வருடத்திற்கு ஒரு முறை கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் வருவதைப்போலவே, நம் நாட்டில் குண்டு வெடிப்பும் தவறாது வரும்.
வந்ததும், வழக்கமான சடங்குகள் ஆரம்பமாகிவிடும். பிரதமர், ஜனாதிபதி கண்டனம் தெரிவிப்பார்கள். மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு நிவாரண நிதியும் அறிவிப்பார்.
மத்திய எதிர்க்கட்சி தலைவர் பிரதமரையும் ஆளுங்கட்சியையும் குறை சொல்வார். மாநில எதிர்கட்சி முதல்வரைச்சாடும். போலீஸ் விசாரணை, குற்றவாளியின் உருவம் வரைவு, துப்பு துலக்கல் இத்யாதி இத்யாதி என இறுதியில் குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்படுவார்கள்.
வழக்கு, விசாரணை என்று நீண்ட்ட்ட்ட பின் தீர்ப்பு சொல்லப்படும். அதில் மரண தண்டனை இல்லையென்றால் ஒரு நாள் பரபரப்போடு அடங்கிவிடும்.
மாறாக, மரண தண்டனை யாருக்கேனும் விதிக்கப்பட்டால் அவ்வளவுதான், நாடு முழுவதும் வாதப்பிரதி வாதங்கள் ஆரம்பித்துவிடும்.
இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சிறுபான்மை இனத்தவர் என்றால், நிச்சயம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றபடாது.
(வேற, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நாட்டுப்பற்றா வாங்கிதரும்? புத்தி சொல்ல வந்திட்ட பெர்றிய புண்ணாக்கு மாதிரி).
இப்படி இந்த சீரியல் நடந்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த குண்டு வெடிப்பு எங்கேயாவது நடந்திருக்கும். மீண்டும் பிரதமர், ஜனாதிபதி கண்டனம், மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு...............................................இன்ன பிற சடங்குகள் இனிதே நடந்தேறும்.
நமக்கும் நல்லா பொழுது போகும்.
சிவாஜி, தசாவதாரம் படங்களின் காரசார விமர்சனங்களுக்கு மத்தியில் நமக்கும் வித்தியாசமாக,விறுவிறுப்பான செய்திகள் கிடைக்கும்.
ஆனால் பாதிக்கப்பட்டோர் நிலமை, பலியானோர் குடும்பதினர் கதி என்ன ஆனது என்பது அந்த சம்பவத்தோடு நமக்கு மறந்துவிடும்.
நமக்கோ இது ஒரு பரபரப்பான செய்தி ஆனால் அவர்களுக்கோ வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்ட ஒரு சதி.
அந்த நாளின் வடு அவர்களுக்கு மறக்க முடியாதது மட்டுமல்ல மறந்து தொலைக்க முடியாததுமாகும்.
இதை ஏன் நாம் தொடர விடுகிறோம் என சிந்திப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை.
முதலில் அரசை கேட்கிறேன்
உங்களை நாங்கள் பிரதமர், முதல்வர் என பதவியில் அமர்த்தியதே, கண்டனம் தெரிவிக்கவும் நிவாரண நிதி வழங்கவும் தானா?
இதை செய்தவர்கள் யார்?
என்ன வேண்டும் அவர்களுக்கு?
அவர்கள் கோரிக்கை அல்லது கோபம் நியாயந்தானா?
அப்படி நியாயமான கோரிக்கை என்றால் அதை நிறைவேற்றி வைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
இதன் மூலம் தீவிரவாதத்தை வளர்க்கும் சர்வதேசக்கும்பலின் இந்திய ஊடுறுவலை தடுக்கலாமே!
மாறாக நியாயமற்ற கோரிக்கையை மறுத்ததிற்காக தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள் என்றால், அவர்களை தூக்கில் போடுவதில் என்ன தவறு?
ஏன் தூக்கு?
என்கவுண்டரிலே காரியத்தை முடிக்கலாமே.
ஏன் இதை செய்ய தயங்குகிறீர்கள்?
அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடாதீர்கள்.
தீவிரவாதிகளே,
உங்களது கோரிக்கைதான் என்ன?
அதற்கு இது தான் வழியா?
வேறுவகையில் உங்கள் கோரிக்கையை கேட்க முடியாதா?
