நேரமின்மையின் காரணமாக வலைப்பக்கம் அடிக்கடி வர இயல்வதில்லை இப்படி் எப்பொழுதாவது கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஏதேனும் மனதில் பட்டதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
[ மனசாட்சி : ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இவர் என்ன நினைக்கிறார்னு தான் உலகமே பார்த்திட்டிருக்கு செரங்கு புடிச்சவன் கையி சொறியாம இருக்குமா அது போல வெரல் அரிப்பு தாங்க முடியாம கீ போர்ட் தட்ட வந்திட்டு பில்டப் கொடுக்கிறத பாரூ.... ]
பொதுவாக இந்த மாதிரி அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு போன்ற பிரச்சினைகளின் போது, அரசியல் கட்சிகள்தான் போராட்டங்கள் நடத்துமே அன்றி பொது மக்கள்களி்ன் கவனமெல்லாம் அவரவர்களின் அன்றாட வேலைகளிலேயே இருக்கும்
அப்படி பட்ட அவர்களே களத்தில் நேரடியாக இறங்குகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அரசியல்வாதிகளிடம் அரசுகளிடமும் நம்பிக்கை இழந்து இருப்பார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.
ஏற்கனவே தனித் தமிழ்நாடு, தமிழ் தேசியம் என்று பிரிவினை வாதம் பரவலாக பேசப்பட்டு வரும் கால நிலையில், பொது மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் மீதே நம்பிக்கை இழப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. மண்ணு மோகன் அரசு முழித்து கொண்டால் சரி.
வழமை போலவே அப்பாவி தமிழ் மக்கள் அண்டை மண்ணில் தாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த முறை தாக்கிய இடம் கேரளா, தாக்கியவர்கள் மலையாளிகள். தாக்குதலுக்கான காரணம் முல்லை பெரியாறு .
[ கர்நாடகத்தினர் தங்கள் முறை எப்போது என்று காத்துக் கொண்டிருப்பதாக கேள்வி :( ]
ஆனால் பதிலுக்கு வழமையை மீறியதாய் இந்த முறை தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
உம்மன்சாண்டியோ உம்முன்னு உறுமியிருகிறார்
தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுவதை எதிர் பார்க்க வில்லையாம்.
தமிழன் எப்பவுமே குட்டை வாங்கிகிட்டே இருப்பானுங்கன்னு அவருக்கு நெனப்பு போல...
எப்படி அப்பாவி தமிழர்கள் அடி வாங்குவதில் உடன்பாடு இல்லையோ அதேபோல் அப்பாவி மலையாளிகள் அடி வாங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
அடிக்க வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யும் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, ஜார்ஜ் குரியன் பொன்றவர்களை அடிக்கலாம் இங்கு பிழைப்புக்கு வந்திருக்கும் டீக்கடை நாயர் என்ன செய்வார்.
ஆனால் இதை இப்படியே கண்டும் காணாமல் மத்திய அரசு விடுமே என்றால் நேரடியாகவே குப்பனும் நாயரும் நீயா நானா என்று மோதிக்கொள்ளும் சூழல் எழும் அபாயம் உண்டு
அதன் பிறகு இந்திய ஒருமைப்பாடு கிழிந்த கோவணம்தான்
இப்போதாவது மண்ணு மோகன் அரசு முழித்து கொள்ளுமா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல் படுத்த கேரளாவை வற்புறுத்துமா ?இல்லை ஓட்டுக்காக ஒருமைபாட்டையே அடகு வைக்குமா?
குனிந்திருந்த தமிழன் நிமிர தொடங்கி விட்டான் ஜாக்கிரதை!
ஏனுங்க..
பதிலளிநீக்குமலையாளிங்க கிட்ட ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நாம் தமிழருக்கும், 'திராவிட' கோட்பாட்டின் படி மலையாளிகளை விட்டுட்டு இந்திய அரசை கண்டிக்க சொல்லும் பெ.தி.க.வும் எந்த ஊர்லங்க மலையாளிகள அடிச்சு அது பேப்பர்ல வந்துச்சு?
செய்தது பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் ஆங்காங்கு சில உணர்வாளர்கள் தான்...
டீடெய்ல் பார்த்துட்டு பேசுங்க... ஓகே?
