நேற்று கடைத்தெருவில் எதேச்சையாக காதில் விழுந்த இரு நண்பர்களின் உரையாடல். வெளி நாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்த ஒருவர் , தனது பால்ய நண்பனை சந்தித்திருக்கிறார் என்பது அவர்களின் உரையாடலின் மூலம் எனக்கு புரிந்தது.
அவர்கள் உரையாடலில் காதில் விழுந்த ஒரு பகுதி கீழே :
ஹேய் ஹவ் ஆர் யூ?
ஃபைன் நல்லாயிருக்கேன்பா
பாரின்லேர்ந்து எப்ப ரிட்டர்ன் ஆன?
2 நாள் ஆச்சி
ஹேவ் யு சம் காஃபி?)
வேணாம்பா தேங்ஸ்
ஓகே பா டைம் ஆச்சி
நாளைக்கு டெபனெட்டா நைட் டின்னருக்கு மீட் பண்ணுவோம்
கண்டிப்பா மீட் பண்ணுவோம்
பீச் ரெஸ்டாரண்ட்ல எய்ட் ஒ கிளாக்குக்கு ஷார்ப்பா வந்துடு
சரிப்பா
நான் வர லேட் ஆனாலும் வெயிட் பண்ணூ
கண்டிப்பா
பை!
பை!
சிகப்பில் இருப்பவை தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் பேசியது, கருப்பில் இருப்பவை 'ஃபாரின் ரிட்டர்ன்' பேசியது
இதில் உள் நாட்டுக்காரரை விட வெளி நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர் நிறைய தமிழ் சொற்களை உபயோகித்தார்.
முதலாமரும் தமிழ்தான் பேசினார் உள் நாட்டு நண்பரை சந்தித்திருந்தாலும் அப்படிதான் பேசியிருப்பார் ஏனெனி்ல் அவரைப்பொறுத்தவரை அது தான் தமிழ்.
பேச்சு தமிழ்தான் எவ்வளவு வேகமாக மாறுகிறது. அன்றைய தமிழுக்கும், இன்றைய தமிழுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.
எங்களோட சின்ன வயசிலே அம்மாகிட்ட, 'இன்னைக்கி என்ன 'காலை சாப்பாடு'னு கேட்போம். அதையே எழுதும்போது, 'காலை உணவு' னு எழுதுவோம்.
இப்பல்லாம் பார்த்தீங்கன்னா, 'காலை சாப்பாடு' என்ற வார்த்தையே யாரும் பயன் படுத்தற மாதிரி தெரியல.
மம்மி, இன்னைக்கி என்ன டிபன்?
மம்மி, டுவல் ஓ கிளாக்குகெல்லாம் லன்ச் அனுப்பிடு.
மம்மி, ஈவ்னிங் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.
உணவு விடுதியில் கூட 'காலை உணவு தயார்', 'மதிய சாப்பாடு தயார்' என்று அறிவிப்பு பலகையில் எழுதுவது போய் 'டிபன் ரெடி', 'லன்ச் ரெடி' னு எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படித்தான் தமிழ் மொழி, கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டே வருது அதாவது தங்கலிஷ் மொழியா.
இந்த தங்கிலீஷ் மொழி வேகமா வளர்வதிலே, நம்ம தொலைக்காட்சிங்க பங்கு மிக மிக அதிகம். அதிலும் தொலைக்காட்சியில் சினிமாகாரங்க பேட்டினா சொல்லவே வேண்டாம்.
ஆன் த ஸ்பாட், பை த வே, பை தி பை, டயலாக் டெலிவரி, கெமிஸ்ட்ரி, பாடி லாங்குவேஜ், டரியல், பாண்டஸீ என்று 9௦% ஆங்கில கலப்போட நம்ம வீட்டு கூடத்திலே வந்து தங்கிலீஷ் பேசுறாங்க.
அதைப் பார்க்கிற நம்ம ஆளுங்களுக்கு இப்படி தங்கலீஷ் பேசினாதான் நாகரீகம்னு நினைச்சிக்கிட்டு அப்படியே பேச ஆரம்பிச்சி பழகிடுறாங்க
இப்படித்தான் பார்த்திங்கன்னா, போன வாரம், எங்க ஊரில மளிகைகடை வச்சியிருக்கிற தங்கவேலு அண்ணனை டவுன்பக்கம் பார்த்தேன்.
