண்டனை தர வேண்டும் என்று சபாநாயகருக்கு கோடிட்டு காட்டுகிறார்.
அடுத்து விஜயகாந்தின் தகுதி பற்றி பேசியிருக்கிறார். எப்படியென்றால், தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்களாம்.
(எந்தவித முகாந்திரமும் இல்லாத, பொய்யாக முனையப்பட்ட ஒரு வழக்கை காட்டி எதிர்கட்சி தலைவரை வயதானவர் என்று கூட பார்க்காமல் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்தது பற்றி உங்களுக்கு நினைப்பு வந்தால் அது ஜெவின் தவறு அல்ல)
அதிமுக வை எப்படியும் ஆட்சியிலே உட்கார வச்சே தீரணும்னு மக்கள் தீர்மானிச்சி வாக்களித்தபோது இவர்களும் வந்து ஓட்டிக்கொண்டதாலே சட்டசபைக்குள் இவர்களால் வர முடிந்தது என்றும் பேசியிருக்கிறார்
இதில் புரியாத விஷயம் என்னவென்றால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு யாராவது ஒரு தனி மனிதர் உரிமை கோர முடியுமா அப்படியே ஒரு கட்சி தான் கோரமுடியும் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த தகுதி திமுகவிற்கு தவிர வேற எதற்குமில்லை.
ஏனெனில் மக்கள் திமுக ஆட்சி போக வேண்டும் என்று எதிர்பார்த்தார்களே அன்றி அதிமுகவே ஆட்சிக்கு வரவேண்டும் என ஏங்கி கிடக்கவில்லை. என்ன செய்வது நமக்கு தான் அதை விட்டா இது, இதை விட்டா அது என்பதை தவிர வேற தேர்வு எதுவுமே இல்லையே.
அடுத்து இவர் தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என விஜயகாந்தை பற்றி கூறியிருக்கிறார்
அதுசரி... எதை இவர் தகுதி என்கிறார்???
அதை அப்போது ஜெயலலிதா ஒத்துக்கொண்டு அரசியலை விட்டே விலகி விட்டாரா. தான் வளர்ந்த பிறகு புதியவர்களை பார்த்து இப்படி சொல்லி சிறுமைப்படுத்துவதே அரசியல்வாதிகளின் வேலையாக போய்விட்டது
ஒருவரின் தகுதியை தீர்மானிப்பது யார் இவர்களா இல்லை மக்களா???
ஆனால் ஒண்ணு அம்மாவைப் பார்த்து திமுகவினர் உட்பட எ்ல்லோருமே பம்மிக்கிட்டு போகும் போது விஜயகாந்த் தைரியமாய் பல பேருக்கு எதிரிலேயே அம்மாவுக்கு சவாலுக்கு சவால் விட்டு எகிறுனாரே அதுவே ஒரு தகுதி தான்.
கேப்டன் உங்க வீரம் எனக்கு புடிச்சிருக்கு.
//கேப்டன் உங்க வீரம் எனக்கு புடிச்சிருக்கு.//
பதிலளிநீக்கு:))
nadunilai illatha oru katoorai.
பதிலளிநீக்குவாங்க செல்வா,
பதிலளிநீக்குஎதில நடு் நிலை இல்லேன்னு சொல்றீங்க
கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா
தங்கள் வருகைக்கு என் நன்றி
வாங்க புதிய கோணங்கி
பதிலளிநீக்கு:)))
தமிழ்விடுதி சத்யபிரபு உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தன்னிகரற்ற ஜெயா மாமியும் தகுதியற்ற சின்ன கவுண்டரும...":
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே விஜயகாந் பேசியது அருவருப்பாக தெரியவில்லை ஜெயா பேசியதுதான் அருவருப்பாக தெரிகிறது
வாங்க சத்யபிரபு,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி