இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஜனவரி 15, 2012

முல்லை பெரியாறும், தடம் மாறிய தமிழனின் இயல்பும்

முன்குறிப்பு :

நேரமின்மையின் காரணமாக வலைப்பக்கம் அடிக்கடி வர இயல்வதில்லை இப்படி் எப்பொழுதாவது கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஏதேனும் மனதில் பட்டதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
[ மனசாட்சி : ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இவர் என்ன நினைக்கிறார்னு தான் உலகமே பார்த்திட்டிருக்கு செரங்கு புடிச்சவன் கையி சொறியாம இருக்குமா அது போல வெரல் அரிப்பு தாங்க முடியாம கீ போர்ட் தட்ட வந்திட்டு பில்டப் கொடுக்கிறத பாரூ.... ]


பெரியாறும், தடம் மாறிய தமிழனின் இயல்பும்




கடந்த ஆண்டு முடியும் தருவாயில் என்னை வியக்க வைத்த விஷயம், முல்லை பெரியாறு பிரச்சினைக்காக பொது மக்கள் தாங்களாகவே போராட்டத்தில் குதித்தது.

பொதுவாக இந்த மாதிரி அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு போன்ற பிரச்சினைகளின் போது, அரசியல் கட்சிகள்தான் போராட்டங்கள் நடத்துமே அன்றி பொது மக்கள்களி்ன் கவனமெல்லாம் அவரவர்களின் அன்றாட வேலைகளிலேயே இருக்கும்

அப்படி பட்ட அவர்களே களத்தில் நேரடியாக இறங்குகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அரசியல்வாதிகளிடம் அரசுகளிடமும் நம்பிக்கை இழந்து இருப்பார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.

ஏற்கனவே தனித் தமிழ்நாடு, தமிழ் தேசியம் என்று பிரிவினை வாதம் பரவலாக பேசப்பட்டு வரும் கால நிலையில், பொது மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் மீதே நம்பிக்கை இழப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. மண்ணு மோகன் அரசு முழித்து கொண்டால் சரி.

வழமை போலவே அப்பாவி தமிழ் மக்கள் அண்டை மண்ணில் தாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த முறை தாக்கிய இடம் கேரளா, தாக்கியவர்கள் மலையாளிகள். தாக்குதலுக்கான காரணம் முல்லை பெரியாறு .

[ கர்நாடகத்தினர் தங்கள் முறை எப்போது என்று காத்துக் கொண்டிருப்பதாக கேள்வி :( ]

ஆனால் பதிலுக்கு வழமையை மீறியதாய் இந்த முறை தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.



உம்மன்சாண்டியோ உம்முன்னு உறுமியிருகிறார்

தமிழ் நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுவதை எதிர் பார்க்க வில்லையாம்.

தமிழன் எப்பவுமே குட்டை வாங்கிகிட்டே இருப்பானுங்கன்னு அவருக்கு நெனப்பு போல...

எப்படி அப்பாவி தமிழர்கள் அடி வாங்குவதில் உடன்பாடு இல்லையோ அதேபோல் அப்பாவி மலையாளிகள் அடி வாங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அடிக்க வேண்டுமானால் இதை வைத்து அரசியல் செய்யும் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, ஜார்ஜ் குரியன் பொன்றவர்களை அடிக்கலாம் இங்கு பிழைப்புக்கு வந்திருக்கும் டீக்கடை நாயர் என்ன செய்வார்.

 அங்கு பிழைப்புக்கு போன குப்பனையும் சுப்பனையும் அடித்தவர்கள் கேரளா அரசியல் ரவுடிகள். அதற்கு எதிர் வினையாக இங்கு நாயரை அடித்தவர்கள் சில அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் என்று பத்திரிக்கையில் வந்தது.



ஆனால் இதை இப்படியே கண்டும் காணாமல் மத்திய அரசு விடுமே என்றால் நேரடியாகவே குப்பனும் நாயரும் நீயா நானா என்று மோதிக்கொள்ளும் சூழல் எழும் அபாயம் உண்டு

அதன் பிறகு இந்திய ஒருமைப்பாடு கிழிந்த கோவணம்தான்

இப்போதாவது மண்ணு மோகன் அரசு முழித்து கொள்ளுமா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல் படுத்த கேரளாவை வற்புறுத்துமா ?இல்லை ஓட்டுக்காக ஒருமைபாட்டையே அடகு வைக்குமா?

குனிந்திருந்த தமிழன் நிமிர தொடங்கி விட்டான் ஜாக்கிரதை!





தமிழர் திருநாள் வாழ்த்துகள்










அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் !