பலியான அப்பாவி மக்களின் மீதுதான் உங்களது கோபமா?
அவர்களின் ரத்தத்தினால் உங்கள் எதிபார்ப்பு தீர்ந்து விட்டதா?
அல்லது அவர்களின் உயிர்பலிதான் உங்கள் எதிர்பார்ப்பா?
உங்களைக் கேட்டால் குஜராத் பிரசினை காரணம் என்பீர்கள்.
அவர்களைக் கேட்டால் ரயில் எரிப்பு காரணம் என்கிறார்கள்.
ரயிலை எரித்தவர்களைக் கேட்டால் பாப்ரி மசூதி இடிப்பு காரணம் என்பார்கள்.
இப்படி ரயில் பெட்டி போல காரணங்களை கோர்த்துக்கொண்டே போனால்
எப்போது யார் நிறுத்துவது?
அப்பாவிகள் அனைவரும் அழிந்த பிறகா?
மதப்பற்று, மத வெறியாகி, மனித உயிர் குடிக்கும் இரத்தக்காட்டேரியானது ஏன்?
மதத்திற்காகத்தான் தீவிரவாதமென்றால் தயவு செய்து தீவிரவாதத்தை விட்டு விடுங்கள்.
ஏனெனில் அந்த மதங்களே உங்களை மன்னிக்காது.
மாறாக, தீவிரவாதத்திற்காகத்தான் மதமே என்றால்
அந்த மதங்களையே தூக்கி எறியுங்கள்.
நம் தேசத்தை அமைதிப்பூங்காவாக மாற்றுங்கள்.
இறுதியாக அரசுக்கு ஒரு கோரிக்கை
உங்களால் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலை எடுக்க இயலவில்லை என்றால்,தயவுசெய்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வடிவேலு பாணியில் ஒரு திறந்த மைதானத்தை நிறுவுங்கள். அதில் சாதி, மத வெறியர்கள் அடித்து கொண்டு சாகட்டும்.
எங்கள் அப்பாவி சகோதரர்கள் நாட்டில் நிம்மதியாக வாழட்டும்.
இன்று ஒரு குறள் !
ஞாயிறு, ஜூலை 27, 2008
ஞாயிறு, ஜூன் 08, 2008
லொள்ளு பாண்டி
லொள்ளு பாண்டி
அ।இ.ச.ம., கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பேச்சு :
அரசியல் என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாகக் காணப்படும். உள்ளே சென்ற பின் எத்தனையோ பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனக்கு பதவி மீது ஆசை கிடையாது. வேறு கட்சிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டேன். தேர்தலில் எனது கட்சிக்கு பெரும் பான்மை மெஜாரிட்டி கிடைத்தாலும் முதல்வராகப் பதவி ஏற்க மாட்டேன்.
லொள்ளு பாண்டி: ஆஹா, என்ன பெருந்தன்மை !
அப்படியே பாராளுமன்ற தேர்தலில் உங்க கட்சி பெரும்பான்மை பெற்றாலும் பிரதமரா பதவி ஏற்க மாட்டேன்னும் சொல்லிட வேண்டியது தானே?எவன் கேள்வி கேக்கப்போறான்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு :
அப்படியே பாராளுமன்ற தேர்தலில் உங்க கட்சி பெரும்பான்மை பெற்றாலும் பிரதமரா பதவி ஏற்க மாட்டேன்னும் சொல்லிட வேண்டியது தானே?எவன் கேள்வி கேக்கப்போறான்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு :
நான் ஏதோ இந்த ஆட்சியில் மட்டும் தான் போராட்டம் நடத்துகிறேன் என்று யாரும் கருதக் கூடாது. அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து ஆண்டு காலமும் போராட்டம் நடத்தியுள்ளேன். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. தந்தை வேந்தராகவும், மகன் இணை வேந்தராகவும் வலம் வருகின்றனர்। இது ஜனநாயக நாடா?
லொள்ளூ பாண்டி:
அதானே! இது என்ன ஜனநாயக நாடா ?ஜனநாயக கட்சினாலாவது தலைவரு, கட்சியிலே உறுப்பினரா கூட இல்லாத மகனை ஒரே நாளிலே கொல்லைப்புற வழியா பாராளுமன்றம் அனுப்பி மந்திரி ஆக்கலாம். ஒரு பய கேக்க மாட்டான்.