தங்கவேலண்ணே எங்க இந்த பக்கம்னு கேட்டா, அது சொல்லுது, "பொண்ணுக்கு கெமிஸ்ட்ரி பார்க்க வந்தேன்"னு. "எந்த கிளாஸ் படிக்குதுண்ணே அதோ, எதிர்த்தாப்பலே ஒரு புத்தக கடையிருக்கு வாங்க போய் பார்க்கலாம்"னா,
"அட போப்பா, பொண்ணுக்கு அலையன்ஸ் செய்யலாம்னு பையன் ஜாதகமும் பொண்ணு ஜாதகமும் எடுத்துகிட்டு கெமிஸ்ட்ரி பார்க்க ஜோசியரை தேடி வந்தா நீ பாட்டுக்கு புத்தகம் அது இதுன்னு முட்டள்தனமா பேசுறியே"னுட்டு என்னய ஒரு அல்ப புழுவைப் பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போயிடுச்சி.
இப்படி தான் எல்லோருமே நமக்கு நல்லா தெரிஞ்ச தமிழ் வார்த்தையை கூட அன்னிய மொழி வார்த்தையாலே அழிச்சிட்டு அது தான் நாகரீகம்னு நினைச்சுக்கிறோம்.
இப்ப சமீபத்தில கூட மீடியா மூலமா எல்லார் வாயிலும் புகுந்து புறப்படுற ஒரு வார்த்தை 'காமன் மேன்'. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டிங்கனா, பொது மனிதன், பொதுசனம், சாமான்யன், சராசரி மனிதன் அப்படினு சொல்லலாம்.
'அட அதான் இத்தனை வார்த்தைங்க தமிழ்லே இருக்கே அப்புறம் ஏன் காமன் மேன்னு சொல்லணும்'னு நீங்க கேட்டா, உங்களுக்கு நாகரீகம் தெரியலேனு சொல்லி ஒதுக்கி வச்சிட்டு போய்டுவானுங்க. அப்புறம் நீங்க ஒரு காமன் மேனாவே ஊருக்குள்ள நடமாடமுடியாது, ஆமாம்.
இது மாதிரி தான் நாம அன்னிய மொழி வார்த்தைகளை உருவி உருவி தமிழ் மொழியிலே சொருகிகிட்டு இருக்கோம். இன்னும் எத்தனையெத்தனை தமிழ் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளுக்கு பலியிடபோறோமோ தெரியல.
இப்படியே தொடர்ந்து போய்க்கிட்டிருந்தா நாளடைவில் நமது தாய்மொழியான தமிழானது, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற அன்னிய மொழி சொற்களையே சார்ந்து, தனது தனித்துவ சொற்களேயில்லமால் அழிந்து விட வேண்டியதுதான்
இதைத்தான் பாரதி 'தமிழ் இனி மெல்ல சாகும்' னு அன்றே சொன்னானோ?!
வெல் டன் கீப் இட்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஉங்களை மாதிரி மனிதர்கள் தான் மாறவேண்டும்மென்று, இந்த கதை சொல்கிறது.
நீக்கு”மீடியா மூலமா” நல்ல தமிழ்!
நீக்குநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇரண்டில் ஒன்று.
பதிலளிநீக்குதமிழ் சாகலாம். அல்ல்து தமிழர் சாகலாம்.
இரண்டும் நடக்கிறது.
கருணானிதிக்கு விழா
நைஸ் போஸ்டிங். குட் ஒன்.
பதிலளிநீக்குகீப் இட் அப்.
தேங்க்ஸ்.
முதலில் தமிழிலில் எழுத கற்றுக்கொள்.
நீக்கு// Anonymous said...
பதிலளிநீக்குவெல் டன் கீப் இட் //
நன்றி அனானி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
// TRACING NIFTY said...
பதிலளிநீக்குநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//
நன்றி ட்ரேசிங் நிஃப்டி!
// Anonymous said...
பதிலளிநீக்குஇரண்டில் ஒன்று.
தமிழ் சாகலாம். அல்ல்து தமிழர் சாகலாம்.
இரண்டும் நடக்கிறது.//
:-(
// துளசி கோபால் said...
பதிலளிநீக்குநைஸ் போஸ்டிங். குட் ஒன்.
கீப் இட் அப்.
தேங்க்ஸ்.//
வாங்க துளசி கோபால்,
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
இப்போதுதான் தெரிகிறது தமிழில் போத்துக்கீச மொழி, ஒல்லாந்த மொழி , போன்றவை எல்லாம் நுழைந்திருக்கிறது என்பது. நாம் இங்கு தமிழை வலிந்து கதைக்கின்றோம். தமிழகத்தில் ஆங்கிலத்தை வலிந்து கதைக்கின்றார்கள். இங்கு வணக்கம் சொல்லுகின்றோம். தமிழ் நாட்டில் Goodmorning சொல்லுகின்றார்கள். எப்போதுதான் அந்நிய மோகம் தீரப் போகின்றதோ . தயவு செய்து இதைப் பாருங்கள்.http://kowsy2010.blogspot.com/2010/10/blog-post_9959.html
பதிலளிநீக்கு//நாம் இங்கு தமிழை வலிந்து கதைக்கின்றோம். தமிழகத்தில் ஆங்கிலத்தை வலிந்து கதைக்கின்றார்கள். இங்கு வணக்கம் சொல்லுகின்றோம். தமிழ் நாட்டில் Goodmorning சொல்லுகின்றார்கள். எப்போதுதான் அந்நிய மோகம் தீரப் போகின்றதோ //
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் நண்பரே
//தயவு செய்து இதைப் பாருங்கள்.http://kowsy2010.blogspot.com/2010/10/blog-post_9959.html//
கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்.
