இன்று ஒரு குறள் !
திங்கள், நவம்பர் 07, 2011
ஜெ வின் நூலாயுதம்
ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியிலே மனுஷனையே கடிச்ச மாதிரி ன்னு ஒரு பழமொழி எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.
அது போல நம்ம முதல்வர் அங்க சுத்தி இங்க சுத்தி, நம்ம அடி மடியிலே கை வைக்கிறாங்களே....
அதாங்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையா மாத்துறதை தான் சொல்றேன்.
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பது போல .....
நம்ம கலைஞரு குடும்ப ஆக்ரமிப்பு கூட்டு கொள்ளையிலேருந்து தப்ப தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைச்ச ஒரே மாற்றா இருந்தது இந்த அம்மாதான்.
அவுங்க முன் வரலாறு மோசமா இருந்தாலும் சரி இவ்வளவு நாள் பதவி இல்லாம இருந்த இந்த அம்மா மனம் வருந்தி திருந்தியிருக்கும்னு
இரட்டை இலைக்கு ஓட்டை குத்து, குத்துன்னு குத்தி ஜெயிக்க வச்சா மக்களை இப்ப அந்த அம்மா மொத்து, மொத்துனு மொத்துது.
பதவிக்கு வந்த உடனேயே தலைமைசெயலகத்த மாத்துன்னு சொன்னாங்க ...
அதுக்கு, பணிகள் முழுமை அடையாமல் அவசர கதியிலே திறந்திட்டாங்கன்னு காரணமும் சொன்னாங்க
நாமளும் நியாயந்தானய்யா இதுன்னு மவுனமா இருந்துட்டோம் !
அடுத்து சமச்சீர் கல்வியிலே கை வச்சாங்க.
அப்பவும் சில அறிவாளிகள், "புத்தகங்கள் சரியில்ல ஒரே திமுக நெடி அதான்"னாங்க நாமளும் எது சரின்னு தெரியாம கொழம்பி போய் நின்னோம்
இப்ப வைச்சாங்க பாருங்க ஒரு சூப்பர் ஆப்பு.....
இத எந்த பயலும் நியாயபடுத்த முடியாது.
தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கிற புத்தகங்களின் ஆலயமாய் இருக்கிற ஒரு நூலகம் - தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் - போன ஆட்சியில் கலைஞர் கையால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் (இப்ப புரிஞ்சி இருக்குமே உண்மையான காரணம்) - அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.
அந்த நூலகத்தைதான் மூடறாங்கலாம் ஏன்னா புள்ளைங்களுக்கு ஆசுபத்திரி கட்ட தமிழ்நாட்டுலே வேற இடமே கிடைக்கலையாம்.
இப்ப கூட சில அறிவாளிங்க சொல்லலாம், "ஏம்பா அறிவை வளர்க்க படிச்சி டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கப்போற! அவனவன் பரம்பரையை ஆராய்ச்சி பண்ணி உங்களுக்கு மேட்ச் ஆவுற அறிவாளியோட டி என் ஏ எடுத்து உனக்கு வச்சி உட்டா 2 வாரத்திலே நீ அறிவாளியாய் ஆய்டப்போறே பிறகு எதுக்கு நூலகம் அது இதுன்னு.அதான் அம்மா இடிக்கிறாங்கன்னு"
கேழ்வரகிலே நெய் வடியுதுன்னா கேக்குறவன் என்ன கேணையாம்பாங்க ?
நாம என்னான்னுதான் நமக்கே தெரியுமே!
இதை அடுத்தவன் சொல்லனுமாக்கும்.
குறிச்சொற்கள் :
அதிகார துஷ்பிரயோகம்,
அரசியல்,
தமிழகம்
வெள்ளி, அக்டோபர் 21, 2011
சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனது கடும் கண்டனங்கள்!
எங்கள் ஊரில், தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறான் பாருய்யா என்று பழமொழி சொல்ல கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் மேலோடு புரிந்திருந்தாலும், இன்றுதான் முழு வீச்சோடு உணர முடிந்தது.
சவுதி அரேபியாவில் யாருடைய கோரிக்கையையோ ஏற்று
தமிழ்மணத்தை தடை செய்து விட்டார்களாம்.
"தமிழ்மணமே
மன்னிப்பு கேள் இல்லாவிடில் உன்னை
இஸ்லாமிய நாடுகளில் தடை செய்வேன்" என்ற உணர்ச்சி
மிகையான வரிகளை பதிவுகளில் கண்டபோது
ஏதோ கோபத்தில் கண் மண் புரியாமல்
எழுதுகிறார்கள் என்றே பல அப்பாவி
பதிவர்களை போலவே நானும் நினைத்திருந்தேன்.
ஆனால் அது கோபத்தில் தவறி
வந்த வார்த்தையல்ல ஆழ்மனதின் தங்கியிருந்த, பழி வாங்கியே தீர்க்கும்
வஞ்சத்தில் இருந்து வெளியான
விஷமென்று இப்போது அறிய முடிகிறது.
இப்படி
தடை வாங்கியதால் அவர்களுக்கு என்ன பெரிதாய் கிடைத்து
விடப்போகிறது அல்ப சந்தோஷத்தை தவிர.
இதற்கு
பதில் இந்த திரட்டியே வேணாம்னு
உதறி தள்ளிட்டு போயிருந்தாலும் கூட அவர்களின் வீரத்தை
பாராட்டலாம்.
ஆனால் என்னதான் தமிழ்மணத்தின் மீது கோபம் கொண்டு
கண்டன பதிவு இட்டு இருந்தாலும்,
சவுதியில் தடை செய்ததை அறிந்தவுடனே
பதிவின் மூலம் பிறருக்கு
அறிவித்து விட்டு, தானே இச்செயலுக்கு
கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது, அந்த தடையை நீக்ககோரி
மனு செய்து அதனை பிறரும்
பின்பற்றும் வண்ணம் லிங்க் கொடுத்து
பதிவிட்ட நண்பர் பதிவர் ஹைதர்
அலியின் நேர்மை பாராட்டுக்குரியது
அந்த பதிவு : http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_19.html
சவுதியில்
உள்ள நேர்மையான தமிழர்களே , உங்கள் பங்கிற்கு இந்த
லிங்கில் சென்று தமிழ்மணத்தை தடை
நீக்க ஆவண செய்வீர்கள் என்று
நம்புகிறேன்.
இதில் புரியாத விஷயம் என்னவென்றால்,
யாரோ எதுவோ சொன்னால் அது
என்ன ஏதுவென்று விசாரிக்காமலே, நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பலவீனமானதா
சவுதி அரசாங்கம்?
அப்படியானால்
நமக்கு பிடிக்கதவன் எவனையாவது சவுதி போலீஸிடம் கூட்டிசென்று,
இவன் நம்ம மார்க்கத்தை பற்றி
தவறாக கதைத்தான் என்று கூறினால் அவன்
கதை அவ்வளவுதானா :-(
என்ன நாடோ என்ன அரசாங்கமோ
போங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)