அதானே! இது என்ன ஜனநாயக நாடா ?ஜனநாயக கட்சினாலாவது தலைவரு, கட்சியிலே உறுப்பினரா கூட இல்லாத மகனை ஒரே நாளிலே கொல்லைப்புற வழியா பாராளுமன்றம் அனுப்பி மந்திரி ஆக்கலாம். ஒரு பய கேக்க மாட்டான்.
முதல்வரின் பிறந்த நாள் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான்:
சில நட்சத்திரங்கள் ஆட்சிக்கு வர நினைக்கின்றன. ஆனால் உதயசூரியன் பிரகாசிக்கும் வரை நட்சத்திரங்கள் வருவதில்லை
லொள்ளூ பாண்டி: ஆமா, இல்லையா பின்னே. ஆனா இன்னொரு பாதியை சொல்லலியே நீங்க , சரி பரவாயில்லெ நானே முழுமை செய்றேன்.

"உதயசூரியன் பிரகாசிக்கும் வரை நட்சத்திரங்கள் வருவதில்லை அதே போல சந்திரன் பிரகாசித்தவரை உதயசூரியன் வரவும் இல்லை"
என்ன ஓகே வா?
என்ன ஓகே வா?
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் :
பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதோ, அதேபோலத்தான் 1998ம் ஆண்டு ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியது
லொள்ளூ பாண்டி: பாவம் சார் நீங்க , எவ்வளவு சின்சியரா இருக்கீங்க.. நாட்டுக்குள்ளே 2 மாநிலத்துக்கு இடையிலே பிரச்சினை என்றதும் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கெங்கெய்யோ அலைஞ்சி திரிஞ்சி இவ்வளவு காலம் செலவு பண்ணீ இந்த பைலை கண்டுபிடிச்சி இருக்கீங்கன்னா உங்களை பாராட்ட வார்த்தையே வரலை சார்.
நல்ல வேளை பா.ஜ.க ஜெயிச்சது, பைலும் கிடைச்சது.
ஒரு வேளை பா.ஜ.க தோத்து, காங்கிரஸ் ஜெயிச்சிருந்தா இன்னுமில்ல தேடிக்கிட்டு இருந்திருப்பீங்க.
தண்ணீருக்காக சண்டை போட விரும்பவில்லை-துரைமுருகன்
லொள்ளூ பாண்டி: ஆமா, ஆமா। இல்லியா பின்னே.
சண்டை போடுறதும், கூட்டணியிலே பங்கு கொள்ளாம வெளியிலிருந்து ஆதரவு என மிரட்டுறதும், இன்னும் இத்யாதி, இத்யாதி எல்லாமே பதவிக்காக மட்டும்தானே !
நடிகை மனோரமா பேச்சு :
முதல்வர் கருணாநிதிக்கு கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். யாருக்குமே கிடைக்காத அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருக்கு எப்படி இந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. அவரை மாதிரி நினைவாற்றல் உலகத்தில் வேறு யாருக்குமே இருக்க முடியாது. இந்த வயதிலும் எவ்வளவோ பிரச்னைகளுக்கு மத்தியில் நாட்டைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் நூறாண்டு வாழ்வார்.
லொள்ளூ பாண்டி: என்ன ஆச்சி , உங்களுக்கு என்ன ஆச்சு ? வார்த்தையெல்லாம் தடுமாறுது . சரி , நான் சரி பண்றேன்.
இந்த வயதிலும் நாட்டில் எவ்வளவோ பிரச்னைகளுக்கு மத்தியில் தன் வீட்டைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் . அவர் நூறாண்டு வாழ்வார்.
என்ன கரெக்டா சரி பண்ணிட்டேனா ?

தினமலர் செய்தி:
பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ், பா।ஜ।, கட்சிகளுக்கு எதிராக பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் சரத்குமார், கார்த்திக் கட்சி உட்பட ஒன்பது கட்சிகளுடன் "மெகா' கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இந்த புது கூட்டணியை உருவாக்கும் பணிகள் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன।
லொள்ளூ பாண்டி:
ஏன் மேடம் விஜயகாந்தை விட்டுட்டீங்க ?
