இன்று ஒரு குறள் !

விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 04, 2012

தன்னிகரற்ற ஜெயா மாமியும் தகுதியற்ற சின்ன கவுண்டரும் என் எண்ணங்களும்



எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக சரியாக செயல்படவில்லை என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க அதை தவறு என்று சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு சரியான எதிர்கட்சியாய்  தன் கட்சியை காட்ட முயற்சித்து  எதிரி கட்சியாய் ஆக்கி விட்டுருக்கிறார் அதன் தலைவர் விஜயகாந்த்.

தொலைக்காட்சிகளிலும் , யூ ட்யூபிலும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போல சட்டசபை காட்சிகள் காட்ட்ப்படுகிறது. அதை நன்கு கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும் இச்சம்பவத்தின் முழு்மைக்கும் விஜயகாந்த் மட்டுமே பொறுப்பு அல்ல என்று.

தன் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பேச,  அதில்  ஆளுங்கட்சியினர்  குறுக்கிட்டுக் கொண்டே  இருக்க, அதனால் தானே எழுந்து பதில் பேச, ஜெயலலிதா எழுந்து அதை மறுத்து பேச, பிறகு இருவருக்கும் நேரடியாக  விவாதம் எழ,  சவால்களை இரு தரப்பும் பறிமாறிக்கொள்ள, பிறகு சபாநாயகர் தலையிட்டு அமைதி படுத்தி அனைவரையும் அமர வைக்கிறார். (இதுவரைக்கும் நல்லாதானேய்யா போய்ட்டிருந்தது)


பின் சில வினாடிகளில் விஜயகாந்த் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார்.  படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து  நாக்கை மடித்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது.

இந்த காட்சியை பார்த்து விஜயகாந்த் தான் 'நிதானம்' இல்லாமல், சட்டசபை கண்ணியம் கருதாமல், எதிர்கட்சித் தலைவருக்குரிய  தகுதியை அறியாமல், மன நிலை பிறழ்ந்தவன் போல நடந்து கொண்டார் என கருதுவீர்களானால் நிச்சயம் நீங்கள் அம்புலிமாமா வை மட்டுமே படித்து புரிந்து கொள்ளும் மன நிலையிலேயே இன்னமும் இருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

விஜயகாந்த் ஆவேசமாய் எழுந்ததற்கு காரணமாய் ஆளுங்கட்சி பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை காட்டாமல் மறைத்து விட்டார்கள். நியாயம் தானே, இது அவர்கள் படமாயிற்றே. தயாரிப்பும் டைரக்‌ஷனும் அவர்களேதானே.

அவர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றிய பின் பேசிய ஜெயலலிதா 'வெட்கப்பட்டிருகிறார்' (அட நம்புக்கப்பா அவருக்கும் அதெல்லாம் வரும்)

தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாக அவரே கூறியிருக்கிறார் (வேற எதுக்காவோன்னு் நீங்க வேற எதையாவது ஒண்ண நினைச்சா அது உங்க தப்பு)

பிறகு விஜயகாந்துக்கு என்ன தண்டனை தர வேண்டும் என்று சபாநாயகருக்கு கோடிட்டு காட்டுகிறார்.

அடுத்து விஜயகாந்தின் தகுதி பற்றி பேசியிருக்கிறார். எப்படியென்றால், தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்களாம்.

(எந்தவித முகாந்திரமும் இல்லாத, பொய்யாக முனையப்பட்ட ஒரு வழக்கை காட்டி எதிர்கட்சி தலைவரை வயதானவர் என்று கூட பார்க்காமல் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்தது  பற்றி உங்களுக்கு நினைப்பு வந்தால் அது ஜெவின் தவறு அல்ல)



அதிமுக வை எப்படியும் ஆட்சியிலே உட்கார வச்சே தீரணும்னு மக்கள் தீர்மானிச்சி வாக்களித்தபோது இவர்களும் வந்து ஓட்டிக்கொண்டதாலே சட்டசபைக்குள் இவர்களால் வர முடிந்தது என்றும் பேசியிருக்கிறார்

இதில் புரியாத விஷயம் என்னவென்றால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு யாராவது ஒரு தனி மனிதர் உரிமை கோர முடியுமா அப்படியே ஒரு கட்சி தான் கோரமுடியும் என்று வைத்துக் கொண்டாலும் கூட  அந்த தகுதி திமுகவிற்கு தவிர வேற எதற்குமில்லை.

ஏனெனில் மக்கள் திமுக ஆட்சி போக வேண்டும் என்று எதிர்பார்த்தார்களே அன்றி அதிமுகவே ஆட்சிக்கு வரவேண்டும் என ஏங்கி கிடக்கவில்லை. என்ன செய்வது  நமக்கு தான் அதை விட்டா இது, இதை விட்டா அது  என்பதை தவிர வேற தேர்வு எதுவுமே இல்லையே.