நன்றி!
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார். பாடல் முழுவதையும் படித்துப் பாராது எம்மவர் சிலர் பாரதி சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது வேதனைக்குரியதே. அப்பாடலில் நீலகண்டசாஸ்திரியை திட்டுவதற்காகவே அவர் அதைக் குறிப்பிடுகிறார். மீண்டும் ஒருமுறை அப்பாடலை வாசித்துப் பாருங்கள் அதன் உண்மை புரியும். 'என்றந்தப் பேதை உரைத்தான்' என நீலகண்ட சாஸ்திரியைத் திட்டியதோடு, தமிழ்த்தாய் ஆ! எனத்தொடங்கி ......... எமக்குச் சொல்வதாக அவர் சொன்னதையும் படித்துப் பாருங்கள்.
பதிலளிநீக்கு"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை
சொல்லவுங் கூடுவதில்லை அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்றும் இருப்பேன்.
நாம் வேற்று மொழியில் உள்ள நல்ல கலை நுட்பங்களை தமிழ்மொழியில் சேர்த்து அதை வளப்படுத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கனவு. அப்படிச் செய்தால் நீலகண்ட சாஸ்திரி சொன்ன பழிச்சொல் நீங்கி என்றும் பூமியில் தமிழ் நிலைத்திருக்கும், என்றே மகாகவி சொன்னார்.
"ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள் தந்தையாரைப் பார்க்க வந்தார்கள். அதில் இருவர் "ஆங்கில பாஷையிலும்", "சயன்ஸிலும்" மோகம் கொண்டவர்கள். கிணற்றடியில் அப்போது தந்தை ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். நண்பர்கள் மாடியிலிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.
பதிலளிநீக்குமுதலாவது நண்பர்:- என்னப்பா? பாரதியாருக்குத் தமிழில் மோகம் அதிகமாமே! தமிழில் என்ன இருக்கிறது? கருத்துக்களை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அதற்கேற்ற அழகான சொல் தமிழ் மொழியில் ஏது?
இரண்டாம் நண்பர்:- அது மட்டுமா? "ஸயன்ஸ்" எத்தனை உயர்ந்தது? தமிழில் இருக்கிறதா? வெள்ளைக்காரன் எப்படியிருந்தாலும் கெட்டிக்காரன். எத்தனை புதிய மெஷின்கள்! எத்தனை கருவிகள்! எத்தனை வஸ்துக்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்!
முதலாவது நண்பர்:- ஆமாம். இன்னும் சிறிது நாளைக்குள் மேற்கு தேசத்துப் பாஷைகள் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் ஒளிமங்கி மறைந்து விடும்.
இரண்டாம் நண்பர்:- ஆம், ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால் விரைவில் அழிந்து விடும்."
மேலே கூறிய சம்பாஷணைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. கேட்டவுடன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.
"ஆம், வாஸ்தவம் தான். தாயை மதியாத நம் தமிழனின் அசிரத்தையால் தமிழ் அழியும். கோழைகளே! பழம் பெருமையோடு திருப்தியடைந்து, உண்பதும் உறங்குவதுமாகக் காலங் கழிக்கிறீர்களே! என்ன கொடுமை! ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா! நமது நிலை இத்தனை கீழ்த்திசை யடைந்திருக்கிறதே என்று சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதும் கேவலமென்று கருதி தெரியாத ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்! சேர, சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவரது மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! "
இவ்விதம் புலம்பிப் பின் மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார். "தம்பிமாரே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி? மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்! ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது. இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள். அப்போது தமிழ் மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும். இதோ கேளுங்கள்! தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்கள்!' என்று கூறிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.
"யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்" எங்கள் தாய்!"
என்று கூறி விட்டுக், "கேளுங்கள், சகோதரரே! தமிழ்த் தாய் கூறுவதைக் கேளுங்கள்!" என்று கோபமும், ஆத்திரமும், சோகமும் கலந்த குரலில் பாடுகிறார் தமிழ்த் தாயின் வேண்டுகோள் நிறைந்த பாடலை.