//அடிக்க வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யும் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, ஜார்ஜ் குரியன் பொன்றவர்களை அடிக்கலாம் இங்கு பிழைப்புக்கு வந்திருக்கும் டீக்கடை நாயர் என்ன செய்வார். // நியாயமான கேள்வி!
பதிலளிநீக்கு//பெயரில்லா சொன்னது… //
பதிலளிநீக்குவாங்க நண்பரே!
//மலையாளிங்க கிட்ட ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நாம் தமிழருக்கும், 'திராவிட' கோட்பாட்டின் படி மலையாளிகளை விட்டுட்டு இந்திய அரசை கண்டிக்க சொல்லும் பெ.தி.க.வும் எந்த ஊர்லங்க மலையாளிகள அடிச்சு அது பேப்பர்ல வந்துச்சு?//
நான் அப்படித்தான் படித்ததாக ஞாபகம். சரி ஓகே நீங்க சொன்னபடி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி யாகவே இருந்து விட்டு போகட்டும். எப்படியாயினும் இடுகையின் பேசு பொருளின் அர்த்தம் மாறாது. நானும் அதை மாற்றி விடுகிறேன்.
இதை சொல்ல ஏன் நீங்கள் பெயரில்லாமல் வர வேண்டும்?
இடுகையின் பேசுபொருள் பற்றி உங்கள் கருத்தென்ன?
நன்றி உங்கள் வருகைக்கு!
@ பெயரில்லா
பதிலளிநீக்குநீங்கள் தவறென சுட்டிய விஷயத்தைதான் மாற்றி விடுகிறேன் என்று சொன்னேன்
//Robin சொன்னது…
பதிலளிநீக்கு//அடிக்க வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யும் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, ஜார்ஜ் குரியன் பொன்றவர்களை அடிக்கலாம் இங்கு பிழைப்புக்கு வந்திருக்கும் டீக்கடை நாயர் என்ன செய்வார். // நியாயமான கேள்வி!//
வாங்க ராபின் சார் நலமா?
பொங்கல் வாழ்த்துகள்
நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நல்ல எழுத்து வடிவம் சார் அருமை
பதிலளிநீக்குமுல்லை பெரியார் பற்றி என் அலசல் பாருங்க
http://kovaisakthi.blogspot.com/2011/12/blog-post.html
நட்புடன் ,
கோவை சக்தி
//எப்படி அப்பாவி தமிழர்கள் அடி வாங்குவதில் உடன்பாடு இல்லையோ அதேபோல் அப்பாவி மலையாளிகள் அடி வாங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை//
பதிலளிநீக்குஇரு மாநில மக்களும் பகைத்துக்கொள்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும்.
ஏனைய தென்னக மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மொழி,கலாச்சார ரீதியாக கேரளத்தவர்கள் நம்மோடு இன்னும் அதிக ஒட்டுதல் உள்ளவர்கள்.
பிப்ரவரி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம்.
//
பதிலளிநீக்குsakthi சொன்னது…
நல்ல எழுத்து வடிவம் சார் அருமை
முல்லை பெரியார் பற்றி என் அலசல் பாருங்க
http://kovaisakthi.blogspot.com/2011/12/blog-post.html
வாங்க நண்பரே,
கண்டிப்பா வந்து பார்க்கிறேன்
உங்கள் வருகைக்கு் நன்றி
வாங்க நடராஜன் சார்,
பதிலளிநீக்கு//ஏனைய தென்னக மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மொழி,கலாச்சார ரீதியாக கேரளத்தவர்கள் நம்மோடு இன்னும் அதிக ஒட்டுதல் உள்ளவர்கள்.//
எல்லாம் ஒரே இனமாய் இருந்தது தானே சார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் உரசல் வரும் போது இங்கு ஐரோப்பிய நாடுகளில் 'சகோதர எதிரிகளின் உரசல்' என்று குறிப்பிடுவார்கள். அது போல தான் இதுவும். நம்ம ஊரில் பொதுவாக பங்காளி சண்டைதானே சார் குத்து வெட்டு கோர்ட் என்று போய் இருக்கிறது
//பிப்ரவரி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம்//
பார்ப்போம் முதலில் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார்களா என்று.:(
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.