இன்று ஒரு குறள் !

புதன், அக்டோபர் 01, 2008

லொள்ளு பாண்டி



புதிய கட்சி தலைவர் சிரஞ்சீவி :
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது.


லொள்ளு பாண்டி :
நியாயந்தானே ! அவருக்கு பொழுது போகலேனா சரோஜா படத்துக்கு விமர்சனம் எழுத சொல்லுங்கோ.
அதை வீட்டுபுட்டு அரசியல் பேசிக்கிட்டு...?

அதையெல்லாம் பேசத்தானே சினிமாகாரங்க, நீங்க இருக்கீங்க!!!



தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது :
இதுவரை தி.மு.க. சார்பில் முஸ்லீம்களுக்கு கருணாநிதி இப்தார் விருந்து கொடுத்ததுண்டா ?


லொள்ளு பாண்டி :
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?
அவர் இப்தார் விருந்து வேணா கொடுக்காம இருந்திருக்கலாம்.
ஆனா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோருக்குமே அப்பப்ப அல்வா கொடுத்திருக்காரே !




இப்தார் விருந்தில் விஜயகாந்த் :
என் மகனுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டலாம் என்று ஆசைப்பட்டேன். பிரச்சினை வரும் என்பதற்காக அதைத் தவிர்த்தேன்.

லொள்ளு பாண்டி :
பிரச்சினை யாரு கிட்டேயிருந்து ?  பொண்டாட்டி, மச்சினன் கிட்டேயிருந்தா ???

அதை விடுங்க, உங்க இன்னொரு மகனுக்கு கிறிஸ்துவப் பெயர் சூட்ட ஆசைப்பட்டீங்களே அதை மறந்திடாதீங்க . இன்னும் ரெண்டு மாசத்திலே கிறிஸ்துமஸ் விருந்திலே சொல்ல வேண்டியிருக்கும்.

இந்திய கம்யூ. தா. பாண்டியன் :
கடுமையான ‘பொடா’ வேண்டாம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் சட்டங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்தினாலே போதும்.

லொள்ளு பாண்டி : 
கடுமையான ,சட்டம் தேவையில்லை சட்டங்களைத் துணிச்சலா செயல் படுத்த கடுமையான அரசு வேணும்னு சொல்றீங்க, சரியா?

அப்ப இவ்வளவு நாளு ஒரு ’சோப்லாங்கி’ அரசுக்கா ஆதரவு கொடுத்தீங்க!!!!!!


முதல்வர் கருணாநிதி :
ஒரு ரூபாய்க்கு அரிசி, ரு 50க்கு மளிகைப் பொருட்கள் தருவதை விமர்சிக்கும் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை நிறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லத் தயாரா?

லொள்ளு பாண்டி :
அதானே! சரியான கேள்வி கேட்டீங்க !
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தப்ப ‘வருங்கால பிச்சைக்காரர்களை உருவாக்கம் செய்யும் திட்டம்’ னு விமர்சனம் செஞ்சீங்க. ஆனால் நீங்க, ’திட்டத்தை நிறுத்திடுறேனு’ சொல்லியா தேர்தலிலே நின்னீங்க, கூட ஒரு முட்டை போடுரேன்னு சொல்லித்தானே  மக்களை சந்திச்சீங்க.

அது கூட தெரியலயே இவங்களுக்கு!!


நடிகர் வடிவேலு :
‘வடிவேலு‘ங்கிற நெருப்பு மேலே காலை வச்சிட்டாரு விஜயகாந்த் அது எம்புட்டுக் கொதிக்குதுன்னு அனுபவிச்சுத்தான் ஆகணும்.
லொள்ளூ பாண்டி :
வடிவேலு சார்,  
நீங்களே உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணிக்கிலயே.

7 கருத்துகள்:

  1. சிரித்தேன் ..
    அருமை...

    தொடர்ந்து கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஐயோ, போட்டு கிழிக்கிறீங்க மாமு...
    இப்படியெல்லாம் நீங்க எழுதீட்டு வந்தா, எந்த அரசியல்வாதியும் ஒட்டு கேட்டு வரமுடியாது ... ஆமா.. சொல்லிட்டேன்..

    பதிலளிநீக்கு
  3. // உருப்புடாதது_அணிமா a dit...
    சிரித்தேன் ..
    அருமை...

    தொடர்ந்து கலக்குங்கள்
    //


    வணக்கம்!

    வாங்க உருப்புடாதது_அணிமா!!

    நன்றி உங்க வருகைக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  4. // Anonyme a dit...
    Super
    //


    நன்றி அனானி!

    பதிலளிநீக்கு
  5. வாங்க நவநீதன், வணக்கம்!!

    பதிலளிநீக்கு
  6. // நவநீதன் a dit...
    ஐயோ, போட்டு கிழிக்கிறீங்க மாமு...
    இப்படியெல்லாம் நீங்க எழுதீட்டு வந்தா, எந்த அரசியல்வாதியும் ஒட்டு கேட்டு வரமுடியாது ... ஆமா.. சொல்லிட்டேன்..
    //


    ;)))

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவை! நம்ம பக்கம் வந்தீங்க... நன்றி! உங்க வாக்கையும் போடுங்களேன்....

    பதிலளிநீக்கு