இன்று ஒரு குறள் !

வெள்ளி, அக்டோபர் 21, 2011

சவுதியில் தமிழ்மணம் தடை - சம்பந்தப்பட்டோருக்கு எனது கடும் கண்டனங்கள்!







எங்கள் ஊரில், தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறான் பாருய்யா என்று பழமொழி சொல்ல கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் மேலோடு புரிந்திருந்தாலும், இன்றுதான்  முழு வீச்சோடு உணர முடிந்தது.




சவுதி அரேபியாவில் யாருடைய கோரிக்கையையோ ஏற்று தமிழ்மணத்தை தடை செய்து விட்டார்களாம்.



"தமிழ்மணமே மன்னிப்பு கேள் இல்லாவிடில் உன்னை இஸ்லாமிய நாடுகளில் தடை செய்வேன்" என்ற  உணர்ச்சி மிகையான வரிகளை பதிவுகளில் கண்டபோது ஏதோ கோபத்தில் கண் மண் புரியாமல் எழுதுகிறார்கள் என்றே பல அப்பாவி பதிவர்களை போலவே நானும் நினைத்திருந்தேன்.



ஆனால் அது கோபத்தில் தவறி வந்த வார்த்தையல்ல ஆழ்மனதின் தங்கியிருந்த, பழி வாங்கியே தீர்க்கும் வஞ்சத்தில்  இருந்து  வெளியான விஷமென்று இப்போது அறிய முடிகிறது.



இப்படி தடை வாங்கியதால் அவர்களுக்கு என்ன பெரிதாய் கிடைத்து விடப்போகிறது அல்ப சந்தோஷத்தை தவிர.



இதற்கு பதில் இந்த திரட்டியே வேணாம்னு உதறி தள்ளிட்டு போயிருந்தாலும் கூட அவர்களின் வீரத்தை பாராட்டலாம்.

ஆனால் என்னதான் தமிழ்மணத்தின் மீது கோபம் கொண்டு கண்டன பதிவு இட்டு இருந்தாலும், சவுதியில் தடை செய்ததை அறிந்தவுடனே பதிவின் மூலம்  பிறருக்கு அறிவித்து விட்டு, தானே இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது, அந்த தடையை நீக்ககோரி மனு செய்து அதனை பிறரும் பின்பற்றும் வண்ணம் லிங்க் கொடுத்து பதிவிட்ட நண்பர் பதிவர் ஹைதர் அலியின் நேர்மை பாராட்டுக்குரியது

அந்த பதிவு :  http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_19.html



சவுதியில் உள்ள நேர்மையான தமிழர்களே , உங்கள் பங்கிற்கு இந்த லிங்கில் சென்று தமிழ்மணத்தை தடை நீக்க ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்.





இதில் புரியாத விஷயம் என்னவென்றால், யாரோ எதுவோ சொன்னால் அது என்ன ஏதுவென்று விசாரிக்காமலே, நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு  பலவீனமானதா சவுதி அரசாங்கம்?



அப்படியானால் நமக்கு பிடிக்கதவன் எவனையாவது சவுதி போலீஸிடம் கூட்டிசென்று, இவன் நம்ம மார்க்கத்தை பற்றி தவறாக கதைத்தான் என்று கூறினால் அவன் கதை அவ்வளவுதானா  :-(



என்ன நாடோ என்ன அரசாங்கமோ போங்க