பொதுவாகவே பதிவுலகம் அவ்வப்போது சூடாகுவதும் பின் சுருங்குவதுமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை குறுகிய நாட்களிலேயே இரண்டு முறை வெப்பம் 150°F யை தாண்டியது.
சூட்டுக்கு காரணம்
1.'போலி' டோண்டு
2. 'நிஜ' கமல்.
நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும் போலி டோண்டு விவகாரம், ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதிய ஒரு பிரபல பதிவரின் கட்டுரையை தொடர்ந்து, பெரு நெருப்பாய் பற்றிக் கொண்டது. தட்டிக்கேட்ட பதிவு, கண்டன பதிவு, எதிர் பதிவு, ஆதரவு பதிவு, அற சீற்றம், புற சீற்றம் ஆராய்ச்சி கட்டுரை, 'இத்தோடு நிறுத்திக்கோ' என்று வேண்டுகோள் பதிவு இப்படி பதிவுலகமே அல்லலோகப்பட்டு ஒரு வழியாக தணிவடைந்த வேளையிலே அடுத்த ரவுண்டின் புண்ணியத்தை கமல் கட்டி கொண்டார்.
உன்னை போல் ஒருவன் படத்தை பதிவர்கள் அடித்து, துவைத்து, கிழித்து, தோரணமாக்கி தொங்க விட்டார்கள். சாதரணமான விமர்சனங்களிருந்து நுண்ணரசியல் விமர்சனங்கள் வரை ஏராளமான பதிவுகள் சூடு பரத்தின. இந்த அத்தனை பதிவுகளின் சுட்டிகளையும் பதிவர் உண்மை தமிழன் தனது பதிவில் ஒரு இடுகையாக இட்டு, 'உன்னை போல் ஒருவன் பதிவுகளின் விக்கிபிடியா' வாக மாறி வாசகர்களுக்கு உதவினார். நான் கூட படம் பார்த்த பின், அந்த பதிவுகளை இவரின் இடுகை மூலமே படித்தேன். [சற்றேயொப்ப 100 பதிவுகளையும் அதன் பின்னூட்ட விவாதங்களையும் படித்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் ஆனது :( ]
சில பதிவர்கள், இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று கமலே மண்டையை பிய்த்துக்கொள்ளூம் வண்ணம், கமலின் நுண்ணரசியலை கண்டுபிடித்து கண்டித்தனர்.
கமலே அறியாத கமலை துப்பறிந்து கமலுக்கே அறிமுகப்படுத்தினர்.
அடுத்த படம் எடுப்பதற்கு முன் கமல், ஒரு பதிவர் சந்திப்பு நடத்துதல் அவருக்கு நல்லது. ;-)
சரி, நாம இப்போ பதிவுலகின் அடுத்த பரபரப்பிற்காக காத்திருப்போம்!
ரைட்டு!
பதிலளிநீக்குஅடுத்ததுதான் ஆரம்பிச்சாச்சே!
http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_02.html
வாங்க சிபி் அண்ணே,
பதிலளிநீக்குநானும் பார்த்தேன்.
தமிழ் மணத்தின் மகுடத்தில் உள்ள பதிவாயிற்றே பார்க்காமல் இருப்பேனா.
இது ஆரம்ப நிலையிலே அடங்கிப் போகும் என்பதே எனது கணிப்பு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிபி!
இதுதான் துவைத்தெடுப்பதோ?
பதிலளிநீக்குநல்ல பதிவு!
வாங்க நண்பரே,
பதிலளிநீக்குஅதான் எல்லா பதிவர்களும் சேர்ந்து கமலை துவைத்து, காயப்போட்டு, அயர்ன் பண்ணி, மடித்து வைத்து விட்டார்களே.
இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்
நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.