அடுத்து இவர் தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என  விஜயகாந்தை பற்றி கூறியிருக்கிறார்

அதுசரி... எதை இவர் தகுதி என்கிறார்???
எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னால் அதிமுகவின் தலைவியாக ஜெயலலிதா வந்தவுடன் கலைஞரும் இதை தான் வேறு மாதிரியாக சொன்னார், நான் பெரிய பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்திருக்கிறேன் என் நிலைமை இவ்ரோடு எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது என்று.

அதை அப்போது ஜெயலலிதா ஒத்துக்கொண்டு அரசியலை விட்டே விலகி விட்டாரா. தான் வளர்ந்த பிறகு புதியவர்களை பார்த்து இப்படி சொல்லி சிறுமைப்படுத்துவதே அரசியல்வாதிகளின் வேலையாக போய்விட்டது

ஒருவரின் தகுதியை தீர்மானிப்பது யார் இவர்களா இல்லை மக்களா???

ஆனால் ஒண்ணு அம்மாவைப் பார்த்து  திமுகவினர் உட்பட எ்ல்லோருமே  பம்மிக்கிட்டு போகும் போது  விஜயகாந்த் தைரியமாய் பல பேருக்கு எதிரிலேயே அம்மாவுக்கு சவாலுக்கு சவால் விட்டு எகிறுனாரே அதுவே ஒரு தகுதி தான்.

கேப்டன் உங்க வீரம் எனக்கு புடிச்சிருக்கு.


செவ்வாய், செப்டம்பர் 23, 2008

விஜயகாந்த்+வடிவேல் லடாய் - சில சந்தேகங்களும், கேள்விகளும்

கடந்த சில நாட்களாக நடந்து வரும் விஜயகாந்த்- வடிவேல் லடாய் அனைவரும் அறிந்ததே.

இது சம்மந்தமாக கருத்துக்கள் பல மீடியாக்களில் (இணைய பதிவுகள் உட்பட) வந்த வண்ணம் உள்ளனர். இதிலே நம் கருத்தையும் சொல்லாட்டி எப்படினு ஆரம்பிச்சி பிரச்சினையை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் நிறைய ஏன்? ஏன்? ஏன்? கள் தான்.

சரி கேள்விகளை நமக்குள்ளே வச்சிக்கிட்டு தலையை பிச்சிக்கிறதை விட சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுடலாமே . பதிலை அவங்க சொன்னாலும் சரி இல்லை அவங்க சார்பாக அவங்களோட அனுதாபிகள் சொன்னாலும் சரி

வடிவேல் வீட்டைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்குறியவர்கள் மட்டுமின்றி சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

ஆனால் நடந்த சம்பவத்திற்கு பின் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள், அறிக்கைகள் இவற்றில் பல விஷயங்கள் புரியவில்லை. அதனால் தான் இந்த புதசெவி பதிவு ! ( நண்பர் TBCD மன்னிப்பாராக).



முத‌லில் வ‌டிவேலிட‌ம் சில‌ கேள்விகள்


1. தங்கள் வீட்டை சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கி சேதப்படுத்தியது என்பதை பார்த்த நீங்கள் அது எப்படி நிச்சயமாக விஜயகாந்த் தூண்டுதல் பேரிலேயே வந்தவர்கள் அவர்கள் என்பதை தீர்மானித்தீர்கள்?

2. அவர்கள், ”முதல்வராக வரப்போகும் என் தலைவனிடம் மோதாதேஎன்று கூறியபடியே தாக்கினார்கள் என்பதால், அது விஜயகாந்த் அனுப்பிய படைதான் எனத் தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறிய நீங்கள்,அந்த கும்பல்கலைஞர் வாழ்கஎன்று சொல்லியிருந்தால் கலைஞரின் கூலிப்படையென்றோ, ”புரட்சித்தலைவி வாழ்கஎன்றிருந்தால் ஜெயலலிதாவின் கூலிப்படை என்றோ கூறியிருப்பீர்களா?

அது என்ன லாஜிக் ?
வந்தவர்கள் தாங்கள் யார் என்று தாங்களே வாக்குமூலம் கொடுப்பார்களா?

3.விஜயகாந்தை தவிர இந்த உலகத்தில் வேறு எதிரிகள் யாருமே உங்களுக்கு கிடையாது என்கிறீர்கள். நல்லது.
ஆனால் பிறகு ஏன் நடிகை ஸ்ரேயா உங்களோடு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அஜித் தன் படத்திலிருந்து அவரை நீக்கினார்?