ஓ, அவரையும் கூட்டணியிலே சேர்த்தா தினமும் உங்களையே ஊத்திக்கொடுக்க சொல்வாரோனு பயமா.
சரி , இருக்கட்டும் இருக்கட்டும் .
வியாழன், மே 08, 2008
வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்ப
| வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வியாழக்கிழமை, மே 8, 2008 | |
எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.
இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.
அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.
வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.
இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது। மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
--தனியொரு மனிதனுக்காக (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ), ஒரு நாட்டின் சட்டத்தையையே திருத்தும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் இனியாவது திருந்தினால் சரி.
சனி, ஏப்ரல் 26, 2008
இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை
எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு குடியானவனுக்கு இரு மனைவியர் இருந்தனராம். அந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாதாம்.
தான் எதையும் கணவருக்கு சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தைவிட, மற்றவள் மட்டமாக செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்।
தன்னைவிட அடுத்தவளைப்பற்றியே எப்போதும் சிந்தனை செய்துக்கொண்டிருப்பர்।
"அடியேய் ஏன்டி, இப்படி சாதத்தை கொழைச்சி வடிச்சிருக்கே? அவருக்கு ஒடம்புக்கு ஆகாதடி, விடியாமூஞ்சி" அப்படினு ஒருத்தி கேட்டா,
அடுத்தவள், "என் சாதம் நல்லா தாண்டியிருக்கு கூறுகெட்டவளே, நீதான் 2 வாரம் முன்னாடி சாதம் கொழைச்சி வடிச்சியிருந்தவ" என்று பதிலலிப்பாள்।
இப்படி புருஷனுக்கு நல்ல மாதிரி செய்யனும் என்பதைவிட மற்றவள் செய்தது மட்டமானதாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக வாழ்ந்து வந்தார்களாம்।
அது சரி எதுக்கு இந்த கதையினு கேக்கிறிங்களா?
காலையிலே News படிக்கும்போது ஏதோ ஞாபகம் வந்திச்சி, காரணம் தெரியல।

செவ்வாய், ஏப்ரல் 22, 2008
மாற்றப்பட வேண்டியது வார்த்தையை அல்ல, வாழ்க்கையை.
விழுப்புரத்தில் 'தாய் விழுதுகள்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற அரவாணிகளின் கலைப்பேரணி மற்றும் சங்கமம் கலை நிகழ்ச்சியில் பேசிய கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அரவாணிகளைப்பார்த்து, 'உங்களை நான் அரவாணிகள் என்று சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்।
அப்படியானால் அரவாணிகளை அரவாணிகள் என்று கூறுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலா? அது என்ன அவ்வளவு மட்டமான சொல்லா? அப்படியானால் அந்த சொல்லை மட்டும் மாற்றி விட்டால் மட்டும் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடுமா?
பிரச்சினை பெயரில் இல்லை। அவர்கள் வாழ்க்கை நிலையில் இருக்கிறது। அந்த நிலைமையை சரிசெய்ய, அவர்களை சமூகத்தின் மற்ற இரு பாலர்களுக்கும் (ஆண்,பெண்) சமமான தரத்துடன் சமுதாயத்தில் வாழ வழி செய்ய சிந்திக்க வேண்டுமேயன்றி, அவர்களைச்சுட்டும் வார்த்தைகளை மாற்றி பயனில்லை।
இல்லாவிட்டால் பல்லாண்டுகாலமாய் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைவேலை செய்ய வைக்கப்பட்டு வந்ததொரு வர்க்கத்தின் கொச்சையான பெயர், கடவுளின் குழந்தைகள் என்ற அர்த்தத்தில் 'ஹரிஜன்' என்று மகாத்மாவினால் மாற்றப்பட்டும், பின் 'தாழ்த்தப்பட்டோர்', 'அட்டவணை இனத்தவர்' என்று பல்வேறு கட்டங்களில் மாறியும் வந்து இன்று 'தலித்' என்று பெயர் தாங்கி நிற்கிறது என்றாலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் என்னமோ அப்படியேதான் இருக்கிறது। இன்றும் இரட்டைக்குவளை டீ கடை கிராமங்கள் இருக்கின்றன்।
ஆதலால் பிரச்சினை பெயரில் இல்லை, அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு தரும் நம் செயலில் இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)