பத்திரிக்கை உலகின்
மஞ்சள் பத்திரிக்கை
நக்கீரன் என்பது
பொதுவாக அனைவருக்கும்
தெரிந்தது தான்.
அதன் சமீபத்திய
கிசுகிசு ஜெயலலிதா
மாட்டுக்கறி சாப்பிட்டார் என்பது தான். அதை
எம்ஜிஆர் தன்
கட்சியினரிடம் சொன்னதாக ஜெயலலிதாவே மற்றவர்களிடம்
சொன்னதாம்.
(இது எப்படி நக்கீரனுக்கு தெரிந்தது நித்தியானந்தா பெட்ரூமில் காமரா வைத்தது போல் போயஸ்கார்டனிலும் வைத்திருப்பாரோ)
அதை சொன்னதாக சொல்லப்பட்ட எம்ஜிஆரும், கூட இருந்து கேட்டதாக சொல்ல படும் எஸ்டிஎஸ், கேஏகே ன்னு யாரும் உயிரோடு இல்லை. இருக்கும் ஒரே நபரான பொன்னையனும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்னும்போது இது இட்டு கட்டி பத்திரிக்கையை விற்கும் தந்திரம் தானே.
அடுத்தவன் வீட்டு
பெட்ரூமை எட்டி
பார்ப்பதே நாகரீகமற்ற
செயல் இதில்
நக்கீரன் தான்
பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதை விற்று காசாக்கியும்
விடும் அதையும்
நித்தியானந்தா விவகாரத்தில் பார்த்தோமே
என்ன சாப்பிடுவது எதை சாப்பிடுவது என்று தீர்மானிப்பது தனிமனித உரிமை ஆதலால் உண்மையிலேயே ஜெ
மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்தாலும் அதை கேலி
செய்யும் பாணியில்
நக்கீரன் எழு்தியது
குற்றமே
இந்த செய்தியை தாங்கி நக்கீரன் வந்தாலும் வந்தது அதிமுகவினருக்கு நக்கீரன் அலுவலகத்தை தாக்கி தங்களது நீண்ட நாள் வெறியை தணித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்ப காரணியை தந்தது்.
நக்கீரன் அலுவலகத்தை தாக்கியதோடு அல்லாமல் அப்பாவி பொது மக்களையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள். மற்றும் இதில் சம்பந்தபடாத மற்ற பொதுமக்களின் வியாபார வணிகங்களையும அடைக்க செய்து அவர்களின் வயிற்றில் அடித்து அராஜகம் செய்திருக்கின்றனர்.
தங்கள் தலைவியிடம்
விசுவாசத்தை காட்டி நல்ல பேரு வாங்க
(பின் நாளில் பலன் தருமே
) அணி அணியாய்
நக்கீரன் அலுவலகம்
வந்து அராஜகம்
செய்து விட்டு
போயிருக்கிறார்கள்
ஆட்சியும் அவர்களது,போலீஸ் மந்திரியும் அம்மாதான் அப்புறம் கேட்கவா வேணும் அவர்கள் தைரியத்திற்கு்.
கிராமங்களில் கல்யாண
வீட்டில் மொ்ய்
கொடுத்து விட்டு
மைக்கில் அதை
அறிவிக்கிறார்களா என்று பார்ப்பார்களே அதைப்போல இங்கே
கலவரம் செய்து
விட்டு அது
போயஸ்கார்டனில் பதிவாகுதான்னு பார்த்திருப்பார்களோ
என்னமோ.
இதை கண்டும் காணாமல் இருந்த ஜெயின் போக்கும் மிகவும் கண்டிக்க தக்கதே.
செய்தி வெளியானதும்
அதை கண்டித்து
மறுப்பு தெரிவித்து
ஒரு அறிக்கை
கொடுத்திருக்கலாம். பிறகு நக்கீரன்
மேல் வழக்கு
தொடுத்திருக்கலாம். இப்படி செய்திருந்தால்
மக்கள் மனதில்
ஜெ எங்கேயோ
போயிருப்பார்.
ஆனால் அந்த அறச்செயலெல்லாம் ஜெவிடமோ கலைஞரிடமோ எதிர் பார்ப்பது நம் தவறுதான்
ஆனால் அந்த அறச்செயலெல்லாம் ஜெவிடமோ கலைஞரிடமோ எதிர் பார்ப்பது நம் தவறுதான்
ஆனாலும் இதில் ஒரு பெரிய ஆறுதல் எவரின் உயிரும் பறிக்கப்படவில்லை அதாவது எந்த அப்பாவியும் எரிக்கப்படவில்லை. அந்த வரையில் திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
வாழ்க ஜனநாயகம் !