இங்கு அஜீத்தின் பிரச்சினை ஸ்ரேயாவின் குத்தாட்டமா இல்லை உங்களோடு அவர் நடித்ததா?

தவிர ,உங்களால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ துணை காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர்கூட துணிந்து உங்களைப்பற்றி குறை கூறி பேட்டி கூட கொடுத்தார்கள்.
அதற்காக அவர்கள்தான் கூலிப்படை அனுப்பினார்கள் என்று உங்களைப்போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ பாணியில் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு விஜயகாந்தை தவிர இன்னும் பல எதிரிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்பதே இங்கே கேள்வி.

4. உங்கள் கருத்துப்படியே விஜயகாந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அவரை ஒழிப்பதற்காக தேர்தலில் எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளீர்களே தண்டனை விஜயகாந்துக்கா? இல்லை அந்த தொகுதி மக்களுக்கா?

மற்றவர்கள் உண்மையிலே மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொல்லவாவது செய்கிறார்கள்.

நீங்கள் மட்டும்தான் தனியொரு மனிதனை எதிர்ப்பதற்காக தேர்தலில் நிக்கப்போவதாக சொன்னது மட்டுமல்லாமல் இன்று விடுத்த அறிக்கையில் கட்சியே ஆரம்பிக்க போவதாக சொல்லியிருக்கிறீர்கள் இது நியாயமா?

அதற்கு பதில் ஏன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் எதிரிலியே நீங்கள் ஒரு மண்டபம் கட்டி அவ்ரின் வருமானத்தை குறைக்க கூடாது?

இல்லை அவர் படம் ரிலீஸ் அன்று நீங்கள் கதாநாயகனாய் நடித்த படத்தை ரிலீஸ் செய்து வசூலில்அவருக்கு பாடம் புகட்ட கூடாது ?

இல்லை அரசியலில் தான் அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், தேர்தல் சமயம் அவர் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களிலே சிறந்தவர் என தாங்கள் தீர்மானிக்கும் ஒருவருக்கு இலவசமாக பணிகள் மற்றும் பிரசராம் செய்து விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்க கூடாது?

5. உங்களை யாரும் தூண்டிவிடவில்லை என்று சொன்னீர்கள் சரி! அது எப்படிஇந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது”. என்று எதை வைத்து இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினீர்கள்?

கொஞ்சம் உதைக்கிறதே!




அடுத்து விஜ‌ய‌காந்திட‌ம் சில கேள்விகள்

1. வடிவேல் வீட்டைஎன் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயாஎன்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கிய அந்த கும்பல் தங்கள் கட்சியினர் அல்ல என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

இது சம்பந்தமாக தங்கள் கட்சியினரிடம் விசாரணை நடத்தினீர்களா ?


2. அந்த கும்பல் தங்களால் ஏவி விடப்படவில்லை என்று உறுதி பட மறுத்திருக்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களே ஆர்வமிகுதியால் ஏன் அப்படி செய்திருக்க கூடாது?
உங்கள் வக்கீல் உங்களை கேட்காமலே முன் ஜாமின் மனு தாக்கல் செய்துவிட்டார் என்று உங்கள் தரப்பு சொன்னது போல்.

3. சரி எப்படியோ விசாரணை செய்தவரையில் உங்கள் கட்சிக்கும் அந்த வன்முறை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று உறுதிபட கண்டு கொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் எதை வைத்து கலைஞர் தான் படை அனுப்பினார் என்றும் வடிவேலுவை பின்னிருந்து இயக்குகிறார் என்றும் சொன்னீர்கள்?

இதுவும் அதே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ கதைதானே!

4. அதேபோல் வடிவேல் உங்களை எதிர்த்து தேர்தலில் நிக்கப்போவதாக அறிவிக்க அதற்கு பதில் சொல்லும் விதமாக கலைஞரே எதிர்த்து நின்றாலும் பயப்பட மாட்டேன் என்று எதற்கு இதற்குள் அவரை இழுக்கிறீர்கள்?

5. வன்முறையால் பாதிக்கப்பட்டவர், தாக்கிய வன்முறை கும்பலை ஏவிவிட்டவர் நீங்கள்தான் என்று காவல் நிலையத்தில் ஆணித்தரமாக புகார் தந்ததால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ”கலைஞர் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார்என்று இதையும் அரசியல் ஆக்கலாமா?
இது நியாயம் தானா?



இறுதியாக சில பொதுக்கேள்வி
கள்

1.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?

2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?

இன்னும் பல ஏன்?கள் மிச்சமிருப்பினும், இப்போதுக்கு இது போதும். பதில் கண்டு பிற!